141. முத்துத்தெறிக்க

ராகம்: மோகனம் தாளம்: கண்ட த்ருவம் (17)
முத்துத் தெறிக்கவள ரிக்குச் சிலைக்கைமதன்
முட்டத் தொடுத்தமலராலே
முத்தத் திருச்சலதி முற்றத் துதித்தியென
முற்பட் டெறிக்குநிலவாலே
எத்தத் தையர்க்குமித மிக்குப் பெருக்கமணி
இப்பொற் கொடிச்சிதளராதே
எத்திக் குமுற்றபுகழ் வெற்றித் திருத்தணியில்
இற்றைத் தினத்தில்வரவேணும்
மெத்தச் சினத்துவட திக்குக் குலச்சிகர
வெற்பைத் தொளைத்தகதிர்வேலா
மெச்சிக் குறத்திதன மிச்சித் தணைத்துருகி
மிக்குப் பணைத்தமணிமார்பா
மத்தப் ரமத்தரணி மத்தச் சடைப்பரமர்
சித்தத் தில்வைத்தகழலோனே
வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை
வெட்டித் துணித்தபெருமாளே.

Learn The Song


Paraphrase

முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன் முட்ட தொடுத்த மலராலே (muththuth theRikka vaLarikku silaikkai madhan muttath thoduththa malarAlE): the flowery arrows shot by Manmathan from the bow of fully matured sugarcane from which the pearls are about to burst open, இக்கு சிலை (ikku chilai ): sugarcane bow;

முத்த திரு சலதி முற்றத்து உதி தீ என முற்பட்டு எறிக்கு(ம்) நிலவாலே (muththa thiru chaladhi mutraththudhith thiena muRpat teRikku nilavAlE): the moon that rises from the surface of the beautiful sea containing numerous pearls and burns like fire,

எத்தத்தையர்க்கும் மிதம் மிக்கு பெருக்க மணி இ பொன் கொடிச்சி தளராதே ( eththaththaiyarkkum midham mikkup perukka maNi ippoR kodichchi thaLarAdhE ): the slandering by women who prattle like parrots and derive happiness thereof: in order that this lovely creeper-like damsel does not suffer any further from all these, தத்தை( thaththai ): parrot; மிதம்( mitham ): happiness;

எ திக்கும் உற்ற புகழ் வெற்றி திருத்தணியில் இற்றை தினத்தில் வர வேணும் ( edhdhikkum utra pugazh vetrith thiruththaNiyil itrai dhinaththil varavENum): You must appear before her right today and now, here at ThiruththaNigai, well known in all directions for its victorious glory.

மெத்த சினத்து வட திக்கு குல சிகர வெற்பை தொளைத்த கதிர் வேலா (meththa sinaththu vada dhikkuk kulach sikara veRpaith thoLaiththa kadhir vElA ): With extreme anger, You pierced with your dazzling spear the Mount Krouncha in the North with its high peaks,

மெச்சி குறத்தி தனம் இச்சித்து அணைத்து உருகி மிக்கு பணைத்த மணி மார்பா (mechchik kuRaththi thanam ichchith thaNaiththurugi mikkup paNaiththa maNi mArbA): You praised highly the damsel of the KuRavAs, VaLLi, and hugged her bosom passionately with Your highly decorated chest, Oh Lord!

மத்த ப்ரமத்தர் அணி மத்த சடை பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே(maththa bramaththar aNi maththach chadaip paramar chiththaththil vaiththa kazhalOnE): The extremely eccentric Shiva, who adorns His tresses with the lovely flower Umaththai, cherishes Your holy feet in His heart!

வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணிந்த பெருமாளே.(vattath thiraik kadalil mattith thedhirth thavarai vettith thuNiththa perumALE.): In the seas throwing waves in circles, the hostile demons who came to fight with You were all destroyed and cut into pieces by You, Oh Great One!

Comments