210. ஓங்கும் ஐம்புலன்


ராகம் : ஆரபி அங்கதாளம்
1½ + 2 + 2 + 2 + 3 (10½)
ஓங்கு மைம்புல னோட நினைத்தின்பயர்வேனை
ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந்தனையாள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம்புகடாவி
வாங்கி நின்றன ஏவி லுகைக்குங்குமரேசா
மூங்கி லம்புய வாச மணக்குஞ்சரிமானு
மூண்ட பைங்குற மாது மணக்குந்திருமார்பா
காங்கை யங்கறு பாசில் மனத்தன்பர்கள்வாழ்வே
காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம்பெருமாளே.

Learn The Song



Know Ragam Arabhi (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

Paraphrase

ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பயர்வேனை (Ongum aimpulan Oda ninaiththu in bayarvEnai) : I run behind the pleasures offered by the five senses, despairing and tiring out as a result,

ஓம் பெறும் ப்ரண வாதி உரைத்து எந்தனை ஆள்வாய் (Om peRum praNavAdhi uraiththu endhanai ALvAy) : You have to teach me all the sacred ManthrAs like AUM and reign my life;

வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம்புகள் தாவி (vAngi venkaNai sUrar kulam kombu kadAvi) : The young asura warriors aim terrible arrows by bending their bows, but வில்லை வளைத்து கொடிய அம்புகளை ஏவி சூரர் குல இளைஞர்கள் பாய்ந்துவர, சூரர் குலக்கொம்பு(sUrar kula kombu) : the scions of the Asura clan;

வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா (vAngi nindrana Evi lugaikkung kumarEsA) : You smash the encircling army by sending arrows Yourself, Oh Kumaresa! வளைத்து நின்ற சூரர் சேனையை அம்பைச் செலுத்தியே வென்ற குமரேசனே! வாங்கி (vaangi) : bending; வாங்கி நின்றன (vAngi nindrana) : வளைந்து நின்ற (ae) : arrow; உகை (ugai) : drive;

மூங்கில் அம் புய வாசமணக் குஞ்சரி மானும் மூண்ட பைங் குற மாது மணக்கும் திருமார்பா (mUngil ambuya vAsa maNakkum kunjari mAnum mUNda paingkuRa mAdhu maNakkum thirumArbA) : Oh beautiful chested one! You married both the fragrance exuding DEvayAnai, daughter of the elephant AirAvatham, with bamboo-like soft arms, and VaLLi, the beautiful damsel of KuRavAs, who adores You; அம் (am) : beautiful; குஞ்சரி (kunjari) : elephant; குஞ்சரி மான் (kunjari maan) : Deivayanai;மூண்ட (moonda) : passionately loving;

காங்கை அங்கறு பாசில் மனத்து அன்பர்கள் வாழ்வே (kAngai yang kaRu pAsil manath anbargaLvAzhvE) : You are the life of those devotees who entertain no grouse or any attachment! மனக்கொதிப்பே இல்லாதவர்களும், பாசம், பந்தம் ஆகியவை நீங்கிய மனத்தவர்களுமான அன்பர்களின் செல்வமே, பாசில் மனம் (paasil manam) : mind without attachment; காங்கை (kaangai) : heat, mental affliction, grouse;

காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே (kAnchi rangudi ARu mugath emperumALE.) : You have Your abode as Kanchirankudi (Ettukudi) where You appear with six faces, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே