Posts

Showing posts from November, 2016

420. வேடர் செழுந்தினை

ராகம் : சிம்மேந்திர மத்யமம் திச்ர த்ருவம் 2 களை வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி லோசன அம்புக ளாற்செயல் தடுமாறி மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு வேளைபு குந்தப ராக்ரம மதுபாடி நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி னாலுல கங்களு மேத்திய இருதாளில் நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரம நாடஅ ருந்தவம் வாய்ப்பது மொருநாளே

419. வானப் புக்கு

ராகம் : பூர்வி கல்யாணி தாளம் : சதுச்ர ரூபகம் வானப் புக்குப் பற்றும ருத்துக் கனல்மேவு மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் பிறவாதே ஞானச் சித்திச் சித்திர நித்தத் தமிழாலுன் நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் புரிவாயே

418. வாரி மீதே

ராகம் : குறிஞ்சி அங்கதாளம் (8½) 2½ + 2½ + 1½ + 2 வாரிமீ தேயெழு திங்களாலே மாரவே ளேவிய அம்பினாலே பாரெலா மேசிய பண்பினாலே பாவியே னாவிம யங்கலாமோ

417. வாதந் தலைவலி

ராகம் : பெஹாக் தாளம் : ஆதி வாதந் தலைவலி சூலம் பெருவயி றாகும் பிணியிவை யணுகாதே மாயம் பொதிதரு காயந் தனின்மிசை வாழுங் கருவழி மருவாதே ஓதம் பெறுகடல் மோதுந் திரையது போலும் பிறவியி லுழலாதே ஓதும் பலஅடி யாருங் கதிபெற யானுன் கழலிணை பெறுவேனோ

416. மோது மறலி

Image
ராகம் : ஹம்சத்வனி அங்கதாளம் 1½ + 1½; + 1 + 1½ + 2 (7½) மோது மறலியொரு கோடி வேற்படை கூடி முடுகியெம தாவி பாழ்த்திட மோக முடையவெகு மாதர் கூட்டமு மயலாரும் மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு மோக வினையில்நெடு நாளின் மூத்தவ ரிளையோர்கள் ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர் கூடி நடவுமிடு காடெ னாக்கடி தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி யறுபாவி ஏழு புவனமிகு வான நாட்டவர் சூழ முநிவர்கிளை தாமு மேத்திட ஈச னருள்குமர வேத மார்த்தெழ வருவாயே

415. மூலா நிலமதின்

ராகம் : பந்துவராளி தாளம் : ஆதி மூலா நிலமதின் மேலே மனதுறு மோகா டவிசுடர் தனைநாடி மோனா நிலைதனை நானா வகையிலு மோதா நெறிமுறை முதல்கூறும் லீலா விதமுன தாலே கதிபெற நேமா ரகசிய வுபதேசம் நீடூ ழிதனிலை வாடா மணியொளி நீதா பலமது தருவாயே

414. முனை அழிந்தது

ராகம் : சங்கரானந்தபிரியா அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது ப்ரபையான முகமி ழிந்தது நோக்குமி ருண்டது இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது அறிவேபோய் நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு மவச மும்பல ஏக்கமு முந்தின நெறிம றந்தது மூப்பு முதிர்ந்தது பலநோயும் நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சலம லங்களி னாற்றமெ ழுந்தது நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி தருள்வாயே

413. முருக மயூர

ராகம் : பாகேஸ்ரீ அங்கதாளம் 2 + 1½ + 2 (5½) முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி முகுளப டீரக் கோமள முலைமீதே முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை முதியபு ராரிக் கோதிய குருவேயென் றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு முணர்வினோ டூடிக் கூடியும் வழிபாடுற் றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி யுனதடி யாரைச் சேர்வது மொருநாளே

412. மாண்டார் எலும்பணி

Image
ராகம் : சங்கராபரணம் அங்கதாளம் 2½ + 2 + 2 (6½) மாண்டாரெ லும்பணி யுஞ்சடை யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை வான்பூத லம்பவ னங்கனல் புனலான வான்பூத முங்கர ணங்களு நான்போயொ டுங்கஅ டங்கலு மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை யருளாயேல் வேண்டாமை யொன்றைய டைந்துள மீண்டாறி நின்சர ணங்களில் வீழந்தாவல் கொண்டுரு கன்பினை யுடையேனாய் வேந்தாக டம்புபு னைந்தருள் சேந்தாச ரண்சர ணென்பது வீண்போம தொன்றல என்பதை யுணராதோ

411. மனைமக்கள் சுற்றம்

ராகம் : ராமப்ரியா தாளம் : திச்ர ஏகம் (3) மனைமக்கள் சுற்ற மெனுமாயா வலையைக்க டக்க அறியாதே வினையிற்செ ருக்கி யடிநாயேன் விழலுக்கி றைத்து விடலாமோ சுனையைக்க லக்கி விளையாடு சொருபக்கு றத்தி மணவாளா தினநற்ச ரித்ர முளதேவர் சிறைவெட்டிவிட்ட பெருமாளே.

410. மனக பாட

ராகம் : திலங் அங்கதாளம் (5½) 1½ + 1½ + 2½ மனக பாட பாடீர தனத ராத ராரூப மதன ராச ராசீப சரகோப வருண பாத காலோக தருண சோபி தாகார மகளி ரோடு சீராடி யிதமாடிக் குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான குறைய னேனை நாயேனை வினையேனைக் கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத குருட னேனை நீயாள்வ தொருநாளே

409. மதிதனை யிலாத

ராகம் : தன்யாசி அங்கதாளம் 2½ + 1½ + 1½ (5½) மதிதனை யிலாத பாவி குருநெறி யிலாத கோபி மனநிலை நிலாத பேயன் அவமாயை வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி வரும்வகை யிதேது காய மெனநாடும் விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினையிகல் விடாத கூள னெனைநீயும் மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக மிகுமுன துரூப தான மருள்வாயே

408. மதனேவிய

ராகம் : தோடி தாளம் : திச்ர ஏகம் (3) மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும் வடிவாயுடல் நடமாடுக முடியாதேன் மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை மலம்வேரற மகிழ்ஞானக அநுபூதியி னருள்மேவிப் பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ பரிபூரண கிருபாகர முடன்ஞான பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட பலகோடிவெண் மதிபோலவெ வருவாயே

407. மக்கள் தாயர்

ராகம் : ஆனந்தபைரவி ஆதி கண்ட நடை (1½ + 1) மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை விக்கும்வாழ் நர்க்குமிக மனதூடே மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம் வைத்துவா டச்சமனு முறமேவித் திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி திக்கஆ விக்களவு தெரியாமுன் சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது சித்ரபா தக்கமல மருள்வாயே

406. போத நிர்க்குண

ராகம் : சுநாதவினோதினி அங்கதாளம் (8) 1½ + 2 + 2 + 1½ + 1 போத நிர்க்குண போதா நமோநம நாத நிஷ்கள நாதா நமோநம பூர ணக்கலை சாரா நமோநம பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம நீப புஷ்பக தாளா நமோநம போக சொர்க்கபு பாலா நமோநம சங்கமேறும் மாத மிழ்த்ரய சேயே நமோநம வேத னத்ரய வேளே நமோநம வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம என்றுபாத வாரி ஜத்தில்வி ழாதே மகோததி யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ மாயை யிற்சுழி யூடே விடாதுக லங்கலாமோ

405. பொதுவதாய்

ராகம் : ஹம்சத்வனி தாளம் : மிஸ்ரசாபு (3½) பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல் இரவு போய்ப்புகல் கின்றவேதப் பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு வெளிய தாய்ப்புதை வின்றியீறில் கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு கமுத மாய்ப்புல னைந்துமாயக் கரண மாய்த்தெனை மரண மாற்றிய கருணை வார்த்தையி ருந்தவாறென்

404. பேரவா அறா

ராகம் : ஹிந்தோளம் அங்கதாளம் (10½) 1½ + 1½ + 2½ + 2 + 3 பேர வாவ றாவாய்மை பேசற் கறியாமே பேதை மாத ராரோடு கூடிப் பிணிமேவா ஆர வார மாறாத நூல்கற் றடிநாயேன் ஆவி சாவி யாகாமல் நீசற் றருள்வாயே சூர சூர சூராதி சூரர்க் கெளிவாயா தோகை யாகு மாரா கிராதக் கொடிகேள்வா தீர தீர தீராதி தீரப் பெரியோனே தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.

403. பெருங்காரியம்

ராகம் : கரஹரப்ரியா தாளம் : ஆதி கண்ட நடை (20) பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால் ப்ரியங்கூர வந்து கருவூறிப் பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து பிணமானார் அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள் அலங்கார நன்றி தெனமூழ்கி அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால் அலந்தேனை யஞ்ச லெனவேணும்

402. பூத கலாதிகள்

ராகம் : மோகனம் அங்கதாளம் (5½) 2 + 2 + 1½ பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து பூசைகள் யாதுநி கழ்ந்து பிழைகோடி போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு பூரணி காரணி விந்து வெளியான நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து ஞானசு வாசமு ணர்ந்து வொளிகாண நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த நாயகர் பாதமி ரண்டு மடைவேனோ

401. புவிக்குன் பாதம்

ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : சதுச்ர ரூபகம் (6) புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை புலக்கண் கூடு மதுதனை அறியாதே புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழுக்கண் பாவ மதுகொளல் பிழையாதே கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல்படு மடிநாயேன் கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை கணக்குண் டாதல் திருவுள மறியாதோ

400. புத்தகத்து ஏட்டில்

ராகம் : ஆபோகி அங்கதாளம் (2½ + 2 + 1½ + 3) புத்தகத் தேட்டிற் றீட்டி முடியாது பொற்புறக் கூட்டிக் காட்டி யருள்ஞான வித்தகப் பேற்றைத் தேற்றி யருளாலே மெத்தெனக் கூட்டிக் காக்க நினைவாயே

399. புகரில் சேவல

ராகம் : மலையமாருதம் தாளம் : அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½) புகரில் சேவல தந்துர சங்க்ரம நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி பொருத சேவக குன்றவர் பெண்கொடி மணவாளா புனித பூசுர ருஞ்சுர ரும்பணி புயச பூதர என்றிரு கண்புனல் பொழிய மீமிசை யன்புது ளும்பிய மனனாகி அகில பூதவு டம்புமு டம்பினில் மருவு மாருயி ருங்கர ணங்களு மவிழ யானுமி ழந்தஇ டந்தனி லுணர்வாலே அகில வாதிக ளுஞ்சம யங்களும் அடைய ஆமென அன்றென நின்றதை யறிவி லேனறி யும்படி யின்றருள் புரிவாயே

398. பிறவியலை

ராகம் : கல்யாணி அங்கதாளம் கண்ட ஜம்பை (8) 1½ + 1 + 1½ + 1 + 3 பிறவியலை யாற்றினிற் புகுதாதே பிரகிருதி மார்க்கமுற் றலையாதே உறுதிகுரு வாக்கியப் பொருளாலே உனதுபத காட்சியைத் தருவாயே

397. பாணிக்குட் படாது

ராகம் : ஹரிகாம்போதி தாளம் : திஸ்ரத்ரிபுடை (7) பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள் பாஷிக்கத் தகாது பாதக பஞ்சபூத பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை பாவிக்கப் பெறாது வாதனை நெஞ்சமான ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி யேறிப்பற் றொணாது நாடினர் தங்களாலும் ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி யேறச்செச் சைநாறு தாளைவ ணங்குவேனோ

396. பருதியாய்

ராகம் : சஹானா தாளம் : மிஸ்ர அட (18) பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர் பாராய் வானாய் நீர்தீ காலா யுடுசாலம் பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி னாலா றேழா மேனா ளாயே ழுலகாகிச் சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட ராய்வே தாவாய் மாலாய் மேலே சிவமான தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல் சூடா நாடா ஈடே றாதே சுழல்வேனோ

395. பரவைக்கு எத்தனை

ராகம் : ராமப்ரியா தாளம் : திச்ர ஏகம் (3) பரவைக் கெத்தனை விசைதூது பகரற் குற்றவ ரெனமாணுன் மரபுக் குச்சித ப்ரபுவாக வரமெத் தத்தர வருவாயே

394. பட்டுப் படாத

ராகம் : கானடா தாளம் : சதுச்ர ஜம்பை (7) பட்டுப் படாத மதனாலும் பக்கத்து மாதர் வசையாலும் சுட்டுச் சுடாத நிலவாலும் துக்கத்தி லாழ்வ தியல்போதான்

393. பகிர நினைவொரு

ராகம் : சஹானா தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½) பகிர நினைவொரு தினையள விலுமிலி கருணை யிலியுன தருணையொ டுதணியல் பழநி மலைகுரு மலைபணி மலைபல மலைபாடிப் பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல் பழகி யழகிலி குலமிலி நலமிலி பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி லிகுலாலன் திகிரி வருமொரு செலவினி லெழுபது செலவு வருமன பவுரிகொ டலமரு திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல் நினையாத திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி செயலி லுணர்விலி சிவபத மடைவது மொருநாளே

392. நெடிய வடகுவடு

ராகம் : காம்போதி அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி நிபிட முடிகிழி யவுநில மதிரவும் விளையாடும் நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும் நினது கருணையு முறைதரு பெருமையும் நிறமு மிளமையும் வளமையு மிருசர ணமும்நீப முடியு மபிநவ வனசரர் கொடியிடை தளர வளர்வன ம்ருகமத பரிமள முகுள புளகித தனகிரி தழுவிய திரடோளும் மொகுமொ கெனமது கரமுரல் குரவணி முருக னறுமுக னெனவரு வனபெயர் முழுது மியல்கொடு பழுதற மொழிவது மொருநாளே

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே