Sivam in Thiruppugazh – Part 3

Please go through Part 1 and
        Part 2

Let's continue to enjoy more Thiruppugazh songs in which Sivam is described in detail. Here's how gaganamum anilamum describes the Universal Matter – as the Ultimate and Eternal Object which remains after the cataclysm (pralaya) at the end of the Yugas and which can be perceived by our minds if it directs its attention inwards and beholds the luminous substance.

யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்கு    மறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க    அருள்வாயே

More attributes of the Super consciousness follow, with the following example from suruthiyaay. The etrnal and immutable substance is said to be the True Significance of the Great Delusion or Maya (மிக்க மேலான பொருளான பெரிய மாயையின் உண்மைத் தத்துவம்) and Saint Arunagiri says that Murugan taught him so that he could speak about it to this world!

சுருதி யாயிய லாயியல் நீடிய
தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள்
தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு      துணையாய்மேல்
துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள்
சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு     சுடர்வீசும்
பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு     பரமாகும்
பரம மாயையி னேர்மையை யாவரு
மறியொ ணாததை நீகுரு வாயிது
பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு     பயனோதான்

Who can forget Jeya Jeya Arunathiri, singing the glory of Thiruvannamalai that is said to be the ultimate manfestation of Siva's Holy Feet in the form of blazing red light that is beyond the reach of Brahma and Vishnu?

செயசெய அருணாத்திரி
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
கடிதலை தெரியாப் படிநிண அருணச்
சிவசுடர் ........


The Lord joyfully beckoned the saint-poet to see the vision of His cosmic dance.
செயசெய சரணாத் திரியெனு மடியெற்
கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் குருநாதா

I would conclude the post by giving the readers further references:

 1. ஊனேறெலும்பு
  தானே புணர்ந்து தானே யறிந்து
  தானே மகிழ்ந்து அருளூறித்
  தாய்போல் பரிந்த தேனோ டுகந்து
  தானே தழைந்து சிவமாகித்
  தானே வளர்ந்து தானே யிருந்த
  தார்வேணி யெந்தை
 2. தசையாகிய
  பசுபா சமும்விட் டறிவா லறியப்
  படுபூ ரணநிட் களமான
  பதியா வனையுற் றநுபூ தியிலப்
  படியே யடைவித் தருள்வாயே
 3. வாசித்துக் காணொணாதது
  வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
  வாய்விட்டுப் பேசொ ணாதது நெஞ்சினாலே
  மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
  மாயைக்குச் சூழொ ணாதது விந்துநாத
  ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
  லோகத்துக் காதி யானது கண்டுநாயேன்
  யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
  யூனத்தைப் போடி டாதும யங்கலாமோ
 4. தறையின் மானுட
  பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
  ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
  பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம்
  பகரொ ணாதது சேரவொ ணாதது
  நினையொ ணாதது வானத யாபர
  பதிய தானச மாதிம னோலயம் வந்துதாராய்
 5. சரியையாளர்க்கும்
  சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
  சகலயோ கர்க்குமெட் டரிதாய
  சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
  டருபரா சத்தியிற் பரமான
  துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
  சுடர்வியா பித்தநற் பதிநீடு
  துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
  சுகசொரூ பத்தையுற் றடைவேனோ
 6. சாங்கரி பாடி
  சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக
  தாண்டவ மாடியவர் வடிவான
  சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்
  தாங்களு ஞானமுற வடியேனுந்
  தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
  தோன்றிய சோதியொடு சிவயோகந்
  தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
  சோம்பினில் வாழும்வகை அருளாதோ
 7. சுட்டது போலாசை
  சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
  துக்கமிலா ஞான சுகமேவிச்
  சொற்கரணா தீத நிற்குணமூ டாடு
  சுத்தநிரா தார வெளிகாண
  மொட்டலர்வா ரீச சக்ரசடா தார
  முட்டவுமீ தேறி மதிமீதாய்
  முப்பதுமா றாறு முப்பதும்வே றான
  முத்திரையா மோன மடைவேனோ
 8. பருதியாய்
  பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்
  பாராய் வானாய் நீர்தீ காலா யுடுசாலம்
  பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி
  னாலா றேழா மேனா ளாயே ழுலகாகிச்
  சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட
  ராய்வே தாவாய் மாலாய் மேலே சிவமான
  தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்
  சூடா நாடா ஈடே றாதே சுழல்வேனோ
 9. பாணிக்குட்படாது
  பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள்
  பாஷிக்கத் தகாது பாதக பஞ்சபூத
  பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை
  பாவிக்கப் பெறாது வாதனை நெஞ்சமான
  ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி
  யேறிப்பற் றொணாது நாடினர் தங்களாலும்
  ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி
  யேறச்செச் சைநாறு தாளைவ ணங்குவேனோ
 10. பொதுவதாய்
  பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்
  இரவு போய்ப்புகல் கின்றவேதப்
  பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு
  வெளிய தாய்ப்புதை வின்றியீறில்
  கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு
  கமுத மாய்ப்புல னைந்துமாயக்
  கரண மாய்த்தெனை மரண மாற்றிய
  கருணை வார்த்தையி ருந்தவாறென்

No comments:

Post a Comment

சீசி முப்புரக் காடு — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song cheechi muppura ( சீசி முப்புர ) in English, click the underlined hyperlink....

Popular Posts