396. பருதியாய்


ராகம்: சஹானாதாளம்: மிஸ்ர அட (18)
பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்
பாராய் வானாய் நீர்தீ காலாயுடுசாலம்
பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி
னாலா றேழா மேனா ளாயேழுலகாகிச்
சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட
ராய்வே தாவாய் மாலாய் மேலேசிவமான
தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்
சூடா நாடா ஈடே றாதேசுழல்வேனோ
திருத ராட்டிர னுதவு நூற்றுவர்
சேணா டாள்வா னாளோர் மூவாறினில்வீழத்
திலக பார்த்தனு முலகு காத்தருள்
சீரா மாறே தேரூர் கோமான் மருகோனே
குருதி வேற்கர நிருத ராக்ஷத
கோபா நீபா கூதா ளாமா மயில்வீரா
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர்பெருமாளே.

Learn The Song



Raga Sahana (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 G3 M1 P M1 D2 N2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 M1 R2 G3 R2 S


Paraphrase

God, or the Eternal Universal Consciousness, manifests not only as all the physical entities we see in this universe but also as His resplendent and graceful feet, indestructible and all-pervasive.

பருதியாய்ப் பனி மதியமாய்ப் படர் பாராய் (paruthiyAyp pani mathiyamAyp padar pArAy) : Appearing as the sun, the cool moon, the wide earth; சூரியனாகி, குளிர்ந்த சந்திரனாகி, பரந்த பூமியாகி, பருதி(paruthi) : sun; மதியம்/மதி(mathiyam/mathi) : moon;

வானாய் நீர் தீ காலாய் உடு சாலம் பலவுமாய் (vAnAy neerthee kAlAy uduchAlam palavumAy) : the sky, the water, the fire, the air, the numerous constellations; ஆகாயமாகி, நீராகி, நெருப்பாகி, காற்றாகி, நக்ஷத்திர கூட்டங்களாகி, , உடு (udu) : star; சாலம் (sAlam) : group; உடு சாலம் (udu chAlam) : groups of stars, constellation;

பல கிழமையாய்ப் பதினால் ஆறேழா மேல் நாளாய் ஏழு உலகாகிச் (pala kizhamaiyAy pathinAl AREzhA mEnALAy Ezhu ulagAgi) : all the days of the week (beginning with Sunday), the distinguished stars, numbering 27 (14+6+7), the seven worlds; ஞாயிறு முதலிய பல கிழமைகளுமாகி, 14+6+7 ஆகிய 27 சிறந்த நக்ஷத்திரங்களாகி, ஏழு உலகங்களாகி, ,

சுருதியாய்ச் சுருதிகளின் மேற் சுடராய் (suruthiyAy suruthigaLin mER sudarAy) : the VedAs (scripture); the light that shines on top of the VEdAs; வேதமாகி, வேதங்களுக்கு மேற்பட்ட ஒளிப் பொருளாகி,

வேதாவாய் மாலாய் மேலே சிவமான (vEthAvAy mAlAy mElE sivamAna) : as BrahmA, Vishnu and as the auspicious substance above all of them; பிரமனாகி, திருமாலாகி, இவர்களுக்கு மேற்பட்ட மங்கலப் பொருளானதும்,

தொலைவிலாப் பொருள் இருள் புகாக் கழல் (tholaivilAp poruL iruL pugAk kazhal) : this immortal object, unaffected by the darkness of ignorance is Your Holy Feet; அழிவு என்பதே இல்லாததான பரம்பொருளின், அஞ்ஞான இருள் என்பதே புகமுடியாத அந்தத் திருவடியை

சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ (chUdA nAdA eedE RAthE suzhalvEnO) : why should I wander about without seeking and wearing Your awesome feet on my head and lead an unfulfilled life? முடிமேற் சூடாமலும், நாடாமலும் வாழ்வு ஈடேறாமல் வீணாகத் திரிவேனோ?

திருதராட்டிரன் உதவு நூற்றுவர் (thirutharAttiran uthavu nUtRuvar) : The hundred sons (starting from Duryodhana) sired by DhirutharAshtran, திருதராஷ்டிரன் பெற்ற துரியோதனாதி நூறு பேரும்

சேண் நாடு ஆள்வான் நாளோர் மூவாறினில் வீழ (sEN nAdu ALvAn nALOr mUvARinil veezhath) : fell down dead and were sent to rule the heaven in a war that lasted eighteen days; வீர சுவர்க்க நாட்டை ஆளும்படியாக பதினெட்டே நாட்களில் போர்க்களத்தில் மாண்டு விழவும், சேண் (sEN) : lofty, sky;

திலக பார்த்தனும் உலகு காத்தருள் சீர் ஆமாறே (thilaga pArththanum ulagu kAththaruL seer AmARE) : the famous PaNdava, Arjunan, was given the honour of ruling the world and protecting it சிறந்த அர்ச்சுனனும் உலகை ஆண்டு காத்தருளி சீருடன் வாழுமாறு

தேர் ஊர் கோமான் மருகோனே (thErUr kOmAn marugOnE) : by Krishna, the King, who drove his chariot; and You are that Krishna's nephew! அவனது தேரில் சாரதியாக இருந்து செலுத்தின பெருமான் திருமாலின் மருகனே,

குருதி வேற் கர (kuruthi vERkara) : You hold in Your hand the Spear that has bathed in the blood of the enemies! அசுரர்களின் ரத்தத்தில் தோய்ந்த வேலைக் கரத்திலே ஏந்தியவனே,

நிருத ராக்ஷத கோபா (nirutha rAkshatha kOpA) : You showed Your rage against the demons and rAkshasAs! அரக்கர்களாம் ராட்சதர்களின் மீது கோபம் கொண்டவனே,

நீபா கூதாளா மா மயில் வீரா (neepA kUthA LAmA mayil veerA) : You wear the garlands made of kadappa and kUthALa flowers! You mount the peacock, Oh valorous One! கடப்ப மாலையையும், கூதாளப்பூ மாலையையும் அணிந்தவனே, அழகிய மயில் வீரனே,

குலிச பார்த்திபன் உலகு காத்தருள் (kulija pArththipa nulaku kAththaruL) : You protect the world ruled by IndrA who holds the weapon, Vajra! வஜ்ராயுதத்தை ஏந்திய அரசன் இந்திரனின் தேவலோகத்தைக் காத்தருளின

கோவே தேவே வேளே வானோர் பெருமாளே. (kOvE thEvE vELE vAnOr perumALE.) : Oh Lord, You are God MurugavEL and the Lord of the celestials, Oh Great One! தலைவனே, தேவனே, முருகவேளே, தேவர்களின் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே