208. சுருதி மறைகள்


ராகம் : காபி தாளம்: அங்க தாளம் (5½)
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்
துகளி லிருடி யெழுபேர்கள் சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லிடுவி னுலகோர்கள்மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியு மயனு மொருகோடியிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறிவு மறிவூறஅருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
மகர சலதி அளறாகமுதுசூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடிவருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத
நமனும் வெருவி யடிபேணமயிலேறி
நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
நகரி யுறையு மிமையோர்கள் பெருமாளே

Learn The Song




Raga Kapi (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P N3 S    Avarohanam: S N2 D2 N2 P M1 G2 R2 S


Paraphrase

சுருதி மறைகள் (surudhi maRaigaL) : The VEdAs and scriptures like the Agamas and the Upanishads,

இருநாலு திசையில் அதிபர் முநிவோர்கள் (iru nAlu dhisaiyil adhipar munivOrgaL) : the protectors of the eight cardinal directions (AshtadhikpAlakAs), the ascetics, எட்டு திசைகளையும் காக்கும் அஷ்டதிக் பாலர்களும்; முனிவர்களும்; (இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என திக்பாலர்கள் எண்மர்)

துகளில் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் (thugaLil irudi yezhu pErgaL sudar mUvar) : the seven unblemished sages, and the three great flames [namely, the sun, the moon and fire (agni), குற்றமற்ற ஏழு ரிஷிகளும்; சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று சுடர்களும்; துகள் இல் (thugaL il) : blemishless, faultless; இருட ி(irudi) : rishis, sages; (அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காஸ்யபர், அங்கீரஸர் என்று ரிஷிகள் எழுவர்;)

சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் (solavil mudivil mugiyAdha pagudhi purudar navanAdhar ) : the prakrithi purushas (who are in charge of the five elements) who are beyond any description, the nine chief siddhas known as NavanAthar, பகுதி புருடர் (pagudhi purudar) : prakriti purushas; சொலவில் = சொல்ல முடியாத; முகியாத = முடியாத;

தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் (tholaivil uduvin ulagOrgaL maRaiyOrgaL) : those residing in distant galaxies, the experts in scriptures, உடு( udu): stars;

அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சதகோடி (ariya samaya morukOdi amarar saraNar satha kOdi) : the millions of unique religions, the Celestials, the millions of devotees, சத கோடி சரணர் (satha kOdi saraNar) : hundred crores of Veera Saiva elders;

அரியும் அயனும் ஒருகோடி இவர் கூடி (ariyum ayanum oru kOdi ivar kUdi) : Vishnu, BrahmA and million others - all of them got together

அறிய அறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவுள் அறியும் அறிவூற அருள்வாயே (aRiya aRiya aRiyAtha adigaL aRiya adiyEnum aRivuL aRiyum aRivURa aruLvAyE) : to perceive and know Your hallowed feet but failed; kindly bless me so that the knowledge to discern Your two feet springs like a fountain within my intellect! அறிய அறிய அறியாத (aRiya aRiya aRiyaatha) : that which cannot be known by intellectual investigation;

வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியும் அழிவாக (varaigaL thavidu podiyAga nirudhar pathiyum azhivAga) : All the mountains (including Mount Krouncha) were smashed into powder; all the dwelling places of the demons were destroyed; வரை(varai): mountains; நிருதர் (niruthar) : asuras; பதி(pathi) : village/town;

மகர சலதி அளறாக முதுசூரும் மடிய (magara saladhi aLaRAga mudhusUrum madiya): the seas full of makara fish dried up and became slushy; the old SUran was killed; மகர சலதி (magara saladhi ): sea filled with makara fish; அளறு(aLaRu) : muddy;

அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக (alagai nadamAda vijaya vanithai magizhvAga) : the devils began to dance; the Goddess of Victory (Vijaya Lakshmi) was delighted; அலகை (alagai) : devils;

மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள் நரிகள் கொடிகள் பசியாற (mavuli sidhaRi irai thEdi varu nAygaL narigaL kodigaL pasiyARa udhira nadhigaL alai mOdha) : the scattered heads of the demons satiated the hunger of dogs, foxes and crows coming in search of food;

உதிர நதிகள் அலைமோத (udhira nadhigaL alai mOdha) : rivers of blood gushed with rippling waves;

நமனும் வெருவி அடிபேண (namanum veruvi adi pENa) : and Yaman, the God of Death, was terrified and fell at Your feet;

மயிலேறி நளின உபய கரவேலை முடுகு முருக (mayilERi naLina ubaya karavElai mudugu muruga) : when You, mounting the peacock, hurled swiftly the spear from Your lotus-like glorious hand, Oh MurugA! நளின (naLina) : lotus-like; முடுகு ( mudugu): swiftly;

வடமேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே.(vadamEru nagari uRaiyum imaiyOrgaL perumALE.) : Your abode is the town of UththaramErUr, and You are the Lord of the Celestials, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே