415. மூலா நிலமதின்


ராகம்: பந்துவராளிதாளம்: ஆதி
மூலா நிலமதின் மேலே மனதுறு
மோகா டவிசுடர் தனைநாடி
மோனா நிலைதனை நானா வகையிலு
மோதா நெறிமுறைமுதல்கூறும்
லீலா விதமுன தாலே கதிபெற
நேமா ரகசியவுபதேசம்
நீடூ ழிதனிலை வாடா மணியொளி
நீதா பலமதுதருவாயே
நாலா ருசியமு தாலே திருமறை
நாலா யதுசெபமணிமாலை
நாடாய் தவரிடர் கேடா வரிகரி
நாரா யணர்திருமருகோனே
சூலா திபர்சிவ ஞானார் யமனுதை
காலார் தரவருகுருநாதா
தோதீ திகுதிகு தீதீ செகசெக
சோதீ நடமிடுபெருமாளே.

Learn The Song



Raga Pantuvarali (51st mela Alias: kamavardhini)

Arohanam: S R1 G3 M2 P D1 N3 S    Avarohanam :S N3 D1 P M2 G3 R1 S

Paraphrase

Saint Arunagirinathar prays that the Lord should preach him the techniques prescribed by Yoga shastras for raising the life force energy lying coiled like a snake at the Muladhara chakra so that, through His Grace, he may reach higher states of consciousness and attain salvation by uniting with the Sivam. For this the mind should be directed to stay far away from the paths that uncontrolled desire may lead him to.

மனதுறு மோக அடவி (manathuRu mOga Atavi) : The forest of desire which grows in the mind, மனத்தில் பொருந்தியுள்ள ஆசை என்ற காடு

மூலா நிலமதின் மேலே சுடர்தனை நாடி (mUlA nilamathin mElE sudar thanai nAdi) : (without straying into multiple paths) should focus and seek the effulgence/brilliant flame far above the mUlAdhara Peetam (through Yogic practices); (வேறு வழிகளில் திசை மாறி செல்லாமல்) மூலாதார நிலைக்கு மேல் உள்ள ஜோதியினை ஏகாக்கிரக சித்தத்துடன் நாடிச் சென்று (மூலாதாரத்தில் உள்ள விநாயகர் முதல், மேலே சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை முதலிய ஆதாரங்களில் உள்ள பிரமா, விஷ்ணு, ருத்திரன், மகேசுரன் - சதாசிவம் ஆகிய மூர்த்திகளின் திருக்கோலங்கள் பிரசன்னமாகி நல்ல சுடர் தோற்றமுற யோகவழியில் நாடி),

மோனா நிலைதனை நானா வகையிலும் ஓதா (mOnA nilaithanai nAnA vakaiyilum OthA) : and realise the sublime silent state in several ways as prescribed by agamas. மெளன நிலையை, பலவகைகளிலும் கற்று; ஒதா = கற்று;

நெறி முறை முதல் கூறும் லீலா விதம் (neRi muRai muthal kURum leelA vitham) : Your multiple mystical and divine plays show the righteous path நன்னெறி முறை வழி முதலானவற்றைக் கூறுகின்ற காட்டுகின்ற உனது பலவகைய திருவிளையாடல்களின் உண்மை நிலையை ,

உனதாலே கதி பெற ( unathAlE gathi peRa) : which I should discern with Your grace and attain salvation. உன்னருளாலே யான் கண்டு முக்தி பெற, உனதாலே (unathAlE) : உன்னை ஆராய்ந்து கருதுவதன் பயனாக;

நீடூழி தனிலை வாடா மணி ஒளி நீதா (needUzhi thanilai vAdA maNi oLi neethA) : You are the eternal flame that never shows any diminishing even during the great deluge, and You are the dispenser of justice! நீண்ட ஊழிக்காலத்தும் (எப்போதும்) தன் நிலை வாடாத சுயம்பிரகாச மணி ஜோதியே, நீதிமானே,

நேமா ரகசிய உபதேசம் பலமது தருவாயே (nEmA ragasiya upathEsam palamathu tharuvAyE) : Preach me the secret updesa that is governed by moral and ethical rectitude, and grant me the benefit thereof. ஒழுக்க விதிக்கு உட்பட்ட ரகசிய உபதேசம் பயன்தரும் வகையில் உபதேசித்தருளுக. நேமா (nEmA) : நியமம் வாய்ந்த;

The Lord destroys the distressing sorrows faced by ascetics who are seekers of knowledge and delight in chanting scriptures.

நாலா ருசி அமுதாலே (nAlA rusi amuthAlE) : Experiencing the nectar-like sweet taste in myriad ways, பலவகையான இன்பச் சுவையமுதம் பருகிய உணர்ச்சியுடன்,

திருமறை நாலாயது செப மணிமாலை (thirumaRai nAlAyathu sepa maNi mAlai) : the four great scriptures are chanted with meditation beads by அழகிய வேதங்கள் நான்கையும், ஜெபமணிமாலை கொண்டு

நாடாய் தவரிடர் கேடா (nAdAy thavaridar kEdA) : those saints who seek to quest and analyze, and their sufferings are removed by You. நாடிச் சென்று ஆராயும் தவ சிரேஷ்டர்களின் துன்பங்களை அழிப்பவனே,

அரிகரி நாராயணர் திரு மருகோனே (arigari nArAyaNar thiru marugOnE) : You are the nephew of NArAyana (who is chanted by the name of Hari Hari) and Lakshmi! ஹரி ஹரி என்று ஓதப்படும் நாராயணருக்கும் லக்ஷ்மிக்கும் மருமகனே,

சூலாதிபர் சிவ ஞானார் ( sUla Athipar siva njAnAr) : He holds the trident in His hand; He is the embodiment of Saivite Knowledge; சூலாயுதம் ஏந்திய தலைவரும், சிவ ஞானத்தினரும்,

யமன் உதை காலார் தரவரு குருநாதா (yaman uthai kAlAr thara varu gurunAthA) : and He kicked the God of Death (Yaman) by His foot. He is Lord SivA who blessed us with You, Oh Great Master! காலனை உதைத்த திருவடியினருமான சிவபெருமான் தந்தருள வந்த குருமூர்த்தியே,

தோதீ திகுதிகு தீதீ செக (thOthee thikuthiku theethee seka) : To the beat of "thOthee thikuthiku theethee seka" தோதீ திகுதிகு தீதீ செக என்ற தாளத்தில்

செக சோதீ நடமிடு பெருமாளே (seka sOthee nadamidu perumALE.) : You dance as the brilliant light in this world, Oh Great One! ஜெகஜ்ஜோதியாக நடனம் செய்யும் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே