216. நித்தப் பிணி

ராகம் : கீரவாணிதாளம்: ஆதி (2 களை)
நித்தப் பிணிகொடு மேவிய காயமி
தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
நிற்பொற் ககனமொ டாமிவை பூதகலவைமேவி
நிற்கப் படுமுல காளவு மாகரி
டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
நெட்டுப் பணிகலை பூணிடு நானெனுமடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையிலுழல்வேனை
எத்திற் கொடுநின தாரடி யாரொடு
முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுறஇனிதாள்வாய்
தத்தத் தனதன தானன தானன
தித்தித் திமிதிமி தீதக தோதக
டத்தக் குடகுகு தாகுட தீகுடவெனபேரிச்
சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட
சர்ப்பச் சதமுடி நாணிட வேலதையெறிவோனே
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
சத்திக் கிடமருள் தாதகி வேணியர்
வெற்புப் புரமது நீறெழ காணியரருள்பாலா
வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி
சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள
வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவியபெருமாளே.

Learn The Song


Raga Keeravani (21st mela)

Arohanam: S R2 G2 M1 P D1 N3 S    Avarohanam: S N3 D1 P M1 G2 R2 S

Paraphrase

நித்த(ம்) பிணி கொடு மேவிய காயம் இது (niththa(m) piNi kodu mEviya kAyam ithu) : This body is afflicted everyday by diseases .

அப்புப் பிருதிவி வாயுவு(ம்) தேயுவு(ம்) நில் பொன் ககனம் ஒடு ஆம் இவை பூத கலவை மேவி நிற்கப்படும் (appu piruthivi vAyuvu(m) thEyuvu(m) nil pon gaganam odu Am ivai pUtha kalavai mEvi niRkappadum) : It stands as a combination of the five elements, namely, water, earth, air, fire and the bright shining sky. தேயு (theyu) : fire; ககனம் (gaganam) : sky;

உலகு ஆளவும் மாகர் இடத்தைக் கொளவுமே நாடிடும் ஓடிடு(ம்) (ulagu ALavum mAgar idaththai koLavumE nAdidum Odidu(m)) : Seeking to rule the entire world and to grab the land of the celestials, it (the body) runs about everywhere. மாகர் இடம் (maagar idam) : the celestial world/place;

நெட்டுப் பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை எத்தித் திரியும் (nettup paNi kalai pUN idu nAn enum mada ANmai eththith thiriyum) : It proudly puts on jewels and clothes and wanders deceitfully with a foolish ego. நெட்டு (nettu) : arrogance; பணி (paNi ) : Jewel; ornament; ஆபரணம்; கலை (kalai) : dress; எத்தி (eththi) : deceiving;

இது ஏது பொ(ய்)யாது என உற்றுத் தெளிவு உணராது மெய் ஞானமொடு இச்சைப் பட அறியாது பொய் மாயையில் உழல்வேனை (ithu Ethu po(y)yAthu ena utRuth theLivu uNarAthu mey njAnamodu icchaip pada aRiyAthu poy mAyaiyil uzhalvEnai) : Thinking confidently that this body will last forever without fail, and not desiring to acquire true knowledge, I have been embroiled in delusory worldly affairs. இது ஒருபோதும் பொய்யாகாமல் நிலைத்திருக்கும் என்று திடமாக நினைத்து, உண்மையைத் தெளிந்து உணராமல் மெய்ஞ்ஞானத்தைத் தெளிந்து அறிய இச்சை கொள்ளாமல், பொய்யான உலக மாயைகளில் உழலுகின்ற அடியேனை,

எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது இட்டுத் திருவடியாம் உயர் வாழ்வு உற இனிது ஆள்வாய் (eththil kodu ninathu Ar adiyArodum uyththittu unathu aruLAl uyar njAna amuthu ittuth thiruvadiyAm uyar vAzhvu uRa inithu ALvAy) : Taking me over even by hoodwink, kindly help me reach Your devotees and obtain, through Your grace, the divine nectar of Knowledge and lead a great life at Your hallowed feet! தந்திரமாகவாவது நீ ஆட்கொண்டு, உனது மெய் அடியார்களுடன் என்னைக் கொண்டு சேர்ப்பித்து, உன் திருவருளால் சிறந்த ஞான அமுதத்தைத் தந்து மேன்மை மிக்க அழகிய திருவடியாகிய மிக சிறந்த வாழ்வை நான் அடையும்படி இனிதே ஆண்டருள்வாயாக! எத்தில் கொடு (eththil kodu) : using tricks/deception;

