Posts

Showing posts from February, 2015

100. கதிரவனெ ழுந்து

Image
ராகம் : பந்துவராளி அங்கதாளம் (4 + 1½) கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது கடலளவு கண்டு மாய மருளாலே கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள் கவினறந டந்து தேயும் வகையேபோய் இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு மிடமிடமி தென்று சோர்வு படையாதே இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச லிரவுபகல் சென்று வாடி யுழல்வேனோ

99. கடிமாமலர்

ராகம் : கமாஸ் தாளம் : 5½ (2½ + 1½ + 1½) கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு தருமா கடப்ப மைந்த தொடைமாலை கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த கருணா கரப்ர சண்ட கதிர்வேலா வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண் முடியான துற்று கந்து பணிவோனே வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து மலர்வாயி லக்க ணங்க ளியல்போதி அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று னருளால ளிக்கு கந்த பெரியோனே அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த ணருளே தழைத்து கந்து வரவேணும்

98. கடாவினிடை வீரம்

ராகம் : மோகனம் தாளம் : திச்ர ரூபகம் (5) கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங் கடாவினிக ராகுஞ் சமனாருங் கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங் கனாவில்விளை யாடுங் கதைபோலும் இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங் கிராமலுயிர் கோலிங் கிதமாகும் இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின் றியானுமுனை யோதும் படிபாராய்

97. ஒருவரையும் ஒருவர்

ராகம் : சக்ரவாஹம் தாளம் : 2½ + 2½ + 1½ + 2 (8½) ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந் திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந் துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் சனையாலே ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங் கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந் தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் திடுவேனைக் கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன் செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன் கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் டருமாமென் கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந் தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண் கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் தெனையாள்வாய்

96. எந்தத் திகையினும்

ராகம் : மலையமாருதம் தாளம் : ஆதி (1/2 எடுப்பு தள்ளி) எந்தத் திகையினு மலையினு முவரியி னெந்தப் படியினு முகடினு முளபல எந்தச் சடலமு முயிரியை பிறவியி னுழலாதே இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு என்சித் தமுமன முருகிநல் சுருதியின் முறையோடே சந்தித் தரஹர சிவசிவ சரணென கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் குதிபாயச் சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு னந்தத் திருநட மிடுசர ணழகுற சந்தச் சபைதனி லெனதுள முருகவும் வருவாயே

95. இருவினை புனைந்து

ராகம்: அடாணா அங்க தாளம் (5½) 2 + 2 + 1½ இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி னிருவினை யிடைந்து போக மலமூட விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத மிலையென இரண்டு பேரு மழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர் பணியவிண் மடந்தை பாத மலர்தூவப் பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பருமயி லுடன்கு லாவி வரவேணும்