139. பருத்தபற் சிரத்தினை

ராகம் : ஹம்சானந்தி தாளம்: ஆதி-திச்ர நடை (2 களை/ 24)
பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
பரித்தவப் பதத்தினைப்பரிவோடே
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
பசிக்குடற் கடத்தினைப்பயமேவும்
பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
பிணித்தமுக் குறத்தொடைப்புலனாலும்
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
குறிக்கருத் தெனக்களித்தருள்வாயே
கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
கழித்தமெய்ப் பதத்தில்வைத்திடுவீரா
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
கதித்தநற் றிருப்புயத்தணைவோனே
செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்
சிரித்தெரித் தநித்தர்பொற்குமரேசா
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
சிறப்புடைத் திருத்தணிப்பெருமாளே.

Learn The Song


Paraphrase

பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை(paruththa pal siraththinai kuru thiRal karaththinai): (This body)with a head with prominent teeth, radiant and healthy arms, குரு(kuru): with a healthy color; சிரம்(சிரம்): head;

பரித்த அ பதத்தினை(pariththa a pathaththinai ): that are supported by sturdy legs, பரித்த(pariththa): supporting,

பரிவோடே படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை(parivOdE padaiththa poy kudaththinai pazhippu avaththu idaththinai): this pot-like body created with tender care is full of lies, blemishes and sins,

பசி குடல் கடத்தினை பயம் மேவும் பெருத்த பித்த உரு தனை(pasi kudal kadaththinai bayamEvum peruththa piththa uruththanai): and contains the intestines, the seat of hunger, and it is a huge mass of biliousness and fear.

கிருத்திம துருத்தியை(kiruththimath thuruththiyai): It is like deceptive bellows made of skin to blow air, துருத்தி(thuruththi): bellows; கிருத்திமம்( kiruththimam ): deceptive;

பிணித்த முக்கு(ற்)றத்தொடு ஐம்புலனாலும் (piNiththa mukkuRaththodu aim pulanAlum): fitted with three sources of trouble (namely, lust, anger and delusion) and five senses (taste, light, feeling, hearing and smell)

பிணித்த இப்பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற(piNiththavip piNippaiyai poRuththu amizhp piRappaRak): Bearing this constricted leather bag (during life) and dropping it (upon death) has been the activity of each birth. To get rid of birth

குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே(kuRikkaruththu enakkaLiththaruLvAyE ): should be my aim and goal; will You kindly grant me that thought?

கருத்தில் உற்று உரைத்த பத்தரை(karuththil utRu uraiththa pathharai): You protect those devotees who always meditate upon You in their heart and

தொறுத்து இருக்கரை கழித்த மெய் பதத்தில் வைத்திடு வீரா(thoRuth thirukkaraik kazhiththa meyp pathaththil vaiththidu veerA): and discard treacherous people keeping only the worthy ones at Your hallowed feet, Oh valorous One! தொறுத்து இருக்கரை (thoRuth thirukkarai): treacherous;

கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை(kathiththa nal thinai punak kathiththa nal kuRaththiyai): The virtuous damsel of the KuRavAs, VaLLi, lived in the millet-field with fully grown crop of millet;

கதித்த நல் திரு புயத்து அணைவோனே(kathiththanat Riruppuyath thaNaivOnE:): You hugged her with Your broad shoulders.

செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து அரக்கரை(seruththeRuth thethirththamup puraththurath tharakkarai): The mighty demons of Thiripuram advanced in the battle and confronted Lord SivA;

சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா(siriththerith thaniththarpoR kumarEsA): they were all burnt down by the mere smile of SivA who is indestructible. You are the son of that SivA, Oh KumarEsa!

சிறப்பு உற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை(siRappuRap piriththaRath thiRaththamizhk kuyarththisai): This place distinguished for its righteous conduct stands uniquely on the northern border of Tamil country; அறம் (aRam): righteousness, charity; உயர் திசை(uyar ththisai): northern direction;

சிறப்பு உடை திருத்தணி பெருமாளே.( siRappudaith thiruththaNip perumALE.): that famous place, ThiruththaNigai, is Your abode, Oh Great One!

Comments