409. மதிதனை யிலாத


ராகம் : தன்யாசிஅங்கதாளம் 2½ + 1½ + 1½ (5½)
மதிதனை யிலாத பாவி குருநெறி யிலாத கோபி
மனநிலை நிலாத பேயன்அவமாயை
வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி
வரும்வகை யிதேது காய மெனநாடும்
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை
வினையிகல் விடாத கூளனெனைநீயும்
மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக
மிகுமுன துரூப தானமருள்வாயே
எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை
யியலொடு கடாவு தீர குமரேசா
இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும்
இளமையது தானு மாகநினைவோனே
நதியுட னராவு பூணு பரமர்குரு நாத னான
நடைபெறு கடூர மானமயில்வீரா
நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு
நவமணி யுலாவு மார்பபெருமாளே.

Learn The Song



Raga Dhanyasi (Janyam of 8th mela Thodi)

Arohanam: S G2 M1 P N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R1 S

Paraphrase

மதிதனை இலாத பாவி (mathithanai ilAtha pAvi) : I am a sinner with no intelligence whatsoever; அறிவு என்பதே இல்லாத பாவி,

குருநெறி இலாத கோபி (guru neRi ilAtha kObi) : I am a hot-tempered one never following the directions of my master; குரு சொன்ன வழியில் நிற்காத சினமுள்ளவன்,

மனநிலை நிலாத பேயன் (mana nilai nilAtha pEyan) : I am a devil with an unsteady mind; மனம் ஒரு நிலையில் நிற்காத பேய் போன்று அலைபவன்,

அவமாயை வகையது விடாத பேடி ( avamAyai vagaiyathu vidAtha pEdi) : I am a coward never abstaining from the paths of useless delusion; பயனற்ற மாயையின் பொய்யான போக்குக்களை விடாத பேடி,

தவ நினைவிலாத மோடி ( thava ninaivilAtha mOdi) : I am a ruffian who never thinks about doing penance at all; தவம் என்ற நினைப்பே இல்லாத முரடன்,

வரும் வகை இதேது காயம் என நாடும் விதியிலி (varum vagai ithEthu kAyam ena nAdum vithiyili:) : I am not destined to ponder how this body originated; இந்த உடம்பு எப்படிப் பிறந்தது என்று ஆராயும் பாக்கியம் இல்லாதவன்,

பொலாத லோபி (polAtha lObi) : I am a wicked miser; மிகக் கொடிய கஞ்சன்,

சபை தனில் வராத கோழை (sabaithanil varAtha kOzhai) : I do not have the guts to speak in public; சபைகளில் வந்து பேசும் தைரியம் இல்லாதவன்,

வினை இகல் விடாத கூளன் எனை (vinai igal vidAtha kULan enai): and I am a worthless fellow incapable of freeing myself from the clutches of bad deeds. தீவினையின் வலிமையை நீக்கமாட்டாத பயனற்றவன் ஆகிய என்னை

நீயும் மிகு பரம் அதான ஞான நெறிதனை விசாரமாக ( neeyum mikuparam athAna njAna neRithanai visAramAka): Kindly let me delve into the most supreme subject, namely, the path of True Knowledge நீயும் மிக மேலான ஞானமார்க்கத்தை ஆராய்ச்சி செய்ய

மிகுமுனது ரூப தானம் அருள்வாயே ( rUpa thAnam aruLvAyE): and grant me the gift of Your Divine vision. மிக்கு விளங்கும் உன்னுடைய சாரூபம் (வடிவ தரிசனம்) என்ற பரிசை அடியேனுக்குத் தந்தருள்க.

எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக (ethir varum uthAra sUran iru piLavathAga): The mighty SUran who confronted You in the battlefield was split into two by எதிர்த்து வந்த மிக்க வலிய சூரன் இரண்டு பிளவாகும்படியாக வேலாயுதத்தை

வேலை இயலொடு கடாவு தீர குமரேசா (vElai iyalodu kadAvu theera kumarEsA): the Spear so promptly wielded by You, Oh Brave One, Kumaresa! தக்க முறையில் செலுத்தின தீரனே, குமரேசனே,

இனிய சொல் மறாத சீலர் கருவழி வராமல் (iniya sol maRAtha seelar karuvazhi varAmal): Those wise ones who never forget to speak kind words will not enter another womb for rebirth, இனிய சொற்களையே மறக்காமல் பேசும் பெரியோர்கள் மீண்டும் கருவழியடைந்து பிறவாதபடியும்,

நாளும் இளமையது தானுமாக நினைவோனே (nALum iLamaiyathu thAnu mAka ninaivOnE): and are able to maintain their youth all the time because of Your blessing! எப்போதும் இளமையுடன் விளங்கும்படியும், நினைத்து அருள் செய்பவனே,

நதியுடன் அராவு பூணு பரமர் குருநாதனான (nathiyudan arAvu pUNu paramar guru nAthanAna): You are the Master of the Supreme Lord SivA who wears Ganga River and snakes on His tresses. கங்கைநதியுடன், பாம்பையும் அணிந்த பரமேசுரர் சிவபெருமானுக்கு குருமூர்த்தியானவனே,

நடைபெறு கடூர மான மயில்வீரா (nadaipeRu kadUra mAna mayilveerA): You have the peacock whose strides are fierce, Oh valorous One! நடையிலேயே கடுமையான வேகம் காட்டும் மயிலையுடைய வீரனே,

நகைமுக விநோத ஞான குறமினுடனே குலாவு (nagai muga vinOtha njAna kuRaminudanE kulAvu): You caress VaLLi, the smiling young damsel of the KuRavAs, who has wisdom! சிரித்த முகத்தாளும், அற்புத ஞானத்தைக் கொண்டவளுமான குறப் பெண் வள்ளியுடன் கொஞ்சுகின்றவனே,

நவமணி உலாவு மார்ப பெருமாளே.(navamaNi yulAvu mArba perumALE.): On Your chest dangles the necklace made of nine precious gems, Oh Great One! நவரத்தின மாலை விளங்கும் மார்பை உடைய பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே