190. ககனமும் அநிலமும்


ராகம் : ஆனந்தபைரவிதாளம்: ஆதி 2 களை
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
கள்ளப் புலாற்கிருமிவீடு
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பைசுமவாதே
யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்குமறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்கஅருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
வெள்ளைப்பி ராட்டிஇறைகாணா
விடதர குடிலச டிலமிசை வெகுமுக
வெள்ளத்தை யேற்றபதிவாழ்வே
வகுளமு முகுளித வழைகளு மலிபுன
வள்ளிக்கு லாத்திகிரிவாழும்
வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே.

Learn The Song


Practice the Swaras For Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi) By Mannar Sudhir Kumar

Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S

Paraphrase

Sanit Arunagirinathar wants his inner eyes to open up and perceive the Ultimate Reality. To be able to see everything just the way it is, an eye of deeper penetration – which is unsullied by memory – has to be opened up. Knowing does not mean gathering information by reading books or listening to someone’s talks, because these can be distorted. Perfect clarity arises only when your inner vision opens up to new ideas that no one can distort. For a true knowledge and vision, one has to delve deep inside with the third eye.

ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை (gaganamum anilamum anal punal nilam amai) : Constituted of the five elements, namely the cosmic space, air, fire, water and earth, அனிலம் (anilam) : wind;

கள்ளப் புலால் கிருமி வீடு ( kaLLa pulAl kirumi veedu) : this stealthy house filled with flesh and germs,

கனல் எழ மொழிதரு சினம் என (kanal ezha mozhi tharu sinam ena) : Fiery sparks fly while speaking, provoked by anger,

மதமிகு கள் வைத்த தோற் பை சுமவாதே ( madham migu kaL vaiththa thOR pai sumavAdhE) : and that in turn is caused by arrogance, falsehood and delusion filling this skinny bag called body. Lest I carry this burden of my body,

யுக இறுதிகளிலும் இறுதியில் ஒருபொருள் (yuga iRudhigaLilum iRudhiyil oru poruL) : The Ultimate and Eternal Object that remains after the cataclysm (pralaya) at the end of the Yugas; இறுதியி(இ)ல் (iruthiyil) : endless; immortal;

உள்ளக்கண் நோக்கும் அறிவூறி (uLLak kaN NOkkum aRivURi) : in order to perceive this Universal Object or substance, my mind should acquire the knowledge to direct its vision inwards, உள்ளக்கண் = அகக்கண், ஞானக் கண்;

ஒளி திகழ் அரு உரு எனு மறை இறுதியில் உள்ள அ(த்)தை நோக்க அருள்வாயே (oLi thigazh aru uru enum maRai iRudhiyil uLLa a(th)thai nOkka aruLvAyE) : so that I am able to behold , with Your blessings, the luminous substance, which has neither shape nor form, and which is seated at the pinnacle of the scriptures;

ம்ருகமத பரிமள விகசித நளின நள் (mrugamadha parimaLa vigasitha naLina naL) : With the pleasant aroma of musk, seated in the center of a fully-blossomed white lotus, கஸ்தூரி மணங்கமழ்வதும், நன்கு மலர்ந்து விளங்குவதுமாகிய, தாமரை மலரில் வீற்றிருக்கும், நளின நள் (naLina naL) : in the center of the lotus;

வெள்ளைப் பிராட்டி இறை காணா (vellai pirAtti iRai kANA) : is Goddess Saraswathi, wearing white dress. Her Consort, BrahmA, was unable to see (the head or feet of) Lord SivA. வெள்ளை பிராட்டி(veLLai piraatti) : white goddess Saraswathi; வெள்ளை பிராட்டி இறை (veLLai piraatti iRai) : Lord Brahma, husband of Saraswathi;

விட தர குடில சடிலமிசை வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதிவாழ்வே ( vidathara kudilasa dilamisai vegumuka veLLaththai yEtra padhivAzhvE) : That Shiva compacted the fierce poison in His throat and carried the thousand-faced river Ganga on His bent tresses; You are the treasure of that ShivA! சடிலம் (chadilam) : matted hair; அடர்ந்திருப்பது, சடை; வெகு முக வெள்ளம் (vegu muga veLLam) : many-faced water-body; Ganges with many tributaries;

வகுளமு முகுளித வழைகளு மலி புன (vaguLamu muguLitha vazhaigaLu mali) : There are plenty of magizha trees and budding surapunnai trees in this millet-field at முகுளித வழைகளும் = குவிந்துள்ள அரும்புகளோடு கூடிய சுரபுன்னையும்,

வள்ளிக் குலாத்தி கிரி வாழும் (vaLLi kulAththi girivAzhum) : the famous mountain, VaLLimalai where she lives;

வனசரர் மரபினில் வருமொரு மரகத (vanasarar marabinil varumoru maragatha) : She hails from the hunter tribe and is of emerald complexion;

வள்ளிக்கு வாய்த்த பெருமாளே.(vaLLikku vAyththa perumALE.) : for that VaLLi, You are the most befitting consort, Oh Great One!

இத் திருப்புகழில் ஒரு கரந்துறை திருப்புகழ் உள்ளது.
கள்ளப் புலால் கிருமிவீடு
கள்வைத்த தோல்பை சுமவாதே
உள்ளக் கண் நோக்கும் அறிவுஊறி
உள்ள அத்தை நோக்க அருள்வாயே
வெள்ளைப் பிராட்டி இறை காணா
வெள்ளத்தை ஏற்ற பதிவாழ்வே
வள்ளிக் குலாத் திகிரி வாழும்
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே