494. அகரமுமாகி

ராகம்: சிந்துபைரவி/பூர்வி கல்யாணி தாளம்: மிஸ்ரசாபு 2 + 1½ (3½)
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகிஅகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகிஅவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகிவருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடிவரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும்வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காமமுடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.

Learn The Song


agaramumAgi in Sindhubairavi

agaramumAgi in Poorvi kalyani Upload Music - Music podcasts -

Paraphrase

Murugan is eternal, primordial, omniscient and omnipotent;

அகரமும் ஆகி( agaramum Agi): Just as "a" is the foremost letter in all languages, You are the foremost object, எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி;

அதிபனும் ஆகி (adhibanum Agi): the commander of all; எல்லாவற்றிற்கும் தலைவனாகி;

அதிகமும் ஆகி (adhigamum Agi): paramount and transcendent; எல்லோருக்கும் மேம்பட்டவனாகி;

அகமாகி (agam Agi): the in-dwelling Self of all யாவர்க்கும் உள்ள யான் என்னும் பொருளாகி

அயன் எனவாகி ( ayan enavAgi): You are BrahmA, the Creator, பிரமன் என்னும் படைப்பவன் ஆகி

அரி எனவாகி (ari enavAgi): Vishnu, the Protector, திருமால் என்னும் காப்பவன் ஆகி

அரன் எனவாகி (aran ena vAgi): SivA, the Destroyer, சிவன் என்னும் அழிப்பவனாகி

அவர் மேலாய் (avar mElAy): and also transcend the above Trinity அம் மூவருக்கும் மேலான பொருளாகி

இகரமும் ஆகி (igaramum Agi): You constitute all the things in this World, இங்குள்ள பொருட்கள் யாவுமாகி, இகரம்(igaram): இ-கரம்— அண்மையில் இருப்பதாகிய அனைத்தும்;

எவைகளும் ஆகி( evaigaLum Agi): and all the things that are in whichever world; எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி

இனிமையும் ஆகி வருவோனே(inimaiyum Agi varuvOnE): You imbibe all the sweetness in the world and come to me. இனிமை தரும் பொருளாகி வருபவனே

இருனில மீதில் எளியனும் வாழ (irunila meedhil eLiyanum vAzha): In this vast world, in order that this humble self may also survive, இந்த பெரிய பூமியில் எளியவனாகிய இந்த அடியேனும் வாழ, இருநிலம்(iru nilam): பெரிய நிலம்—பூமி;

எனது முன் ஓடி வர வேணும் (enathu mun Odi vara vENum): You must come running towards me. எனதுமுன் ஓடி வரவேணும்

மகபதி ஆகி ( magapathi Agi): The Deity presiding over all sacrificial rites யாகங்களுக்குத் தலைவனாக, மகபதி(magapathi): மகம்—யாகம்; நூறு அசுவமேதங்களைச் செய்து இந்திர பதவி அடைந்ததால் யாகங்களின் தலைவன்;

மருவும் வலாரி (maruvum valAri): is IndrA, the enemy of Valasura விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)

மகிழ் களி கூரும் வடிவோனே ( magizh kaLi kUrum vadivOnE): becomes immensely pleased to look at Your lovely figure. மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும் அழகிய வடிவம் கொண்டவனே

வனமுறை வேடன் (vanamuRai vEdan): The hunter (AnthimAn) who lived in the forest,

காட்டில் வசித்த வேடன் (அந்திமான்) அந்திமான் என்னும் கதிர்காமத் தலத்து வேடன்.
முருகன் தன் வேலைப் பாராட்ட, ‘அந்த வேலுக்குப் பெருமையே என்னால்தான்’ என்று அருகிலிருந்த பிரமன் பெருமை பேசினான். முருகனுடைய சாபத்துக்கு ஆளான பிரமன் ‘அந்திமான்’ என்ற பெயருள்ள வேடனாகப் பிறந்தான். அதன்பிறகு ஒருமுறை பிப்பலாத முனிவரைக் கொல்ல முயலும்போது, அவருடைய அருளால் ஞானம் கைவரப்பெற்றான்; அதன்பிறகு கிருத்திகை விரதம் இருந்து முருகனைப் பூசித்து ஆறெழுத்தை ஓதி வேடத்தன்மை நீங்கினான். அரிச்சந்திரன், அந்திமான், சந்திமான் ஆகியோர் இவ்விரதத்தை அனுட்டித்துச் சித்திகள் அடைந்ததாக வரலாறு கூறுகின்றது. (அந்திமான், சந்திமான் இடை ஏழு வள்ளல்களில் இருவர்.)
;
Once Murugan praised the valour of His spear or 'vel'. BrahmA claimed the credit for the valour of 'vel', which infuriated Murugan and He cursed Brahma to be born as a hunter in the jungles near KathirkAmam, now in Sri LankA. The hunter AndhimAn savagely pursues to kill Sage PippalAtha, son of Sage Dadhichi, who realises that the hunter is none other than BrahmA and advises him to do penance on Krithigai day offering his prayer to KathirkAman who is in the form of VEL (spear). The hunter's pUja is accepted by MurugA who makes him a King who ultimately obtains salvation.

அருளிய பூஜை மகிழ் (aruLiya pUjai magizh): offered worship which You gladly accepted at செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற

கதிர்காமம் உடையோனே (kadhir kAmam udaiyOnE): KadhirgAmam, Your favourite place. கதிர்காமம் (உன் பதியாக) உடையவனே

ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி என ஆடு மயிலோனே (jegagaNa jEgu thagu dhimi thOdhi dhimi ena Adu mayilOnE): Your Peacock dances On the beats of jegagaNa....thimi!

திருமலிவான பழமுதிர்ச்சோலை (thirumali vAna pazhamuthir sOlai): Pazhamudhir chOlai, where wealth is plentiful, லக்ஷ்மிகரம் நிறைந்த பழமுதிர்ச்சோலை

மலை மிசை மேவு பெருமாளே (malai misai mEvu perumALE.): the mountain there is Your favourite, You Great One! மலையின் மீது வீற்றிருக்கும் பெருமாளே.

No comments:

Post a Comment

சீசி முப்புரக் காடு — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song cheechi muppura ( சீசி முப்புர ) in English, click the underlined hyperlink....

Popular Posts