206. வாட்பட


ராகம் : சாருகேசி தாளம்: கண்டசாபு (2½)
வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
மாப்புடைத் தாளரசர்பெருவாழ்வும்
மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்
வாழ்க்கைவிட் டேறுமடியவர்போலக்
கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
கோத்தமெய்க் கோலமுடன்வெகுரூபக்
கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
கூத்தினிப் பூரையிடஅமையாதோ
தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
சாய்த்தொடுப் பாரவுநிள் கழல்தாவிச்
சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
தாழ்க்கவஜ் ராயுதனுமிமையோரும்
ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
மாய்க்குடிக் காவலவு ததிமீதே
ஆர்க்குமத் தானவரை வேற் கரத் தால்வரையை
ஆர்ப்பெழச் சாடவலபெருமாளே.

Learn The Song




Raga Charukesi (26th mela)

Arohanam:S R2 G3 M1 P D1 N2 S   Avarohanam: S N2 D1 P M1 G3 R2 S

Paraphrase

வாட்படச் சேனைபட ஓட்டி ஒட்டாரை (vAtpada sEnaipada Otti ottArai) : They chase away the armies of the enemies with swords, ஒட்டார் (ottAr) : enemy;

இறுமாப்புடைத்து ஆள் அரசர் பெரு வாழ்வும் (iRumAppudaiththu AL arasar peru vAzhvum) : and are conceited about their might; but even the royal lives

மாத்திரைப் போதில் இடு காட்டினிற் போம் ( mAththiraip pOdhilidu kAttinil pOmena) : will have to eventually end in the cremation ground in an instant.

என இல் வாழ்க்கைவிட்டு ஏறும் அடியவர் போல (ena ilvAzhkkai vittERum adiyavar pOla) : Like Your devotees who, realizing the transience of life, move away from the ocean of family life;

கோள் படப் பாத மலர் பார்த்து இளைப்பாற ( kOtpada pAdha malar pArththu iLaippARa) : I too want to have a purposeful goal in my life which is to rest in peace by simply looking at Your Lotus Feet! கோள் பட (kOL pada) : to have a goal;

வினை கோத்த மெய்க் கோலமுடன் வெகுரூபக் கோப்பு உடைத்தாகி (vinai kOththa meyk kOlamudan vegurUpa kOppudaiththAgi) : My body is wrapped in all the karmas; yet I end up adorning it in several different ways; கோப்பு உடைத்தாகி (koppu udaiththAgi) : being adorned;

அலமாப்பினிற் பாரி வரு கூத்து (alamAppinil pArivaru kUththu) : This comedy of a game finally ends up in miseries. துன்பத்தை தந்து வளரும் இந்த விளையாட்டு; அலமாப்பு (alamAppu) : sorrow, துன்பம்; பாரி வரும் (paari varum) : growing;

இனிப் பூரையிட அமையாதோ (inip pUraiyida amaiyAdhO) : will (this game) have an end? (இந்த ஆட்டத்தில்) இனியேனும் இந்தப் பயனற்றவனை நீ தள்ளுதல் ஒரு முடிவு பெறாதோ?; பூரை (poorai) : end; நிறைவு, முடிவு

தாள் படக் கோப விஷ பாப்பினில் (thAtpdak kOba visha pAppinil) : Just like a venomous cobra springs up with anger when rattled by foot, பாப்பு = பாம்பு;

பாலன் மிசை சாய் தொடுப் பாரவு நிள் கழல் தாவி சாற்றும் அக் கோரவுரு கூற்று உதைத்தார் (bAlan misai sAyththodup pAravu niL kazhal thAvi sAtrum ak gOravuru kUtru udhaiththAr ) : Lord SivA too emerged with His long leg and kicked the evil-looking Yaman when he went ferociously after the boy, MArkkandEyan; சாய் = குறிக் கொண்டு; தொடு பாரவு = தொடர்தல் மிகுந்தவுடன்; நி(நீ)ள் கழல் தாவி (niL kazhal thaavi) : நீண்ட திருவடியை நீட்டி; கூற்று (kootru): Yama;

மவுலி தாழ்க்க (mavuli thAzhkka) : That mighty SivA bowed down before You (to listen to Your preaching of VEdAs).

வஜ்ராயுதனும் இமையோரும் ஆட்பட (vajrAyudhanum imaiyOrum Atpada) : IndrA, who holds the weapon Vajra, and all DEvAs were subdued by You.

சாம பரமேட்டியைக் காவலிடும் ஆய்க்குடிக் காவல (sAmapara mEttiyaik kAvalidum Aykkudik kAvala): Gold-complexioned BrahmA was imprisoned by You (due to His inability to interpret the VEdAs). You are the ruler and protector of this place, Aaykkudi. சாமம் (sAmam) : golden; பரமேட்டி(paramEtti): Supreme being; here, it refers to Lord Brahma;

உததி மீதே ஆர்க்கும் அத் தானவரை (udhadhimeedhE Arkkumath thAnavarai) : The asura armies were making boisterous noise on the seas; ஆர் (Ar) : struggle, fight; உததி (uthathi) : sea;

வேற் கரத்தால் வரையை ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே (vEl karaththAl varaiyai Arppezhach chAda vala perumALE.) : and You were able to destroy them (the asura army) and the mount, Krounchagiri, with a thunderous sound by throwing the Spear in Your hand, Oh Great One! ஆர்ப்பு (aarppu) : noise; சாட வ(ல்)ல (saada va(l)la) : having the ability to fight;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே