187. பாட்டிலுருகிலை
ராகம் : சங்கரானந்தப்ரியா தாளம் : மிஸ்ரசாபு (2 + 1½) பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை கூற்று வருவழி பார்த்து முருகிலை பாட்டை யநுதின மேற்று மறிகிலை தினமானம் பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் வழிபோக மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ னிதுகேளாய் வாக்கு முனதுள நோக்கு மருளுவ னேத்த புகழடி யார்க்கு மெளியனை வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