49. மூளும் வினை
ராகம் : சங்கரானந்தப்ரியா அங்க தாளம் (1½ + 2½ + 2½ + 2½) மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில் மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி யதிபார மோகநினை வான போகஞ்செய் வேனண்டர் தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற துளதாகி நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட வாசியன லூடு போயொன்றி வானிங்க ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப அமுதூறல் நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே