217. மதியால் வித்தகனாகி Get link Facebook X Pinterest Email Other Apps January 29, 2016 ராகம் : பூர்விகல்யாணி தாளம் : கண்டசாபு (2½) மதியால்வித் தகனாகி மனதாலுத் தமனாகிப் பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே நிதியேநித் தியமேயென் நினைவேநற் பொருளாயோய் கதியேசொற் பரவேளே கருவூரிற் பெருமாளே. Continue Reading»
216. நித்தப் பிணி Get link Facebook X Pinterest Email Other Apps January 28, 2016 ராகம் : கீரவாணி தாளம்: ஆதி (2 களை) நித்தப் பிணிகொடு மேவிய காயமி தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு நிற்பொற் ககனமொ டாமிவை பூதக லவைமேவி நிற்கப் படுமுல காளவு மாகரி டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு மடவாண்மை எத்தித் திரியுமி தேதுபொ யாதென வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி லுழல்வேனை எத்திற் கொடுநின தாரடி யாரொடு முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற இனிதாள்வாய் Continue Reading»
215. தசையாகிய Get link Facebook X Pinterest Email Other Apps January 26, 2016 ராகம் : கீரவாணி தாளம் : ஆதி தசையா கியகற் றையினால் முடியத் தலைகா லளவொப் பனையாயே தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற் றவிரா வுடலத் தினைநாயேன் பசுபா சமும்விட் டறிவா லறியப் படுபூ ரணநிட் களமான பதியா வனையுற் றநுபூ தியிலப் படியே யடைவித் தருள்வாயே Continue Reading»
214. எந்தன் சடலங்கம் Get link Facebook X Pinterest Email Other Apps January 23, 2016 ராகம் : சஹானா தாளம் : திச்ர ஏகம் எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை யென்றுந்துயர் பொன்றும்படி யொருநாளே இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை யென்றும்படி பந்தங்கெட மயிலேறி வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை மண்டும்படி நின்றுஞ்சுட ரொளிபோலும் வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும் வண்டன்தமி யன்றன்பவம் ஒழியாதோ Continue Reading»
213. விந்து பேதித்த Get link Facebook X Pinterest Email Other Apps January 12, 2016 ராகம் : பூர்விகல்யாணி கண்டசாபு(2½) 1 + 1½ விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு மின்சரா சர்க்குலமும் வந்துலாவி விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு மிஞ்சநீ விட்டவடி வங்களாலே வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி வந்துதா இக்கணமெ யென்றுகூற மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி வந்துசே யைத்தழுவல் சிந்தியாதோ Continue Reading»
212. விரகற நோக்கியும் Get link Facebook X Pinterest Email Other Apps January 12, 2016 ராகம் : மனோலயம் தாளம் : ஆதி விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும் விழிபுனல் தேக்கிட அன்புமேன்மேல் மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற விழைவுகு ராப்புனை யுங்குமார முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை முலைநுகர் பார்த்திப என்றுபாடி மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட முழுதும லாப்பொருள் தந்திடாயோ Continue Reading»
211. சந்தனம் திமிர்ந்து Get link Facebook X Pinterest Email Other Apps January 09, 2016 ராகம் : ரஞ்சனி தாளம் : ஆதி திச்ர நடை (12) சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு சண்ப கஞ்செ றிந்தி லங்கு திரடோளுந் தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச மயிலேறித் திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று சென்ற சைந்து கந்து வந்து க்ருபையோடே சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து செம்ப தம்ப ணிந்தி ரென்று மொழிவாயே Continue Reading»
210. ஓங்கும் ஐம்புலன் Get link Facebook X Pinterest Email Other Apps January 07, 2016 ராகம் : ஆரபி அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 + 3 (10½) ஓங்கு மைம்புல னோட நினைத்தின் பயர்வேனை ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் தனையாள்வாய் வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் புகடாவி வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் குமரேசா மூங்கி லம்புய வாச மணக்குஞ் சரிமானு மூண்ட பைங்குற மாது மணக்குந் திருமார்பா காங்கை யங்கறு பாசில் மனத்தன் பர்கள்வாழ்வே காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் பெருமாளே. Continue Reading»
209. தோல் எலும்பு Get link Facebook X Pinterest Email Other Apps January 06, 2016 ராகம் : ஸிந்து பைரவி தாளம் : ஆதி திஸ்ர நடை (12) தோலெலும்பு சீநரம்பு பீளைதுன்று கோழைபொங்கு சோரிபிண்ட மாயுருண்டு வடிவான தூலபங்க காயம்வம்பி லேசுமந்து நான்மெலிந்து சோருமிந்த நோயகன்று துயராற ஆலமுண்ட கோனகண்ட லோகமுண்ட மால்விரிஞ்ச னாரணங்க ளாகமங்கள் புகழ்தாளும் ஆனனங்கள் மூவிரண்டு மாறிரண்டு தோளுமங்கை யாடல்வென்றி வேலுமென்று நினைவேனோ Continue Reading»
208. சுருதி மறைகள் Get link Facebook X Pinterest Email Other Apps January 04, 2016 ராகம் : காபி தாளம் : அங்க தாளம் (5½) சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள் துகளி லிருடி யெழுபேர்கள் சுடர்மூவர் சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் தொலைவி லிடுவி னுலகோர்கள் மறையோர்கள் அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி அரியு மயனு மொருகோடி யிவர்கூடி அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும் அறிவு ளறிவு மறிவூற அருள்வாயே Continue Reading»
207. வால வயதாகி Get link Facebook X Pinterest Email Other Apps January 04, 2016 ராகம் : ஆனந்தபைரவி சதுச்ர துருவம் (கண்ட நடை) வாலவய தாகியழ காகிமத னாகிபணி வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல் வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு பொருள்தேடி வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ் வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல சிலநாள்போய்த் தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி யுறுநாளிற் சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல் சூழலுற மூலகசு மாலமென நாறியுட லழிவேனோ Continue Reading»