தத்தத் தனதன தானன தானன தித்தித் திமிதிமி தீதக தோதக டத்தக் குடகுகு தாகுட தீகுட என பேரி சத்தத்து ஒலி திகை தாவிட (thaththath thanathana thAnana thAnana thiththith thimithimi theethaka thOthakadaththak kudakuku thAkuda theekuda ena pEri saththaththu oli thikai thAvida) : The drums beat to the rhythm (thanathana thAnana..) that resounded in all the directions; தத்தத் தனதன.......தாகுட திகுட என்று ஒலிக்கும் முரசின் பேரொலி திசைகளைக் கடந்து தாவிச் செல்ல,

வானவர் திக்குக் கெட வரு(ம்) சூரர்கள் தூள்பட சர்ப்பச் சத முடி நாணிட வேல் அதை எறிவோனே (vAnavar thikkuk keda varu(m) sUrargaL thULpada sarppac chatha mudi nANida vEl athai eRivOnE) : all the cardinal directions of the celestials were shaken and thrown astray; the confronting demons were shattered to pieces; and the hundred hoods of the great serpent (AdhisEshan) were terrified when You wielded the spear, Oh Lord! தேவர்கள் வாழும் திசைகள் கலங்கிக் கெட வந்த சூரர்கள் தூளாக, ஆதிசேடனது நூற்றுக்கணக்கான பணாமுடிகள் அச்சம் கொள்ள, வேலாயுதத்தைச் செலுத்தினவனே!

வெற்றிப் பொடி அணி மேனியர் கோகுல சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர் வெற்புப் புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா (vetRip podi aNi mEniyar gOkula saththikku idam aruL thAthaki vENiyar veRpup puram athu neeRu ezha kANiyar aruL pAlA) : Lord Shiva – who smears victory-conferring holy ash all over His hallowed body, who offered the left side of His body to Lord VishNu (as Sankara NArAyaNar), who wears the garland of Aththi (mountain ebony) on His matted hair graciously, and who burnt the mountain-like thripura cities by merely looking at it – delivered You! ஜெயத்தையே தரும் திருநீற்றை அணிந்த திருமேனியர், ஆயர்பாடியில் வளர்ந்த சத்தியாகிய திருமாலுக்குத் தமது இடது பாகத்தைத் தந்தருளிய ஆத்திமாலை சடையர், மலை போன்ற புரங்கள் சாம்பலாம்படிக் கண்டவர் ஆகிய சிவபிரான் அருளிய குழந்தையே! வெற்றிப் பொடி (vetRi podi) : The sacred ash that brings victory; கோகுல சத்தி (gOkula saththi) : The energy/shakti form of Krishna/Vishnu who grew up in Gokulam; சிவபெருமானிடம் இருந்து அவரது அருளாகவே வெளிப்பட்ட பராசக்தியின் புருஷாகார வடிவமே திருமால். சிவபரம்பொருளின் சத்திகளுள் ஒரு சத்தியாக திருமால் சிவனின் ஒரு பாகத்தில் உள்ளார்.

வெற்புத் தட முலையாள் வ(ள்)ளி நாயகி சித்தத்து அமர் குமரா ( veRputh thada mulaiyAL va(L)Li nAyaki siththaththu amar kumarA) : You reside in the heart of Goddess VaLLi who is bestowed with mountain-like bosom, Oh KumarA! வெற்பு(veRpu) : mountain;

எமை ஆள் கொள வெற்றிப் புகழ் கருவூர் தனில் மேவிய பெருமாளே. (emai AL koLa vetRip pukazh karuvUr thanil mEviya perumALE.) : In order to take over devotees like us, You are seated in this gloriously triumphant place, KaruvUr, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே