இயல் என்றால் என்ன?

A few days ago, I received a Whatsapp message from one of the Bangalore Thiruppugazh Anbar Mrs. Vasantha Panchapakesan who is a well known speaker on Thiruppugazh-related topics. The message was as follows:


இயல் என்றால் என்ன மேடம்? எனக்கு தெரிந்தது முத்தமிழ் இயல் , இசை நாடகம் என்பது... அருணகிரிநாதர் கந்தரநுபூதியில் இயல் சேர் செஞ்சொல் புனை மாலை என்கிறார்.. இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே என்கிறார். இயல் பரவு காதற் பெருமாள், இயல் புலியூர் வாழ் பெருமாள் என்கிறார்.. இயல் வேலுடன் மா அருள்வாயே என்கிறார்..அவன் கடைக்கண் இயலை காண வாருமே என்கிறார்.... இன்னும் இயல் என்ற வார்த்தையை இயல்பாய் எத்தனை பாக்களில் பாடியுள்ளார் என்று தெரியவில்லை ... தாங்கள் அந்த இயலை தொகுத்து வழங்கினால் என் மனம் ஆனந்தம் அடையும் என்று நினைக்கிறேன்...

I jotted down a few instances from Thiruppugazh where the word 'iyal' is used and wrote a short commentary on it. Today, I noticed other voice messages From Mrs.Vasantha that had preceded the message, which I had somehow missed seeing. I listened to them.

Voice message 1

Voice message 2

Voice message 3

Mrs.Vasantha has answered her own question and has spoken elegantly and very knowledgeably on the topic, and after that I didn't have the courage to post what I had written about it. Then I thought why not add own my thoughts, which I had already written down anyway. So, here it goes....

பண்டைய தமிழர்கள் கலை, கேளிக்கைகளை - இயல் (இலக்கியம்), இசை மற்றும் நாடகம்/கூத்து என்று பிரித்தனர். இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமாகிய தமிழை இயல் (தமிழ்) என்கிறோம். இயல் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன. ஒரு அர்த்தம் தமிழ் மொழி, மற்றும் அதன் இலக்கியம் ஆகும். சிறந்த, தகுந்த, அன்பான, அழகான என்ற பொருள்களிலும் இயல் உபயோகப்படுத்த படுகிறது.

இதோ சில திருப்புகழ்களில் இந்த வார்த்தை எவ்வாறாக பிரயோகப்படுத்தப் படுகிறது என்று காண்போம்:


  1. இசை என்பது பண் இசைத்துப் பாடப்படும் தமிழ். கூத்து என்பது ஆடல்பாடல்களுடன் உணர்த்தப்படும் தமிழ். தமிழ் மொழி, மற்றும் அதன் இலக்கியம் என்ற அர்த்தத்தில் வரும் பாடல்கள்:
    • இயலிசையில் உசித
      இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி
      இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
      இயல் இசையில் = இயற்றமிழுடன் கூடிய இசை ஞானத்தில், .... சிறந்த பெண்களிடம் ஈடுபட்டு, அதனால் தளர்வு அடைந்து அலையாமல் இருந்து....
    • நெடிய வடகுவடு
      இயல் கொடு பழுது அற மொழிவதும் ஒரு நாளே: இயல் தமிழில் அமைத்து, குற்றமறப் பாடி நான் ஓதும் ஒரு நாள் கிடைக்குமோ?
  2. இயல் என்பது இயல்பு, நெறி, பழக்கம், தகுதி.
      விரகோடு வளை
      குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே: முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும் திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் (பழக்கத்தை) கொடுத்து அருள் புரிவாயாக.
      கருணை சிறிதுமில்
      விரகு ஒழியில் உலக இயல் பிணை விடில் : தந்திர புத்தி ஒழிந்தால், உலக சம்பந்தமான கட்டுக்கள் விட்டால்,
      திரைவார்
      இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும் இழிவாகி முனே இயல் இலராகி ... தலைமையான யானை ஐராவதத்தின் தேவனாம் இந்திரனும், ஏனைய தேவர்கள்அ னைவரும், தாழ்ந்த நிலையை அடைந்து, முன் இருந்த தமது தகுதியை இழந்தவராகி, இயல் இலராகி = தமது தகுதியை இழந்தவர்களாகி
      அமரும் அமரர்
      இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும்: தகுதி வாய்ந்துள்ள திருமயிலை நகரிலே இன்பமாக வாழும்;
  3. இயல் அழகும் அன்பும் ஆவது.

      கனக சபை மேவும்
      இயல் பரவு காதற் பெருமாள் காண் : பரந்த/முதிர்ந்த/விரிந்த காதல் கொண்ட பெருமாள் நீதான்.
      சிவமாதுடனே
      இயல் வேலுடன் மா அருள்வாயே: அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக.
      "மா” என்றால் மிருகம்/குதிரை என்று பொருள். குதிரை மயிலுக்கு உவமையாதலால் மா மயிலை குறிக்கும்.
  4. இயல் இயற்கை என்ற பொருளில் பாடல்கள்.

      விடுங்கை
      இயல் ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என : இயற்கையில் தோன்றிய இந்த உலகத்துக்கு ஒப்பற்ற கவி அரசர் என்று ..
      புனமடந்தை
      புகலும் எண்பத்து எட்டு எட்டு இயல் தத்(து)வம் சகலமும் : புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு வகையான தத்துவ உண்மைகளும் ஆக எல்லாவற்றையும்,

Comments

  1. மிகவும் பயனுள்ளதாக இருந்தது
    நன்றிகள் பல

    ReplyDelete
  2. திருக்குறளில் ஏன் இயல்கள் என்று உள்ளது?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே