138. பகல் இராவினும்

ராகம் : தன்யாசி தாளம்: மிஸ்ரசாபு (1½ + 2)
பகலி ராவினுங் கருவி யாலனம்
பருகி யாவிகொண்டுடல்பேணிப்
பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபு ராணமுஞ்சிலவோதி
அகல நீளமென் றளவு கூறரும்
பொருளி லேயமைந்தடைவோரை
அசடர் மூகரென் றவல மேமொழிந்
தறிவி லேனழிந்திடலாமோ
சகல லோகமும் புகல நாடொறுஞ்
சறுகி லாதசெங்கழுநீருந்
தளவு நீபமும் புனையு மார்பதென்
தணிகை மேவுசெங்கதிர்வேலா
சிகர பூதரந் தகர நான்முகன்
சிறுகு வாசவன்சிறைமீளத்
திமிர சாகரங் கதற மாமரஞ்
சிதற வேல்விடும்பெருமாளே

Learn The Song


Paraphrase

பகல் இராவினும் கருவியால் அ(ன்)னம் பருகி (pagal irAvinum karuviyAl anam parugi): Every day and night, I use my bodily organs to consume food

ஆவி கொண்டு உடல் பேணி(AvikoNdu udal pENi): to sustain my life and to nurture my body.

பழைய வேதமும் புதிய நூல்களும் பல புராணமும் சில ஓதி(pazhaiya vEdhamum pudhiya nUlgaLum pala purANamum sila Odhi): After studying old scriptures and some new writings and a few epics,

அகல(ம்) நீளம் என்று அளவு கூற அரும் பொருளிலே அமைந்து அடைவோரை (agala neeLam endru aLavu kUR arum poruLilE amaindhu adaivOrai): some scholars who have understood the rare truth that cannot be measured in terms of length and breadth and have immersed themselves in that Bliss,

அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து (asadar mUkar endru avalamE mozhindhu): I ridicule (those scholars) as fools and dumb;

அறிவிலேன் அழிந்திடலாமோ(aRivilEn azhin dhidalAmO): should I be so stupid and destroy myself?

சகல லோகமும் புகல(sakala lOkamum pugala): The whole world praises,

நாள் தோறும் சறுகு இ(ல்)லாத செம் கழு நீரும் (nALthorum saRugilAdha seng kazhu neerum): the red kazhuneer flowers, which bloom every day without fail, சறுகு இ(ல்)லாத (saRugilAdha ): blooming without fail;

தளவு நீபமும் புனையும் மார்ப(thaLavu neebamum punaiyu mArba): the jasmine and kadamba flowers that decorate Your chest, தளவு(thaLavu ): mullai flower;

தென் தணிகை மேவு செம் கதிர் வேலா (thenthaNigai mEvu seng kadhir vElA): and You have chosen this beautiful place ThiruththaNigai as Your abode, Oh MurugA with the brilliant spear!

சிகர பூதரம் தகர(sigara bUtharam thagara): Mount Krouncha with all its peaks was shattered into pieces, சிகர பூதரம்(sigara bootharam): mountain with numerous peaks;

நான்முகன் சிறுகு வாசவன் சிறை மீள (nAnmugan siRugu vAsavan siRai meeLa): BrahmA and the humiliated IndrA were liberated from their prisons, வாசவன் (vAsavan): indra;

திமிர சாகரம் கதற(thimira sAgaram kadhaRa:): the dark turbulent seas were howling;

மா மரம் சிதற வேல் விடும் பெருமாளே.(mAmaram sidhaRa vEl vidum perumALE.): when You threw Your mighty Spear at the mango tree ( sUran in disguise) splitting into two parts, Oh Great One!

Comments