101. கறைபடும் உடம்பு


ராகம் : யமுனா கல்யாணிதாளம் : 2½ + 1½ +2
கறைபடுமு டம்பி ராதெனக்
கருதுதலொ ழிந்து வாயுவைக்
கருமவச னங்க ளால்மறித்தனலூதிக்
கவலைபடு கின்ற யோககற்
பனைமருவு சிந்தை போய்விடக்
கலகமிடு மஞ்சும் வேரறச்செயல்மாளக்
குறைவறநி றைந்த மோனநிர்க்
குணமதுபொ ருந்தி வீடுறக்
குருமலைவி ளங்கு ஞானசற்குருநாதா
குமரசர ணென்று கூதளப்
புதுமலர்சொ ரிந்து கோமளப்
பதயுகள புண்ட ரீகமுற்றுணர்வேனோ
சிறைதளைவி ளங்கு பேர்முடிப்
புயலுடன டங்க வேபிழைத்
திமையவர்கள் தங்க ளூர்புகச் சமராடித்
திமிரமிகு சிந்து வாய்விடச்
சிகரிகளும் வெந்து நீறெழத்
திகிரிகொள நந்த சூடிகைத்திருமாலும்
பிறைமவுலி மைந்த கோவெனப்
பிரமனைமு னிந்து காவலிட்
டொருநொடியில் மண்டு சூரனைப் பொருதேறிப்
பெருகுமத கும்ப லாளிதக்
கரியெனப்ர சண்ட வாரணப்
பிடிதனைம ணந்த சேவகப்பெருமாளே.


kaRai padum udambi rAdhenak
karudhudhal ozhindhu vAyuvaik
karuma vachanangaLal maRiththu analUdhi

kavalai padugindra yOga kaR
panai maruvu chindhai pOyvidak
kalagam idum anjum vEraRa cheyal mALa

kuRaivaRa niRaindha mOna nir
guNamadhu porundhi veeduRa
gurumalai viLangu nyAna saR gurunAthA

kumara saraNendru kUdhaLa
pudhu malar sorindhu kOmaLa
padhayugaLa pundareegam utruNarvEnO

siRai thaLai viLangu pEr mudip
puyal udan adangavE pizhaiththu
imaiyavargaL thangaLUr puga samarAdi

thimiramigu sindhu vAy vida
sigarigaLum vendhu neeRezha
thigiri koL anantha sUdigai thirumAlum

piRai mavuli maindha kOvenap
biramanai munindhu kAvalittu
oru nodiyil maNdu sUranai porudhERi

perugu madha kumba lALitha
kariyena prachaNda vAraNa
pididhanai maNandha sEvaka perumALE.

Learn The Song



Yamuna Kalyani (Janyam of 65th mela Kalyani; Sampoorna Bhashanga)

Arohanam: S R2 G3 M2 P D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 M1 R2 S   OR
S N3 D2 P M2 G3 M1 G3 R2 S (M1 anya swara)


Paraphrase

கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து (kaRai padum udambu irAdhu enak karudhudhal ozhindhu) : Instead of understanding that the body, the source of blemishes, will not be permanent,

வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி (vAyuvai karuma vachanangaLal maRiththu anal Udhi) : one holds the inhaled breath to raise the intrinsic fire within the body through yogic practices and mantras; கரும (karuma) : yogic practices; வசனம் (vachanam ) : dialog: here, mantras;

கவலைப் படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய் விட (kavalai padugindra yOga kaRpanai maruvu chindhai pOy vida) : so that I do not worry with thoughts of Yogic exercises; சித்தியடைய வேண்டுமே என்று கவலைக்கு இடம் தருகின்ற அடயோகம் முதலியவைகளின் யோக மார்க்கப் பயிற்சிகளைப் பற்றி எண்ணுகின்ற சிந்தனைகள் தொலையவும்;

கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள (kalagam idum anjum vEraRa cheyal mALa) : and pluck out the roots of my five senses that cause so much trouble and I cease to exert any action (remove thoughts of 'I' while performing actions); ஒருவழிப்பட விடாமல் கலகம் புரிகின்ற ஐம்புலன்களின் வழிச் செல்லும் சப்தம் ஸ்பரிசம் ரூபம் ரசம் கந்தம் என்னும் தன்மாத்திரைகளான ஆசைகள் ஐந்தும் வேருடன் அற்றுப் போகவும்,

குறைவு அற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற (kuRaivu aRa niRaindha mOna nirguNam adhu porundhi veedu uRa) : so that I can reach the ultimate bliss after attaining the most satisfying tranquility and a stage bereft of any attributes (vice or virtue), குறைவில்லாமல் பரிபூரணமாக உள்ள மௌன நிலையை அடைந்து முக்குணங்களை ஒழித்து அருட்குணங்களைப் பொருந்தப் பெற்று, முத்தியை அடையவும்,

குரு மலை விளங்கும் ஞான சற் குரு நாதா குமர சரண் என்று (gurumalai viLangu nyAna saR gurunAthA kumara saraNendru) : (will I ever) say "Oh the Greatest and Wisest Master, seated in the hill of SwAmimalai, Oh Kumara, I surrender to You"

கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ( kUdhaLa pudhu malar sorindhu kOmaLa padhayugaLa pundareekam utr uNarvEnO) : and shower fresh KUthaLa flowers at Your two hallowed feet, meditate and realise You! கோமள (komaLa) : youthful ; புண்டரீகம் (pundareegam ) : lotus;

சிறைத் தளை விளங்கும் பேர் முடிப்புயல் உடன் அடங்கவே பிழைத்து (siRai thaLai viLangu pEr mudippuyal udan adangavE pizhaiththu) : Saving the life of Indra who had been imprisoned; சிறைத் தளை விளங்கும் பேர் (siRai thaLai viLangu pEr ) : சிறையில் அடைப்பட்டு கை விலங்குகளுடன் காட்சி அளிக்கும் தேவர்கள் ; முடிப்புயல் ( mudippuyal) : Indra, மேகத்தை ஆளும் இந்திரன்; இந்திரன் மழை மற்றும் இடியின் கடவுள். மேகத்தை கட்டுப்படுத்துவதால் அவர் மேகங்களின் அதிபதி என்றும் அழைக்கப்படுகிறார்.;

இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி (imaiyavargaL thangaLUr puga samarAdi) : alo byng with devas and enabling them to regain their city by engaging in a battle,

திமிர மிகு சிந்து வாய் விட சிகரிகளும் வெந்து நீர் எழ (thimiramigu sindhu vAy vida sigarigaLum vendhu neeRezha) : The dark sea roared and mountains were burnt into ash, திமிர மிகு சிந்து(thimiramigu sindhu ) : the dark sea;

திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் பிறை மவுலி மைந்த கோ என (thigiri koL anantha sUdigai thirumAlum piRai mavuli maindha kO ena) : Lord Vishnu, who holds the disc (Sudharsanam) in His hand and decorates the crown of many-hooded Adisesha, wailed "Oh the son of Lord SivA who wears the crescent moon, kindly save us all (by killing Surapadman)"; சக்ராயுதத்தையுடையவரும், அநந்தசூடிகை-ஆதிசேடன் முடியில் விளங்குபவருமாகிய நாராயணரும், சந்திரனைச் சடையில் தரித்த சிவகுமாரரே! முறையோ என்று முறையிட, திகிரி (thigiri) : chakrayudha; Sudharshana discus; அநந்தம் சூடிகை (anantham sudigai) : one who is worn by the many hooded adhisesha serpent or one who is on the crown/head of Adisesha; பிறை மவுலி (pirai mavuli ) : one who wears a crescent moon on the head/crown; கோ என (kO ena) : exclaiming 'alas!', முறையோ என்று முறையிட,

பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருதேறி (biramanai munindhu kAvalittu oru nodiyil maNdu sUranai porudhERi) : scolding Brahma and imprisoning Him (for not knowing the meaning of Pranava Mantra) and fighting and conquering the menacingly advancing demon SUran!

பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரசண்ட வாரணப் பிடி தனை மணந்த சேவக பெருமாளே.(perugu madha kumba lALitha kariyena prachaNda vAraNa pididhanai maNandha sEvaka perumALE) : You married Deivayanai, who was brought up by the elegant and ferocious elephant from whose jaws the 'musth' fluid oozes; கரி, வாரணம்( kari, vaaranam : elephant; ப்ரசண்ட வாரணப் பிடி (prachaNda vAraNa pidi) : Deivayanai, who was brought up by Indra's ferocious elephant Airavata; பிடி என்பது பெண் யானை. களிறு என்பது ஆண் யானை. லாளித (laLitha ) : elegant;

Note on Yogic Practices

Prana is the source of energy that operates the ten indriyas: Five karmendriyas or instruments of actions and five jnanendriyas or cognitive senses such as smelling, tasting, seeing, touching, and hearing. These ten operate through the chakras, and receive their power from the Prana.

The breath and the underlying energy, or Prana, usually flow predominantly on one side or other, the left or the right. The breath predominantly in the left nostril is called Ida and represents the body's cool and feminine aspect. The breath flowing predominantly in the right nostril is called Pingala and represents the body's hot and masculine aspect.

When the energy lying coiled in Mooladhara, the seat of prithvi tattwa, passes through Manipura chakra, the seat of fire or agni, it begins to shine with the light of consciousness. After it passes this chakra, the power of consciousness draws it up to its abode in Sahasrara. Agni transforms the movement of energy and by creating a balance between the two nadis, ida and pingala, puts it onto the straight path.

Though the key to open the lock, release energy from its captivity in the Mooladhara, and carry it safely to its destination to unite with consciousness lies in the fire of agni, the code for the key lies with Bhakti. Just as darkness is transformed into light under the luminosity of the sun, in the same way tamas and rajas transform into sattwa when bhakti flows from its abode in the heart cavity.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே