493. விடுங்கை
Learn The Song
Know The Ragam Sankarabharanam
Paraphrase
All wealth, knowledge and accomplishments become meaningless and worthless when Yama hovers over us. Saint Arunagirinathar prays that the Lord give him either divine communion at the time of death or True Knowledge while he is still alive.
நாம் பெறவேண்டிய நிலை இரண்டு தான்! மனம் இறந்து நிர்விகல்ப சமாதி நிலை அடையவேண்டும்; (எல்லாம் அற என்னை இழந்த நலம் ) அல்லது, (உலகில்) சகல நிலையில் இருந்து உய்யும்படிக்கு ஞானம் (நல்ல புத்தியைப்) பெறவேண்டும். இரண்டும் முருகன் அருளால்தான் வரும்.
விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம் அடங்கிக் (vidum kaikku oththa kadA udaiyAn idam adangik) : Becoming helpless in the hands of the God of Death (Yaman) who mounts the wild buffalo that is easy to manoeuvre , ஏறி நடத்துவதற்கு ஏற்ற எருமைக் கடாவை வாகனமாக உடைய யமன் வசத்தில் அடங்கி,
கைச் சிறையான அநேகமும் அறல் ஓதியர் விழியாலே அறவே விழுங்கப்பட்டு ( kai chiRaiyAna anEkamumaRa lOthiyar vizhiyAlE aRavEy vizhungkap pattu) : all the riches and belongings in my hand have already been devoured completely by the eyes of those whores, with hair dark as the black sand; கை வசத்திலிருந்த செல்வமும் பல பொருள்களும் கருமணலைப் போல் கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் முற்றிலுமாக கவரப்பட்டு, அறல் (aRal) : black sand, கருமணல்; ஓதி(Othi) : கூந்தல்;
விரும்பத் தக்கன போகமும் மோகமும் (virumbath thakkana bOgamu mOgamum) : all the luxuries and desires worth fulfilling, விரும்பி அடையத் தக்கனவான சுக போகங்களும், ஆசைகளும்,
விளம்பத் தக்கன ஞானமும் மானமும் (viLambath thakkana njAnamu mAnamum) : and all the knowledge and fame worth mentioning சொல்லத் தக்கனவான அறிவும், பெருமையும்,
வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர் விடும் நாளில் (veRum suththa chalamAy veLiyAy uyir vidum nALil) : would become mere illusion and depart from me; on that day, when life is about to leave from this body, முழுப் பொய்யாகி அகல, உடலை விட்டு ஆவி வெளிப்பட்டுப் போகின்ற அந்த நாளில், சலம் (chalam) : falsehood, deception, பொய், மாயை;
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல் (idum kattaikku iraiyAy adiyEn udal) : and when my body is about to be consumed by burning logs heaped up at the cremation ground, (சுடு காட்டில்) அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு உணவாகி அடியேனுடைய இவ்வுடல்
கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என (kidanthittuth thamar Anavar kO ena) : when all the relatives wail, looking at my body laid on the funeral pyre, கிடக்கும்போது சுற்றத்தார்கள் கோ என்று ஓலமிட்டுக் கதற,
இடம் கட்டி சுடு காடு புகா முனம் (idam kattic chudu kAdu pugA munam) : and before I am bound by ropes to the wooden coffin on my final march to the cremation ground, கிடக்கும் இடத்தில் (பாடையில்) கட்டப்பட்டு சுடுகாட்டுக்குப் போவதற்கு முன்னே,
மனதாலே இறந்திட்டுப் பெறவே கதியாயினும் (manathAlE iRanthittup peRavE gathi Ayinum) : either let me merge with You, reaching a state of intense contemplation and salvation, என் மனதால் (உன்னுடன் இரண்டறக் கலந்து) சமாதி நிலையை அடைந்திட்டு நற்கதியைப் பெறவாவது, மனதாலே இறந்திட்டு - மனோலயம் உற்று;
இருந்திட்டுப் பெறவே மதியாயினும் (irunthittup peRavE mathi Ayinum) : or grant me enough intellect to obtain True Knowledge while I am still living in this world; (அல்லது) இந்த உலகில் இருக்கும்போதே நல்ல அறிவைப் பெறவாவது,
இரண்டில் தக்கது ஒரு ஊதியம் நீ தர இசைவாயே (iraNdil thakkathu Or Uthiyam nee thara isaivAyE) : kindly agree to grant me the boon, choosing any one of the above two alternatives as You deem appropriate for me! மேற் சொன்ன இரண்டில் எனக்குத் தகுந்ததான பயனை நீயே தீர்மானித்து, அதைக் கொடுக்க மனம் பொருந்துவாயாக.
சீதையைத் தேடி வரும் இராம லக்ஷ்மணர்கள் அனுமனைக் கண்டபின் சுக்கிரீவனை அடைந்து அவனோடு நட்புக் கொள்கிறார்கள். வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குத் தாரமும் அரசும் பெற்றுத் தருவதாக ராமன் உறுதி யளித்த போதிலும் சுக்கிரீவனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஏனென்றால் வாலி அவ்வளவு பலமுடையவன். தேவர்களும் அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது கைசோர்ந்து களைத்துப் போகிறார்கள் அவர்கள் எல்லோரையும் விலகி யிருக்கச் சொல்லி விட்டுத் தனி யொருவனாகவே திருப்பாற் கடலைக் கடைந்தவன் வாலி. சுக்கிரீவனுடைய சந்தேகத்தைப் போக்குவதற்காக மராமரம் ஏழையும் ஒரே அம்பால் தொளைக்கிறான் ராமன்
கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க (kodum kaip patta marA maram Ezhudan nadunga) : Making the marAmara trees with long branches tremble by flinging His arrow upon them; நீண்ட கிளைகளை உடைய ஏழு மராமரங்களை அவற்றின் உடல்கள் நடுங்கும்படியாக அம்பை விட்டும்,
சுக்ரிவனோடு அமர் ஆடிய குரங்கைச் செற்று (sugrivanOdu amarAdiya kurangai setRu) : fighting and killing VAli, the monkey who wrestled with Sugreevan; சுக்ரீவனுடன் போர் புரிந்த குரங்காகிய வாலியை அழித்தும்,
மகா உததி தூள் எழ (magA uthathi thUL ezha) : forcing the big ocean to raise a dust storm; பெரிய கடலில் தூசி கிளம்பும்படி,
நிருதேசன் குலம் கண் பட்ட நிசாசரர் கோ என (niruthEsan kulam kaN patta nisAsarar kOvena) : driving all the demons belonging to Ravana's clan to shriek in terror; அரக்கர் தலைவனுடைய குலத்தைச் சார்ந்த அரக்கர்கள் எல்லாம் "கோ" என்று அச்சமுற்று ஒலியிட
இலங்கைக்குள் தழலோன் எழ (ilangaikkuL tazhalOn ezha) : and engulfing the whole country of LankA by Fire God; இலங்கை நகருள் அக்கினி பகவான் எழுந்து தீப்பற்றி எரியச் செய்ய,
நீடிய குமண்டைக் குத்திர ராவணனார் முடி அடியோடே பிடுங்க (neediya kumaNdaik kuththira rAvaNa nArmudi adiyOdE pidunga:) : and knocking down the ten heads of the treacherous demon, RAvaNan, haughty due to his huge wealth, அரக்கர் தலைவன் ராவணனுடைய செல்வம் மேலீட்டால் செருக்குண்ட, வஞ்சகம் நிறைந்த இராவணனனுடைய தலைகள் பத்தும் அடியோடு அறுபட்டு விழும்படியாக குமண்டை (kumandai) : செல்வ மேலீட்டால் வரும் செருக்கு; குத்திரம் (kuththiram) : smallness, littleness, cruelty, trickery, சிறுமை;
தொட்ட சர அதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா (thotta sara athipanAr athi priyam koL takka nal mA marugA) : by wielding His arrow; that great hero, Rama, is extremely fond of You, His renowned nephew! செலுத்திய அம்பைக் கொண்ட நாயகனாம் இராமன் மிகுந்த அன்பு கொள்வதற்குத் தகுந்த, நன்கு சிறந்த மருகனே,
இயல் ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என (iyal prapanjaththukku oru pAvalanAr ena) : You are the unique poet of this world, இந்த உலகத்துக்கு ஒப்பற்ற கவி அரசர் என்று
விருது ஊதும் ப்ரசண்டச் சொல் சிவ வேத சிகாமணி (viruthu Uthum prasaNdac sol siva vEtha sigAmaNi) : You are the great Saivite ThirugnAna Sambandhar who wears the Vedic jewel on his crown and in whose praise triumphant trumpets are blown for having composed several ThEvAram hymns with well-chosen words of gallantry; ஒப்பற்ற கவிராஜன் என வெற்றிச் சின்னங்கள் ஊதும் வீரம் வாய்ந்த பதிகங்களை ஒதிய சிவவேத சிகாமணியாகிய (சம்பந்த) மூர்த்தியே!
ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ (prapanthaththukku oru nAtha sathAsiva) : the matchless hero for composing various scholastic texts, forever auspicious! நூல் வகைகளுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனே, என்றும் மங்களகரமானவனே,
பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே.(perumpatRap puliyUr thanil mEviya perumALE.:) : You reside with relish in Perum PatRap Puliyur (Chidhambaram), Oh Great One! பெரும்பற்றப் புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
Nice one!!!
ReplyDelete