மயில் விருத்தம் – 10 : நிராசத விராசத

ராகம் : மத்யமாவதி தாளம்: கண்டசாபு

நிராசத விராசத வரோதய பராபர
னிராகுல னிராமய பிரா

னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
நிலாவிய உலாசஇ தயன்

குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
குராநிழல் பராவு தணிகைக்

குலாசல சராசரம் எலாமினி துலாவிய
குலாவிய கலாப மயிலாம்

புராரிகும ராகுரு பராஎனும் வரோதய
புராதன முராரி மருகன்

புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
லாகும் அயி லாயுதனெடுந்

தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
சாதனன் விநோத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
ஷடாநநன் நடாவு மயிலே.


Learn The Song




Paraphrase

நிராசத விராசத வரோதய பராபரன் நிராகுலன் நிராமய பிரான் ( niraajatha viraajatha varOdhaya paraapara niraakula niraamaya piraan) : He is without the rajas guna; He has the sattvik quality that is the opposite of rajata guna; He is the giver of boons; He is the Supreme God; He is never afflicted by disease; He is the Supreme Master; நிராசத — முக்குணங்களில் ஒன்றான ரஜோகுணம் இல்லாதவன்; விராசத — ராஜத குணத்துக்கு மாறுபாடான சாத்விக குணத்தை உடையவன்; நிராமயன் — நோயற்றவன்;
The three gunas are sattva, rajas and tamas.

நிலாது எழுதலால் அறமிலான் நெறியிலான் நெறி நிலாவிய உலாச இதயன் (nilaadhu ezhudhalaal aRamilaan neRi yilaa neRi nilaaviya ulaasa idhayan) : Being aloof from those who do not follow dharma or practice righteousness, He always abides by righteous conduct and is always merry; அறமிலான் நெறியிலான் நிலாது எழுதலால்( aRamilaan neRi yilaa nilaadhu ezhudhalaal) : அறமில்லாதவனும் நன்னெறியில்லாதவனும் தன்னிடத்தே சாராமல் விளங்குதலால்; நெறி நிலாவிய உலாச இதயன்( neRi nilaaviya ulaasa idhayan) : நன்னெறியில் விளங்குகின்ற சந்தோஷமானஉள்ளத்தோடு கூடியவன்;

குராமலி விராவு உமிழ் பராரை அமரா (kuraamali viraavumizh paraarai amaraa ) : He permeates, mingles and expresses out of Kura trees and seats under its heavy trunk (at Tiruvidaikkazhi); குராமலி — குராமரத்தில் நிறைந்து; விராவு — கலந்து; உமிழ் — வெளித் தோன்றும் பராரை — பருத்த அடி பாகத்தில்; அமரா — அமர்ந்து

நிழல் குராநிழல் பராவு தணிகைக் குலாசலம் சராசரம் எலாம் இனிது உலாவிய குலாவிய கலாப மயிலாம் (nizhal kuraanizhal paraavu thaNigai kulaachala charaacharam elaam inidhulaaviya kulaaviya kalaapa mayilaam) : Across great mountains like ThiruththaNi that is under the shade of radiant Kura trees and across other worlds, His peacock roams happily.

புராரி குமரா குருபரா எனும் வரோதய புராதன முராரி மருகன் (puraari kumaraa guruparaa enum varOdhaya puraathana muraari marugan) : He grants boons to those who extol Him as the son of Siva who burned the tripura and as His (Shiva's) Guru; He is the nephew of the ancient Murari (slayer of Murasura);

புலோமசை சலாமிடு பலாசன (pulOmasai salaamidu palaasana ) : He is worshipped by Indrani who is like the parrot that subsists on fruits alone; பலாசன — (பழத்தை உண்ணும்) கிளி போன்ற;

வலாரி புகலாகும் அயி லாயுதன் (valaari puga laagum ayil aayudha ) : He is Velayudha, one whose weapon is Vel, and is the refuge for indra;

நெடும் தராதல கிராதர்கள் குல ஆதவ (nedum tharaathala kiraathargaL kula athava ) : He is the radiant sun for the clan of the hunters who live in the hills of this sprawling earth; தராதலம் (tharaathalam) : earth;

அபிராம வலசாதனன் விநோத சமரன் (abiraama vala saadhanan vinOdha samaran) : He is handsome; He is the doer of mighty acts; He fights in the war as if it is a recreational sport, வலசாதனன் — வல்லமையை சாதித்தவன்;

தடாரி விகடாசுரன் குடாரி இத படா திகழ் ஷடாநநன் நடாவு மயிலே.(thadaari vikataasuran kutaaridha padaa thigazh shadaananan nadaavu mayilE) : He is the enemy of the Krauncha mountain; He is the axe which heaved the chest of the troubling asura Soorapadman; He is the happy six-faced Shanmukha; It is the peacock driven by Murugan as described above. தடாரி - தடம் + அரி(thadaari - thadam+ari) : enemy of the mountain (Krauncha); விகடாசுரன் (vikataasuran) : the troubling asura (Surapadman); குடாரி /குடரி (kutaari) : axe;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே