49. மூளும் வினை
Learn the Song
Paraphrase
மூளும் வினை சேர மேல் கொண்டிடா ஐந்து பூத வெகுவாய மாயங்கள் தான் நெஞ்சில் மூடி ( mULum vinai sEra mEl koNdidA ainthu bUtha veguvAya mAyangaL thAn nenjil
mUdi) : Past karmas accumulate and along with the illusions arising out of the five elements – earth, fire, water, wind and sky – give rise to many illusions that dwell in my heart;
(மனம் வாக்கு காயத்தால் நம் மும்மலங்கள் செயல்பட்டு மேலும் மேலும் தீயைப் போல்) பெருகும் பண்டை வினைகள் ஒருங்கே வந்து சேர, அதனால் உயர்ந்து எழும்பிய மண் புனல் அனல் காற்று விண் என்ற ஐம்பெரும் பூதங்களின் பற்பலவிதமான மாயங்கள் அடியேனது உளத்தில் வந்து நன்கு ஸ்திரப்பட்டு,
நெறி ஏதும் செய்யா வஞ்சி அதி பார மோக நினைவான போகம் செய்வேன் (neRi neethi yEthum seyA vanji athi bAra mOga ninaivAna bogam seyvEn) : (as a result of which) I did not practice the right conduct and behavior but lusted after and enjoyed the heavy breasts of creeper like slender-waisted women
பத்தி நெறிக்குரிய அறச் செயல் ஒன்றேனும் செய்யாமல், வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய பெண்களின் காதலால் மிகுந்த மோக பாரத்தைத் தாங்கி, அசுத்த போகத்தை நுகருகிற நான்,
அண்டர் தேட அரிதாய ஞேயங்களாய் நின்ற (aNdar thEda arithAya njEyangaLAy ninRa: ) : It is something which is hard to reach even for the celestials and can be perceived only through insight into inner feelings (jnana); தேவர்களும் தேடித் தெரிந்துகொள்வதற்கு அரிய பொருளாகிய, மெய்யுணர்வினால் ஆராய்ந்து அறியப்படுகின்றவையாக விளங்கும், ஞேயம் – அறியப்படும் பொருள்; இறைவன்; ஞாதுரு, ஞானம், ஞேயம் என்ற ஒன்றோடொன்று இணைந்த சொற்களில் ஞாதுரு = காண்பவன் => ஆன்மா / சீவன்; ஞானம் = பெறும் அறிவு => சிவ ஞானம்; ஞேயம் = காணப்படும் பொருள் => சிவம்.
மூல பர யோகம் மேல் கொண்டிடா நின்றது உளதாகி (mUlapara yOga mEl koNdidA ninRaathu uLathAgi) : Prana rising from the muladhara chakra and staying in the Yogic stance,
மூல பர = (பிராண வாயு) மூலாதாரத்தினின்று மேலே உள்ள; யோக மேல் கொண்டிடா = யோக நெறியை மேற்கொண்டு; நின்றது உளதாகி = அந் நிலையிலேயே இருந்து,
பரயோகம் -- மேலான யோகநிலை; பொறி புலன்களின் சேட்டைகள் அற்று, சமாதி மனோலய முற்று ஜீவபாபம் ஒழிந்து வெறுந்தானாய் நிலைத்து நிற்கின்ற நிலை. பரம் என்றால் நேர் இல்லாதது, உவமை இல்லாதது, அதற்கு இணை என்ற ஒன்று கிடையாது, அதற்கு மேல் ஒன்றும் இல்லாதது, என்று பொருள்
வானின் கண் நாமம் மதி மீதில் ஊறும் கலா இன்ப அமுது ஊறல் நாடி ( vAnin kaN nAmam mathi meethil URum kalA inba amuthURal nAdi) : and seeks the sweet Shiva nectar oozing from the moon in the sky (the head), புகழ்பெற்ற பூரண சந்திரனிடத்தில் இருந்து பொழியும் அமிர்தகலை என்னும் இனிய அமிர்தப் பொழிவை நாடி, வானின் கண் = வானில் (மேலைச் சிவ வீதீயில்); நாமம் மதி மீதில் = நிறைந்த சந்திர மண்டலத்தின் மீது;
அதன் மீது போய் நின்ற ஆனந்த மேலை வெளி ஏறி நீ இன்றி நான் இன்றி ( athan meethu pOy ninRa Anantha mElai veLi yERi neeyinRi nAninRi ) : then it climbs up to the world of the moon and settles at the great blissful cosmos; It reaches a state of Oneness (advaita) where there is no distinction between You and me;
நாடி இனும் வேறு தான் இன்றி வாழ்கின்றது ஒரு நாளே (nAdi inum vERu thAn inRi vAzginRathu orunALE) : will there be a day when I shall experience that bliss of emptiness (shunya) where there is nothingness?
The next lines describe Parvati, the mother of Muruga and the younger sister of Vishnu.
காள விடம் ஊணி மாதங்கி வேதம் சொல் பேதை ( kALa vidam UNi mAthangi vEthancol pEthai ) : She swallowed the venom (that emerged from the milky ocean); She incarnated as the daughter of Sage Mathanga; She is the One praised by the VEdAs; ஊணி (UNi) : உண்டவள்;
நெடு நீலி பாதங்களால் வந்த காலன் விழ மோதும் சாமுண்டி (nedu neeli pAthangaLAl vantha kAlan vizha mOthu sAmuNdi ) : She is the Great Durga Devi who kicked Yaman with Her hallowed feet (When Yaman, the God of Death, came to grab the life of Markandeya,) பெருந்தகைமை உடைய துர்க்காதேவியும், (மார்க்கண்டேயரைப் பற்றும் பொருட்டு) வந்த இயமன் இறந்து விழுமாறு திருவடிகளால் உதைத்து வீழ்த்திய காளியம்மையும்,
பார் அம்பு ஒடு அனல் வாயு காதி முதிர் வானமே தங்கி வாழ் வஞ்சி (pAr ambu odu anal vAyu kAthi muthirvAna mEthangi vAzhvanji ) : She is slim-bodied as the creeper and she resides within, and transcends, all the five elements (namely, Earth, Water, Fire, Air and the Sky); பூமி, நீர், தீ, வாயு, பேரொளி மிகுந்த வானம் ஆகிய பஞ்ச பூதங்களிலும் தங்கி அந்தர்யாமியாக விளங்கும் கொடியைப் போன்றவள், அம்பு (ambu) : water; கா(ந்)தி முதிர் வானம் (kA(n)thi muthir vAnam ) : பிரகாசமாயுள்ள வெளி;
ஆடல் விடை ஏறி பாகம் குலா மங்கை (Adal vidai yERi pAgam kulA mangai ) : She occupies the left side of Lord ShivA, the Great Cosmic Dancer who mounts the bull, Nandi; அநவரத ஆனந்தத் தாண்டவமாடும் தரும விடைமேல் வருபவருமாகிய சிவபெருமானது இடப்பாகத்தில் இன்புடன் எழுந்தருளியுள்ளவளும்,
காளி நடமாடி நாள் அன்பர் தாம் வந்து தொழு மாது (kALi nadamAdi nAL anbar thAm vanthu thozhu mAthu) : As Bhadra KALi, She dances ferociously (competing with SivA) and is the Divine Mother worshipped everyday by Her devotees coming to Her shrine; பத்ர காளியாக நின்று சிவமூர்த்திக்கு எதிரில் நிருத்தம் செய்தவளும், நாள்தோறும் மெய்யன்புடைய அடியார்கள் தமது சந்நிதிக்கு வந்து வழிபட்டு வணங்கப் பெறுகின்றவரும்,
சக்தியின் இயக்கத்தால்தான் நாம் சிவனை அறிந்து கொள்ள முடியும். இதுதான் காலசொரூபமான காளியின் தத்துவம்.
வாளம் முழுது ஆளும் ஓர் தண் துழாய் தங்கு சோதி மணி மார்ப மாலின் பின்னாள் (vALa muzhuthu ALum Or thaN thuzhAy thangu jOthi maNi mArba mAlin pi(n)nAL ) : She is the younger sister of Vishnu who rules the entire universe surrounded by Mount ChakravALa, wears the cool garland made of Tulasi and who wears a dazzling necklace of precious gems on His chest; துழாய் (thuzhAy) : tulsi;
இன் சொல் வாழும் உமை மாதராள் மைந்தனே எந்தை இளையோனே (insol vAzhum umai mAtharAL mainthanE enthai yiLaiyOnE) : she has the sweetest speech. You are the dear son of that mother Uma and the younger son of our Father, Lord SivA!
மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று (mAsu il adiyArgaL vAzhkinRa vUr senRu) : You follow Your unblemished devotees and go to their towns,
தேடி விளையாடியே அங்ஙனே நின்று வாழும் மயில் வீரனே (thEdi viLaiyAdiyE angnganE ninRu vAzhumayil veeranE) : and seek them out to play several of your pranks with them and reside permanently in their places, Oh Warrior mounting the Peacock!
செந்தில் வாழ்கின்ற பெருமாளே.(senthil vAzhginRa perumALE.) : Your abode is ThiruchchendhUr, Oh Great One!
Comments
Post a Comment