425. எனக்குச் சற்று


ராகம் : கமாஸ்தாளம்: ஆதி (28)
மிஸ்ர நடை (தகிட தகதிமி)
எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்
பொருட்பொற்றட் டிடிக்கைக்குக்குடில்மாயம்
எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்
பிறக்கைக்குத் தலத்திற்புக்கிடியாமுன்
தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற்
பெறச்செச்சைப் புயத்தொப்பித்தணிவோனே
செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்
திரட்டப்பிக் கழற்செப்பத்திறல்தாராய்
பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப்
பணத்துட்கக் கடற்றுட்கப்பொரும்வேலா
பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப்
பலிப்பப்பத் தருக்கொப்பித்தருள்வாழ்வே
கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக்
கிடைப்புக்குக் களிப்புக்குத்திரிவோனே
கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக்
கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே.

Learn The Song




Know the Ragam Khamas/Kamas

Janyam of 28th mela Hari Kambhoji
Arohanam: S M1 G3 M1 P D2 N2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 R2 S


Paraphrase

எனக்குச் சற்று உனக்குச் சற்றெனக் கத்து அத்தவர்க்கு (enakku chatr unakkuchatr enakkaththu aththavarkku) : To the harlots who loudly scream bargaining "Give me some; shall give you some" –எனக்குக் கொஞ்சம், உனக்குக் கொஞ்சம் என்று கூச்சல் இடுகின்ற அந்த விலைமாதர்களுக்கு

இச்சைப் பொருட் பொற் தட்டு இடு இக்கைக்குக் குடில் (ichchaip porut por thattu idu ikkaikkuk kudil) : I gift materials of their desire on a golden plate. This body is subject such dangers; விரும்பும் பொருளைத் தங்கத் தட்டில் வைத்துத் தருகின்ற ஆபத்தைக் கொண்ட இந்த உடம்பு; இக்கை = ஆபத்தான;

மாயம் எனக் கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனற் சுட்டிட்டு அடக்கைக்கு (mAyam enak kattaikku idaip pattu ittu anaR suttittu adaikkaikku) : When life goes off this illusory body, it is placed in between logs that burn it down; உயிர் மாயமாய் மறைந்ததும் விறகுக் கட்டைகளுக்கு இடையிலே வைக்கப்பட்டு நெருப்பால் சுடப்பட்டு மறைந்து போவதற்கும்; அடக்கைக்கு = அடங்குவதற்கு

பிறக்கைக்குத் தலத்திற் புக்கு இடியா முன் (piRakkaikkuth thalaththiR pukku idiyA mun) : before it re-enters into another body in this world to die eventually. Before these events happen, மீண்டும் உயிர் பிறப்பதற்கும், இந்த உலகில் புகுந்து அழிந்து போவதற்கும் முன்னரே,

செருக்கிச் சற்று உறுக்கிச் சொற் பிரட்ட துட்டரைத் தப்பித் திரள் தப்பி (serukki chatru uRukki soR pirattath thuttaraith thappith thiraL tappi) : I would like to avoid haughty, short-tempered and immoral miscreants and flee from their company அகந்தை கொண்டு, சற்றுக் கோபித்துப் பேசுபவர்களும், நன்னெறியிலிருந்து தவறியவர்களுமான துஷ்டர்களிடமிருந்து தப்பி, அந்தக் கூட்டத்தினின்று விலகி, சற்று உறுக்கிச் சொல் = சற்றுக் கோபித்தும் பேசுகின்றவர்கள்; திரள் = கூட்டம்; பிரட்டர் = நெறி தவறியவர்;

கழற் செப்பத் திறல் தாராய் (kazhaR seppath thiRal thArAy) : in order to praise the glory of Your holy feet. Kindly bless me with that quality! உன் திருவடியைப் புகழும் ஆற்றலைத் தந்தருள்வாயாக.

தினைக்குட் சித்திரக் கொச்சைக் குறத் தத்தைத் தனத்தை பொற் பெறச் செச்சைப் புயத்து ஒப்பித்து அணிவோனே (thinaikkut chiththira kochchaik kuRath thaththai thanaththai poR peRach sechchai buyaththu oppiththu aNivOnE ) : Oh, Lord! in the millet field, You graciously hug the bosoms of VaLLi, the parrot-like damsel of the KuRavAs who babbles sweetly, with Your broad chest adorned with the garland of vetchi flowers, தினைப்புனத்தில், அழகிய மழலைமொழி பேசும் குறப்பெண்ணாகிய கிளி போன்ற வள்ளியின் மார்பை அழகு பெற உன் வெட்சி மாலையணிந்த புயத்தில் ஏற்றுக் கொண்டு தழுவுவோனே,

பனைக்கைக் கொக்கனை தட்டுப் படக் குத்திப் பட (panaikkai kokkanai thattup pada kuththip pada) : Your piercing Spear stopped and knocked dead the demon TharakAsuran, who appeared as the scheming crane with huge palm-tree-like trunk; பனைமரம் போன்ற தும்பிக்கை உடையவனும், கொக்குப் போன்று காத்திருந்து தாக்கும் குணத்தை உடையவனுமான தாரகாசுரனை (தாரகாசுரன் யானை முகம் படைத்தவன்) தடைபட்டு அழியுமாறு வேலினால் குத்தி அவன் இறக்கவும், கொக்கன் = கொக்கு போன்றவன்; கொக்கு = மாமரம்; கொக்கன் என்பது மாமரமாய் நின்ற சூரபத்மனையும் குறிக்கலாம்.

சற்பப் பணம் உட்கக் கடல் துட்கப் பொரும்வேலா (saRpap paNathth utka kadatrutkap porumvElA) : Seeing You fight thus with Your spear,the thousand-hooded serpent, Adhiseshan, was terrified and the seas trembled; ஆதிசேஷனின் ஆயிரம் பட முடிகள் அஞ்சிடவும், கடல் அஞ்சிடவும் போர் செய்த வேலனே, துட்க (thutka): to be struck with fear;

பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்று பலிப்பப் பத்தருக்கு ஒப்பித்தருள் வாழ்வே ( parappatru surukkatru padhaippatru thigaippatru palippa paththarukku oppiththu aruL vAzhvE) : You have assured Your devotees the boon of life without greed, miserliness, nervousness and delusion. You are their great treasure! பேராசையின்றி, லோபத்தனம் இன்றி, நடுக்கம் இன்றி, மயக்கம் ஒழிந்து இத்தகைய நலன்கள் உண்டாகும்படியாக அடியார்களுக்கு ஏற்படுத்தித் தந்து அருள் புரியும் செல்வமே, பரப்பு = பேராசை; சுருக்கு = கஞ்சத்தனம்; பலிப்ப = பலிக்க;

கனிக்குத் திக்கு அனைத்துச் சுற்றிட (kanikku thikku anaiththu chutrtrida) : To win a fruit (from Lord SivA), You flew around the world spread out in all directions, (சிவபெருமானிடமிருந்து) கனி பெறுவதற்காக திக்குக்கள் யாவும் படர்ந்த உலகத்தைச் சுற்ற,

பச்சைக் கனப் பக்ஷிக்கு இடைப் புக்குக் களிப்புக்குத் திரிவோனே (pachchaik gana pakshikku idai pukkuk kaLippukku thirivOnE) : happily mounting the green and famous peacock! பச்சை நிறமுள்ள பெருமை வாய்ந்த பக்ஷியாகும் மயிலின் மீது ஏறி அமர்ந்து மகிழ்ச்சியுடன் வலம் வந்தவனே,

கலிக்கு ஒப்பிற் சலிப்பற்றுக் கதிக்கு ஒத்திட்டு (kalikku oppiR salippatruk gathikku oththittu) : In this Kaliyuga, You stand as an incomparable Lord who has consented to grant tirelessly the bliss of Liberation to Your devotees. இந்தக் கலியுகத்தில் நிகரில்லாத தெய்வமாய் நின்று, கொஞ்சமும் சலிக்காது மோக்ஷ இன்பத்தைத் தர ஒப்புக்கொண்டவனே,

பூலோகத்தை ஒரு ஸ்திரீயாகப் பாவித்தால் அதில் நாபி ஸ்தானத்தில் ஸர்வ வியாபினியாக இருக்கிற பரப்பிரம்ம சக்தியான காமாக்ஷி அம்பாளின் வாஸஸ்தானமான கர்ப்பகிருஹம் இருக்கிறது. அதற்குப் பேர் பிலாகாசம். பிலம் என்றால் குகை. நாபிக்கொடியிலிருந்து கர்ப்பத்திலிருக்கிற குழந்தை ஆகாரம் பெறுகிற மாதிரி, சகல ஜீவராசிகளும் இந்த பிலாகாசத்திலிருந்துதான் அம்பாளின் அநுக்கிரஹத்தால் சகல சக்திகளையும் பெறுகிறார்கள் — தெய்வத்தின் குரல்.

எழிற் சத்திக் கடற் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே.(ezhil saththi kadal kachchippadhi chokka perumALE) : This place, Kachchi (kAnjeepuram), where lovely Mother Kamakshi is present and where the sound of PraNava (OM) is echoing everywhere like the waves of the sea, is also Your abode, Oh Handsome and Great One! எழில் மிகு சக்தியாகிய காமாக்ஷிதேவி எழுந்தருளியுள்ள, கடல்போல் எப்போதும் ஓம் என்று ஒலிக்கும் கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே