196. ஐந்து பூதமும்

ராகம்: பைரவிதாளம்: மிஸ்ரசாபு (3½)
1½ + 2
ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும்வெகுரூப
அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும்
அந்தி போலுரு வானு நிலவொடுவெயில்காலும்
சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு மேக வடிவம
தன்சொ ரூபம தாக வுறைவதுசிவயோகம்
தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர
சம்ப்ர தாயமொ டேயு நெறியதுபெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
மண்டு பூதப சாசு பசிகெட மயிடாரி
வன்கண் வீரிபி டாரி ஹரஹர
சங்க ராஎன மேரு கிரிதலை
மண்டு தூளெழ வேலை யுருவியவயலூரா
வெந்த நீறணி வேணி யிருடிகள்
பந்த பாசவி கார பரவச
வென்றி யானச மாதி முறுகுகல் முழைகூடும்
விண்டு மேல்மயி லாட இனியக
ளுண்டு காரளி பாட இதழிபொன்
விஞ்ச வீசுவி ராலி மலையுறை பெருமாளே.

Learn The Song



Raga Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R2 S

Paraphrase

In this beautiful song, Saint Arunagirinathar seeks Lord's Grace to attain 'siva-yoga' (whereby the soul realises the omnitude of Šiva and sets to merge Itself with Him without losing its individuality), by following the traditional 'Guru Sampradaya' tradition.

ஐந்து பூதமும் ஆறு சமயமும் (aindhu bUthamum ARu samayamum) : All the five Elements (Earth, Water, Fire, Air and Cosmos), the six religious sects (Saivam, Vaishnavam, SAktham, GANApathyam, Kaumaram and Sauram),

மந்த்ர வேத புராண கலைகளும் (manthra vEdha purANa kalaigaLum) : the ManthrAs, the scriptures, the purANAs, the arts,

ஐம்பதோர் விதமான லிபிகளும் (aimbathOr vidhamAna lipigaLum) : the fifty-one different alphabets (of the Sanskrit language),

வெகுரூப அண்டர் ஆதி சராசரமும் (vegu rUpa aNda rAdhi sarAsaramum) : the DEvAs in different forms and the universe having movable and immovable objects, சராசரம் (charaacharam) : moveable and immoveable, animate and inanimate; அண்டர் (andar) : devas, the celestials;

உயர் புண்டரீகனு மேக நிறவனும் (uyar puNdareeKanum mEga niRavanum) : the Great BrahmA, Vishnu with the complexion of dark cloud, புண்டரீகம் (pundareegam) : lotus; உயர் புண்டரீகன் (uyar pundareegan) : the lofty Brahma (who sits in the lotus flower); மேக நிறவன் (mEga niRavan) : one with the complexion of the cloud; Vishnu;

அந்தி போல் உருவானும் (andhi pOluru vAnu) : One with the form of the reddish setting sun, i.e., Shiva; அந்தி வானம் போன்ற செம்மேனியுடைய உருத்திர மூர்த்தியும்,

நிலவொடு வெயில் காலும் சந்த்ர சூரியர் தாமும் (nilavodu veyil kAlum chandhra sUriyar thAmum) : the moon and the sun throwing cool moonlight and hot sunlight respectively, வெயில் காலும் = வெயிலை வீசுகின்ற,

அசபையும் (asabaiyum) : the ajapa mantra (Hamsa ManthrA),
Japa means repeating or remembering a mantra, and ajapa-japa means constant awareness of the mantra, and what it represents. The practitioner of the Ajapa does not "chant", since the mantra has begun to come naturally, turning it into a constant awareness. அசபை என்பது செபிக்கப் படாமலே பிராணனோடு சேர்ந்து இயங்கும் மந்திரம். மூச்சுக் காற்று ஹ என்ற ஒலியுடன் வெளிப்படுகிறது ஸ என்று ஒலியுடன் உள் நுழைகிறது. இம் மந்திரத்கை எல்லா உயிர்களும் செபிக்கின்றன. ஓரெழுத்து - ஓம் என்பது இதுவே. அசபா மந்திரம் பிரணவத்தை எண்ணுவதே தவிர ஜெபிப்பது இல்லை.

விந்து நாதமும் ஏக வடிவம் (vindhu nAdhamum Eka vadivam) : b(v)inthu and natham (explained in the following section) - a combination of all of these as a single entity,

அதன் சொரூபம் அதாக உறைவது சிவயோகம் (adhan sorUpam adhAga uRaivadhu siva yOgam) : realizing the universal and eternal form of this single entity, and being rooted in it is Siva-yOgA

தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் (thangaL ANava mAyai karuma malangaL pOy) : For the destruction of egoes, delusions and karmas of individuals,

உபதேச குருபர சம்ப்ரதாயமொடு (upadhEsa gurupara sampradhAyamodu) : one has to follow the conventional Master-Student tradition, சம்ப்ரதாயமொடு = தொன்றுதொட்டு வருகின்ற நியமத்துடன்,

ஏயு நெறியது பெறுவேனோ (Eyu neRiyadhu peRuvEnO) : and will I be fortunate to follow the traditional line and obtain Your preaching? ஏயும் நெறி அது பெறுவேனோ = பொருந்துகின்ற வழிய அடியேன் பெறக்கடவனோ?

வந்த தானவர் சேனை கெடிபுக (vandha dhAnavar sEnai kedi puga) : The confronting armies of asuras (demons) were scared away; தானவர் (thAnavar) : asuras; கெடி (kedi) : fear; அச்சம்;

இந்த்ர லோகம் விபூதர் குடிபுக (indhra lOkamvi bUthar kudipuga) : the DEvAs resettled in Indraloka, their homeland; விபூதர் (vibhoothar) : devas;

மண்டு பூத பசாசு பசிகெட (maNdu bUthapa sAsu pasi keda) : the devils and ghosts were able to quench their hunger in the battlefield;

மயிடாரி வன்கண் வீரி பிடாரி (mayidAri vankaN veeri pidAri) : the destroyer of the demon Mahisha, the fierce and valorous Durga, மயிடாரி = மயி(கி)டன் + அரி (may(g)idan+Ari) : annihilator of Mahishasura; Goddess Durga;

ஹரஹர சங்கரா என (harahara sankarA ena) : rejoiced and chanted "Hara Hara, SankarA"

மேரு கிரிதலை மண்டு தூளெழ (mEru girithalai maNdu thUL ezha) : and the peaks of Mount MEru were swept by enormous dust; மகா மேருகிரியில் உச்சியில் நெருங்கிய புழுதி உண்டாகவும்,

வேலை உருவிய வயலூரா (vElai uruviya vayalUrA) : when You threw Your mighty Spear, Oh Lord of VayalUr!

Inside the caves in the hills of Viralimalai, siddha purushas, who constantly wear the sacred ash, are deeply immersed in meditative samadhi. விராலிமலையில் குகைகளில் முனிவர்கள் சமாதி நிலையில் உறைகின்றனர். அவர்கள் திருநீறு தரித்து விளங்குகின்றனர்.

வெந்த நீறணி வேணி இருடிகள் (vendha neeRaNi vENi irudigaL) : The sages with matted lock who wear the holy ash baked in fire on their foreheads,

பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு (bandha pAsa vigAra paravasa vendri yAna samAthi muRugu) : and who have won over the bondages of attachment and desire, and attain the victorious transcendental state of bliss, பந்த பாசத்தில் வசமாகும் தன்மையை வெற்றி பெற்ற சமாதி நிலையில், வென்றி (venRi) : victory; முறுகு (murugu) : to ripen; a mature state; வென்றியான = வெற்றி நிலையான; சமாதி முறுகு = சமாதி நிலையை;

கல் முழை கூடும் ( kal muzhai kUdum) : at the stony caves of this mountain (VirAlimalai); கற்குகையில் கூடுகின்ற; முழை (muzhai) : cave;

விண்டு மேல் மயிலாட (viNdu mEl mayilAda ) : On that mountain, the peacocks dance; விண்டு = மலை;

இனிய கள் உண்டு காரளி பாட (iniyakaL uNdu kAraLi pAda) : the dark beetles, intoxicated from the sweet honey sucked by them, sing; காரளி (கார்+அளி) kAr aLi) : black beetles;

இதழி பொன் விஞ்ச வீசு (idhazhi pon vinja veesu) : and the kondRai (Indian laburnum) trees abundantly shed gold, கொன்றை மரங்கள் பொற்கட்டிகள் போன்ற மலர்களை மிகுதியாக வீசுகின்ற,

விராலி மலையுறை பெருமாளே.(virAli malai uRai perumALE.) : That VirAlimalai is Your abode, Oh Great One!

Chitra Murthy's Lecture


What is Vinthu Natham?

Sivam – God’s natural form(Sorubam), initiates creation with His knowledge (gnanam).
Sakthi – God decides to bestow his grace on souls by activating His energy (sakthi).
Naatham – God’s form changes to sound (naatham) when using His gnanasakthi.
Vinthu – God’s form changes to light (vinthu) when he utilises His kriya sakthi. (Courtesy : Facebook )

Om, Panchatchara, Ganesha mantra, Subramanya mantra and Devi mantra denote the Samashti (universal or paramatma) Pranava; when analyzed i.e., regarded as Vyashti (individual soul), it becomes divided into Natham (sound), Vinthu (light), a, u, and m. ‘a’ represents creation or origin, as it denotes the origin of all sounds. ‘u’ or ‘oo’ represents sthithi, and ‘m’ represents Samharam. B(v)inthu and Natham are the form and sound of these letters. The symbol of Vinthu is a circle and that of Natham is a line. These two in fact, constitute the Pranava symbol o – or உ (Pillayar suzhi).

மனித உடலும் பஞ்ச பூதங்களும்

உலகம் என்பது மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களை உள்ளடக்கியதாகும். மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்சபூதங்கள். இந்த உலகில் தோன்றியுள்ள சகல ஜீவராசிகளும் பஞ்சபூத கலப்பால் ஆனது. நாம் அறியகூடிய இந்த பௌதீக பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களின் வெவ்வேறு விகிதாச்சார கலவையால் உருவானது. நம் உடலும் இந்தப் பஞ்சபூத கலப்பின் அடிப்படையிலேயே உண்டானது. பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள், சூக்கும நிலையில் உள்ள ஆகாயம் முதலிய பஞ்சபூதங்கள், குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாகும் பருப்பொருளின் (ஸ்தூலம்) (Matter) தோற்றத்திற்கு வரும் செயல்முறை தான் பஞ்சீகரணம் (Panchikarana). பஞ்சீகரணம் எனில் ஐந்தின் சேர்க்கை என்று பொருள். ஸூக்ஷ்ம பஞ்சபூதங்கள் ஒன்று கலந்து ஸ்தூல பஞ்சபூதங்கள் ஆகிறது. ஐம்பூதங்களில், ஒவ்வொரு பூதமும் இருகூறாக ஆகி, அதில் ஒரு கூறை நிறுத்திக்கொண்டு, மற்றொரு கூறை நான்கு கூறுகள் ஆக்கி, அந்த நான்கும் மற்ற நான்கு பூதங்களுக்குக் கொடுத்தும் வாங்கியும் தம்மில் கலப்பது பஞ்சீகரணம் எனப்படும். ஆகாயம் துவாரமாகி மற்ற பூதங்களுக்கு இடம் கொடுக்கும் இயல்பானது. வாயு சலித்து மற்ற பூதங்களை திரட்டும் இயல்பானது. தேயு சுட்டு ஒன்றாக்கும் இயல்பானது. அப்பு குளிர்வித்து பதம் செய்யும் இயல்பானது. பிருதிவி கடினமாய் ஆக்கும் இயல்பானது. இவ்வாறு பஞ்சபூத கலப்பால் உடல் உரு எடுக்கிறது. 1) எலும்பு, தோல், தசை, மயிர், நாடி நரம்புகள் முதலியவை மண்ணின் தன்மையைகவை. 2) இரத்தம், கொழுப்பு, சீழ், விந்து, சிறுநீர், மூளை போன்றவை நீரின் தன்மையைக் கொண்டவை. 3) சோம்பல், காமம், கோபம், அச்சம், தூக்கம், இறுமாப்பு போன்ற உணர்வுகள் தீயின் தன்மையைக் கொண்டவை. 4) ஓடுதல், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் போன்ற உடலின் செயல்கள் காற்றின் தன்மையைக் கொண்டவை. 5) ஆசை, உட்பகை, மோகம், வெறி, வஞ்சனை போன்ற குணங்கள் ஆகாய கூறுகள் என்றும் கூறுவார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே