104. சரணகமலாலயம்


ராகம்: கல்யாணிதாளம்: 2½ + 1½ + 1½
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்கஅறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்றகுமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்கபெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்தவடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்தமயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் முருகோனே.

charaNa kamalaala yaththai arainimisha nEra mattil
thavamuRai dhiyaanam vaikka aRiyaadha
jadakasada mooda matti bhava vinaiyilE janiththa
thamiyan midiyaal mayakkam uRuvEnO
karuNaipuri yaadhi ruppa dhenakuRaiyi vELai seppu
kayilaimalai naathar petra kumarOnE
kadakabuya meethi rathna maNiyaNipon maalai secchai
kamazhu maNa maar kadappam aNivOnE
tharuNam idhaiyaa miguththa ganamadhuRu neeL savukya
sakalaselva yOga mikka peruvaazhvu
thagaimaisiva nyaana muththi paragathiyu nee koduth
udhavipuriya vENu neyththa vadivElaa
aruNadhaLa paadha padhmam adhunidhamumE thudhikka
ariyathamizh thaan aLiththa mayilveeraa
adhisayam anEgam utra pazhanimalai meedh udhiththa
azhagathiru vEragaththin murugOnE.

Learn The Song




Sung by an anbar Uma Ranganathan

Raga Kalyani (65th Mela)

Arohanam: S R2 G3 M2 P D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 R2 S


Paraphrase

சரண கமல ஆலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில் தவம் முறை தியானம் வைக்க அறியாத (charaNa kamala Alayaththai arai nimisha nEra mattil thavamuRai dhiyAnam vaikka aRiyAdha) : I do not offer ritualistic worship or contemplate on Your temple-like feet even for half a minute,

சட(ம்) கசட(ம்) மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ (jada kasada mUda matti bhava vinaiyilE janiththa thamiyan midiyAl mayakkam uRuvEnO) : I am such a zombie and a useless fool, a scum and I am born as a result of sinful actions or karma; should I suffer from the resulting illusion? மிடி (midi): poverty (of divine grace);

கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே (karuNai puriyAdhu iruppadhu ena kuRai ivELai seppu kayilaimalai nAthar petra kumarOnE) : Kindly tell me the reason for not showing compassion me at this hour, oh son of the Lord of Kailasa (Shiva)!

கடக புய(ம்) மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு(ம்) மணம் ஆர் கடப்பம் அணிவோனே (kadaka buya meethi rathna maNiyaNi pon mAlai secchai kamazhu maNa mAr kadappam aNivOnE) : On Your valorous shoulders You wear chains made of gems, gold, vetchi flowers and fragrant garlands of kadappa flowers.

தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெரு வாழ்வு (tharuNam idhaiyA miguththa ganamadhuRu neeL savukya sakalaselva yOga mikka peruvAzhvu) : This is the opportune time for a prideworthy, prosperous and long life, abundant wealth,

தகைமை சிவ ஞான முத்தி பர கதியு(ம்) நீ கொடுத்து உதவி புரிய வேணும் நெய்த்த வடி வேலா (thagaimai siva nyAna muththi paragathiyum nee koduthu udhavi puriya vENu neyththa vadivElA) : competence, knowledge of Shiva, and emancipation, all of which you should confer on me, Oh Lord with bright, resplendent and ghee-smeared vel,

அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா (aruNa thaLa pAdha padhmam adhu nidhamumE thudhikka ariya thamizh thAn aLiththa mayilveerA) : You gave me the gift of tamil language with which to worship everyday Your red lotus petal like feet, oh Peacock-warrior!

அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீது உதித்த அழக திருவேரகத்தின் முருகோனே. (adhisayam anEgam utra pazhani malai meedhu udhiththa azhagathiru Eragaththin murugOnE.) : You appeared at the miracle-filled Pazhani hill and You reside at Swamimalai!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே