209. தோல் எலும்பு


ராகம்: ஸிந்து பைரவிதாளம்: ஆதி திஸ்ர நடை (12)
தோலெலும்பு சீநரம்பு பீளைதுன்று கோழைபொங்கு
சோரிபிண்ட மாயுருண்டுவடிவான
தூலபங்க காயம்வம்பி லேசுமந்து நான்மெலிந்து
சோருமிந்த நோயகன்றுதுயராற
ஆலமுண்ட கோனகண்ட லோகமுண்ட மால்விரிஞ்ச
னாரணங்க ளாகமங்கள் புகழ்தாளும்
ஆனனங்கள் மூவிரண்டு மாறிரண்டு தோளுமங்கை
யாடல்வென்றி வேலுமென்றுநினைவேனோ
வாலசந்த்ர சூடிசந்த வேதமந்த்ர ரூபியம்பை
வாணிபஞ்ச பாணிதந்தமுருகோனே
மாயையைந்து வேகமைந்து பூதமைந்து நாதமைந்து
வாழ்பெருஞ்ச ராசரங்களுரைவோனே
வேலையன்பு கூரவந்து ஏகதந்த யானைகண்டு
வேடர்மங்கை யோடியஞ்ச அணைவோனே
வீரமங்கை வாரிமங்கை பாரின்மங்கை மேவுகின்ற
மேருமங்கை யாளவந்தபெருமாளே

Learn The Song




Raga Bhairavi (Janyam of 8th mela Hanumatodi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R2 S

Paraphrase

தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை (thOl elumbu see narambu peeLai thundru kOzhai) : The skin, the bones, the pus, the nerves, discharge from the eyes, excess phlegm,

பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு வடிவான (pongu sOri pinda mAy urundu vadivAna ) : and the gushing blood have all rolled into a lump to form this shape of the body; சோரி (sOri) : blood;

தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து சோரும் (thUla banga kAyam vambilE sumandhu nAnmelindhu sOrum:) : I am carrying this gross body, the source of all sins, and I am becoming feeble, பங்க காயம் (banga kAyam) : body as a repository of sin; சோரும் (sOrum) : getting fatigued/tired;

இந்த நோய் அகன்று துயராற ( indha nOy agandru thuyarARa) : In order that this disease of birth is terminated and for an end to my misery,

ஆலம் உண்ட கோன் அகண்ட லோகம் உண்ட மால் விரிஞ்சன் (Alam unda kOn aganda lOgam unda mAl virinjan) : Lord SivA who consumed poison, Vishnu who devoured the entire universe, BrahmA, விரிஞ்சன் (virinjan) : Brahma;

ஆரணங்கள் ஆகமங்கள் புகழ் தாளும் (AraNangaL AgamangaL pugazh thALum) : Your two feet, which (the trimurtis mentioned above), all the vedic scriptures, and the Agama texts praise, ஆரணங்கள்(AraNangaL) : vedas;

ஆனனங்கள் மூவிரண்டும் ஆறிரண்டு தோளும் (AnanangaL mUvirandum ARirandu thOLum) : Your six hallowed faces, Your twelve shoulders;

அங்கை ஆடல் வென்றி வேலும் என்று நினைவேனோ ( angai Adal vendri vElumendru ninaivEnO) : and the swinging spear held triumphantly in Your exquisite hand; when will I think of these? ஆடல் வென்றி வேல் (Adal vendRi vEl) : the spear that becomes victorious in battles;

வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை (vAla chandRa chUdi chandha vEdha manthra rUpi ambai) : He (SivA) wears the young crescent moon on His tress; She is the embodiment of all elegant VEdic ManthrAs; She is the Universal Mother; சந்த (chantha) : beautiful; வால சந்த்ர (vaala chanthra) : young crescent moon;

வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே (vANi pancha pANi thandha murugOnE) : She holds Goddess Saraswathi as a part of Herself; She holds the five flowery arrows as Her weapons; (She is PArvathi). You were delivered to this world by those SivA and PArvathi, Oh MurugA,

மாயை ஐந்து வேகம் ஐந்து பூதம் ஐந்து நாதம் ஐந்து (mAyai aindhu vEgamaindhu bUthamaindhu nAdhamaindhu) : The five delusions, the five forces, the five elements and the five sounds
மாயை ஐந்து = அசுத்த மாயைக்கு உரிய காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்ற ஐந்துக்குள்ளும், வேகம் ஐந்து = ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், சுவை என்ற ஐந்து தன்மாத்திரைகளுக்குள்ளும், பூதம் ஐந்து = மண், நீர், தீ, காற்று, வெளி என்ற ஐம்பூதங்களுக்குள்ளும், நாதம் ஐந்து = சிவம் (நாத ரூபமானது தூய அறிவாலானதுமான பரம்பொருளின் முழுமையான நனவிலி நிலை), சக்தி (விந்து சக்தியாக இயங்கிக் சிவத்துடன் இணைந்து ஏனைய தத்துவங்களை உருவாக்க ஆரம்பிக்கும் இறைவனின் திருவருட்சக்தியின் நிலை), சதாசிவம் (சிவ-சக்தி இணைவால் செயலும், அறிவும் சமநிலையில் வைத்து ஏனைய தத்துவங்களின் தோற்றங்களை தூண்டும் நிலை), ஈசுரம் ( செயலற்ற நிலையில் இருக்கும் ஆன்மாகளுக்குள் இறையறிவை மறைத்தலுக்குள்ளாக்கும் செயல்பாடு), சுத்தவித்தை (படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலுக்கு அடிப்படையான இறைதத்துவம் முழுமையாகச் செயற்பட, செயல் (கிரியாசக்தி) பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும்) என்று ஐந்துக்குள்ளும்,

வாழ் பெரும் சராசரங்கள் உறைவோனே (vAzh perum sarAsa rangaL uRaivOnE) : You dwell (in all the above, as well as) in the moving and stationary objects of this world; உலகில் உள்ள பெரிய இயங்குதல் உள்ளதும், இயங்குதல் இல்லாததும் ஆகிய உயிர்கள் எல்லாவற்றுக்குள்ளும் பிரியாது உறைபவரே!

வேலை அன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு (vElai anbu kUra vandha Eka dhantha yAnai) : At the opportune time, seeing the elephant with a single tusk that approached her with love, வேலை/வேளை: வேண்டிய வேளையில்;

வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே (kaNdu vEdar mangai Odi anja aNaivOnE) : VaLLi, the damsel of the hunters, was so scared that she ran towards You, and You hugged her.

வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற ( veera mangai vAri mangai pArin mangai mEvugindra) : Veera Lakshmi, the Goddess of valour; Lakshmi, the daughter of the milky ocean; and the Goddess of Earth, do all reside auspiciously at வாரி மங்கை (vaari mangai) : the damsel of the sea, Lakshmi who originated in the milky ocean; பாரின் மங்கை (paarin mangai) : the damsel of the earth, Bhoodevi;

மேரு மங்கை ஆள வந்த பெருமாளே.(mEru mangai ALa vandha perumALE.) : this place, Uttara MerUr; where You arrived to rule this place, Oh Great One! மேரு மங்கை (mEru mangai) : Uttara mErur;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே