207 வால வயதாகி


ராகம் : ஆனந்தபைரவிசதுச்ர துருவம் (கண்ட நடை)
வாலவய தாகியழ காகிமத னாகிபணி
வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடுபொருள்தேடி
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழலசிலநாள்போய்த்
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரியுறுநாளிற்
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்
சூழலுற மூலகசு மாலமென நாறியுடலழிவேனோ
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
நாலுசிர மோடு சிகை தூளிபட தாளமிடுமிளையோனே
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ்மயில்வீரா
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு
மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில்பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ
யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் பெருமாளே.

Learn The Song



Know The Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S

Paraphrase

வால வயதாகி அழகாகி மதனாகி (vAla vayathAki azhakAki mathanAki) : Growing up into a strapping young man, looking handsome like Manmathan – the God of Love

பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி (paNi vANipamOdu Adi maruLAdi viLaiyAdi) : undertaking several salaried jobs and profitable business assignments; becoming disillusioned and playing quite a few love games; மருள் ஆடி = மயக்க அறிவைப் பெற்று விளையாடி; காம விளையாட்டுக்கள் ஆடி;

விழல் வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமோடு பொருள் தேடி (vizhal vAzhvu sathamAgi valuvAgi mada kUdamOdu poruL thEdi) : believing this worthless life to be permanent, I resolutely sought wealth, buying palatial houses with balconies and halls; விழல் (vizhal) : a grass-type weed; worthless;

வாசனை புழுகு ஏடு மலரோடு மனமாகி (vAsanai puzhuku Edu malarOdu manamAgi) : I yearned for fragrant musk and flowers with petals; புழுகு/புனுகு (puzhugu/punugu) : aromatic gel secreted from one of the glands of civet cat;

மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி (magizh vAsanaikaL Athi idal Agi mayalAgi) : happily applied various perfumes over my body and became infatuated;

விலைமாதர்களை மேவி அவர் ஆசை தனில் சுழல சில நாள் போய் ( vilai mAtharkaLai mEvi avar Asai thanil suzhala sila nAL pOy) : I sought whores, chasing them around with passion; after several days of such wasteful life,

தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி (thOl thiraigaL Aki naraiyAgi kurudAgi ) : my skin wrinkled; my hair turned grey and I lost my sight; திரைகளாகி = சுருக்கம் விழுந்து;

இரு கால்கள் தடுமாறி செவி மாறி (iru kAlkaL thadumARi sevi mARi) : both my legs tottered; my ears lost their hearing; செவி மாறி = காது கேட்காமல் போய்;

பசு பாச பதி சூழ் கதிகள் மாறி சுகம் மாறி (pasu pAsa pathi sUzh kathigaL mARi sugam mARi) : my abilty to discern distinctly the diverse principles of life, bondage and God was gone; my happiness lost; உயிர், தளை, கடவுள் என்னும் முதற் பொருள்களைப் பற்றிய அறிவு யாவும் மறைதலுற்று, சுகமெல்லாம் கெட்டு,

தடியோடு திரி உறு நாளில் (thadiyOdu thiri uRu nALil ) : During this time when I started moving around leaning on a stick,

சூலை சொறி ஈளை வலி வாதமோடு நீரிழிவு (sUlai soRi eeLai vali vAthamOdu neerizhivu) : stomach ache, rashes, phlegm, wheezing, diseases caused by gastritis, diabetes, சூலை நோய் = வயிற்றுப் புண்,

சோகைகள் மாலை சுரமோடு பிணி தூறிருமல் (sOgaigaL mAlai suramOdu piNi thURirumal) : anaemia, ring worm around my neck, high fever, whooping cough

சூழல் உற மூல கசுமாலம் என நாறி உடல் அழிவேனோ (sUzhal uRa mUula kasumAlam ena nARi udal azhivEnO) : with all these crowding in, my filthy body emits a foul odour; should I have to die like this? கசுமாலம் ( kasumaalam) : Nastiness, Misconduct; ஆபாசம், ஒழுக்கக்கேடு;

நாலுமுகம் ஆதி அரி ஓம் என ஆதாரம் உரையாத பிரமாவை (nAlumukam Athi ari Om ena athAram uraiyAtha piramAvai) : Lord Brahma, with four faces, who was unable to interpret the meaning of the PraNava ManthrA which is the foundation for everything, நான்கு முகங்களை உடைய பிரமதேவர், வேதத்தை ஓதத் தொடங்கியபோது முதலில், "அரி ஓம்" என்று கூற, "பொருள் கூறக் கடவாய்" என்று நீ கேட்ட போது ஆதாரம் சொல்ல முடியாது விழித்த பிரமதேவரை,

விழ மோதி பொருள் ஓதுக என நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே (vizha mOthi poruL Othuga ena nAlu siramOdu sigai thULipada thALam idu iLaiyOnE) : You knocked that Brahma down demanding to know the correct meaning of that ManthrA and forcefully hit, as though beating the drums, His four heads with Your knuckles, blowing apart His faces and tufts, Oh Young One! சிகை (sigai) : tuft, kudumi;

நாறு இதழி வேணி சிவ ரூப கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ (nARu ithazhi vENi siva rUpa kaliyANi muthal eeNa magavAnai magizh thOzha) : You are the friendly brother of GaNapathi, the first-born of DEvi PArvathi, who united with the body of Lord SivA who wears the fragrant kondRai (Indian laburnum) flower on His matted hair! நறு மணம் வீசும் கொன்றையை அணிந்த சடையை உடைய சிவபெருமானுடைய பாகத்தில் அமைந்துள்ள பார்வதி முதலில் ஈன்ற குழந்தையாகிய கணபதி மகிழும் சகோதர நண்பனே! நாறு இதழி (naaRu ithazhi) : fragrant (kondRai) flower; முதல் ஈண மகவு (muthal eeNa magavu) : first born child; மகவு ஆனை (magavu aanai) : child elephant;

வனம் மீது செறி ஞான குற மாதை தின காவில் மணமேவு புகழ் மயில் வீரா (vanam meethu seRi njAna kuRa mAthai thina kAvil maNamEvu pugazh mayil veerA) : You have the distinction of marrying VaLLi – who lives in the forest (of Mount VaLLimalai) and is the wise damsel of the kuRavAs – in the grove surrounded by the millet fields, Oh valorous One mounting the peacock!

ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் ( Olam idu thAdagai suvAku vaLar Ezhu maram) : The shrieking She-demon ThAdakai, SubAgu, seven tall trees of mara, விசுவாமித்திர முனிவர் செய்த வேள்விக்குப் பாதுகாப்புத் தரும் பொருட்டு அதற்கு கேடு விளைவிக்கும் தாடகையையும் அவளது மகன் சுபாகுவையும் இராமன் கொல்கிறான்.

வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக (vAliyOdu neeli paganOdu oru virAthan ezhum Otha kadalOdu viRal rAvaNa kuzhAm amaril podiyAga) : VAli, Neeli, Pagan, unique demon VirAthan, the seas with rising waves and, in addition, the entire clan of mighty RAvaNA were all destroyed by Him in the war and shattered to pieces; Neeli is Ayomukhi, sister of Surapadma. While Rama and Lakshmana moved towards the south in search of Sita, Ayomukhi, tried to entice Lakshmana, who went alone to a pool to fetch water. When Lakshmana resisted and kept away from her allurements, she tried to carry him away into the sky. But, Lakshmana drove her away disfigured as in the case of Surpanaka. வாலி மற்றும் நீலி, (கும்)பக(ர்ண)ன், ஒப்பற்ற விராதன், அலைகள் எழுந்து வீசும் கடல், இவைகளுடன் வலிமை வாய்ந்த ராவணனுடைய கூட்டம் யாவும் போரில் இறந்து பொடிபட்டழிய;
கம்ப ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம், மராமரப் படலம் : எதிரில் நிற்கும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு சேருமாறு வரம் பெற்றவன் வாலி. சுக்கிரீவன் இராமனை அழைத்துச் சென்று அளக்கலாகாப் பருமையும், உயர்வும் கொண்ட ஏழு மராமரங்களுள் ஒன்றை அம்பொன்றால் எய்யுமாறு வேண்டினான். இராமன் வில்லில் நாணேற்றி, அம்பு தொடுக்க, அஃது ஏழு மரங்களையும் துளைத்து இராமனிடம் திரும்பியது.
அயோமுகி படலம், : சடாயுவுக்கு உரிய நீர்க் கடன் செய்த பின் இராமன் இலக்குவனுடன் சீதையைத் தேடிக் கொண்டு செல்லுகிறான். செல்லும் வழியில் நீர் வேட்கை கொண்ட இராமன், இலக்குவனை நீர் கொண்டு வருமாறு வேண்டுகிறான். இலக்குவன் நீர் கொண்டு வரச் சென்ற வழியில் அயோமுகி இலக்குவன் மீது காதல் கொண்டு, தன் மோகனை என்னும் மந்திர வலிமையால் அவனை மயக்கி வலிய எடுத்துச் செல்ல, சற்று நேரத்தில் மயக்கம் தீர்ந்தவுடன் இலக்குவன் அவளது உறுப்புக்களைத் துணித்து மீண்டும் இராமனிடம் வந்தான்.

Viradha was a Gandharva who had turned into a demon because of Kubera's curse. Rama and Lakshmana fought with Viradha when he kidnapped Sita. Viradha had a boon from Brahma which made him invincible to weapons. So the brothers kill the rakshasa by first breaking his arms, then burying him alive in a grave.
விராதன் எனும் அரக்கன் தும்புரு எனும் கந்தருவன் ஆவான். குபேரனின் சாபத்தால் அரக்கனாகிக் காட்டில் திரிந்தவன், சீதையைத் தூக்கிச் சென்றான். இவன் தன்னை எதிர்த்த இராமலக்குவரைக் கண்டு சீதையை விட்டு விட்டு அவர்களைத் தூக்கிச் சென்றான். அவர்கள் அவன் தோள்களை வெட்டி பள்ளத்தில் புதைத்தருளினர்.

ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா ஓத மறை எனவே (Ogai thazhal vALividu mUri thanu nEmi vaLai pANi thiru mArban ari kEsan marugA Otha maRai enavE) : You are the nephew of Lord Vishnu – known as Hari and Kesavan – who merrily holds in His hands the bow that shoots fiery arrows, the disc and the conch-shell and who holds Goddess Lakshmi on His hallowed chest; You are thus praised by the VEdAs! களிப்புடன் நெருப்பு அம்பை வீசும் வலிமை வாய்ந்த வில், சக்கரம், சங்கு ஆகிய ஆயுதங்களைக் கையில் ஏந்தியவனும், லக்ஷ்மியை மார்பில் தரித்தவனுமான ஹரி, கேசவன் ஆகிய திருமாலின் மருகனே என்று வேதங்கள் ஓதிப் புகழும், ஓகை (Ogai) : happily; தழல் வாளி (thazhal vALi) : fire arrow; மூரி தநு (moori dhanu) : strong bow; வலிய வில்; நேமி (nEmi) : chakra; வளை (vaLai) : conch; கேசவன் (kEsavan) : one who killed the demon Kesi; கேசி என்ற அரக்கனைக் கொன்றவர்;

ராமெசுர மேவும் குமரா (rAmesura mEvum kumarA) : Oh KumarA! You have Your abode in RAmeswaram!

அமரர் பெருமாளே. (amarar perumALE.) : You are the Lord of the Celestials, Oh Great One

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே