428. கனிதரும் கொக்கு
Learn The Song
Know Ragam Arabhi (Janyam of 29th mela Shankarabaranam)
Arohanam: S R2 M1 P D2 S Avarohanam: S N3 D2 P M1 G3 R2 SParaphrase
கனி தரும் கொக்கு கண் செவி வெற்பும் ( kanitharum kokkuk katchevi veRpum) : The mountain at ThiruchchengkOde (known as NAgamalai) where mango trees with plenty of fruits abound, பழங்களைத் தருகின்ற மாமரங்கள் நிறைந்த பாம்பு மலையாகிய திருச்செங்கோட்டையையும், கொக்கு (kokku) : mango tree; கட்செவி (katchevi ) : serpent;
பழனியும் தெற்குச் சற்குரு வெற்பும் (pazhaniyum theRku saRguru veRpum) : Pazhani hills, Swamimalai in the south, பழனியையும், தெற்கில் உள்ள சுவாமி மலையையும்,
கதிரையும் சொற்கு உட்பட்ட திருச்செந்திலும் வேலும் (kadhiraiyum soRkut patta thiruchchendhilum vElum) : KadhirgAmam, the famous place ThiruchchendhUr and the great weapon, Spear, கதிர்காமத்தையும், புகழுக்கு இருப்பிடமான திருச்செந்தூரையும், வேலாயுதத்தையும்,
கனவிலும் செப்பத் தப்பும் எ(ன்)னை (kanavilum seppath thappum enai) : are not mentioned by me even in my dreams; கனவில் கூடச் சொல்லி அறியாத என்னை,
சங்கட உடம்புக்குத் தக்க அனைத்தும் (sangkata udambukkuth thakka anaiththung) : for the pleasure of this troublesome body, I go about acquiring everything சங்கடம் தரும் உடலின் சுகத்துக்கு வேண்டிய சகல பொருள்களையும்,
களவு கொண்டிட்டு கற்பனையில் கண் சுழல்வேனை (kaLavu koNdittuk kaRpanaiyiR kaN suzhalvEnaip) : by hook or crook, constantly contemplating all devious means, and roam about in my imagination. திருட்டு வழியிலாவது அடைந்து (கபட) யோசனைகளிலேயே நோக்கம் கொண்டு சுழலும் என்னை,
புனிதன் அம்பைக்குக் கைத்தல ரத்நம் (punidhan ambaikkuk kaiththala rathnam) : "He is the precious ruby adorning the finger of Mother PArvathi, the consort of impeccable Lord SivA; பரிசுத்தமானவனுடைய தேவி பார்வதியின் கையில் விளங்கும் இரத்தினம்,
பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம் (pazhaiya gangaikku utrap pudhu muththam) : He is the new pearl delivered by old Mother Ganga; பழைய கங்கா தேவிக்குக் கிடைத்த புதிய முத்து,
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா (buviyilan draikkatr traippavar vaippen drurugA) : He is the safe deposit earned by those great people who never save anything in the world but spend it all every day for the sake of the Lord" - so I should have praised You with melting heart பூமியில் அன்றாடம் என்று ஒன்றும் சேமித்து வைக்காமல் இறைவனிடம் யாவற்றையும் விட்டு இளைத்த பெரியோர்களின் காப்பு நிதி என்று கூறி உருகி,
எப்பொழுதும் வந்திக்கைக்கு அற்ற எ(ன்)னை (eppozhudhum vandhikkaik katra enai) : and worshipped at all times, but I never did (worship). எல்லாப் பொழுதினிலும் வணங்குதலே இல்லாத என்னை,
பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும் (pin pizhaiyudan pattup baththaruL vaikkum) : Even then, You have condoned my shortcomings; showing great forbearance, You have placed me as one among Your devotees. (என் குறைகளை அறிந்த) பின்னும் என் குற்றங்களைப் பொருட்படுத்தாது பொறுத்துச் சம்மதித்து உனது பக்தர்கள் கூட்டத்துள் ஒருவனாக வைத்துள்ள
பொறையை என் செப்பி செப்புவது ஒப்பு ஒன்று உளதோ தான் (poRaiyaiyen seppi seppuvadh oppondr uLadhOthAn) : How can I describe Your compassion, and is there anything that can match Your mercy? உனது கருணையை நான் என்ன சொல்லிப் புகழ்வது, (உன் கருணைக்கு) நிகர் ஒன்று உண்டோ?
அனனியம் பெற்று அற்று ஒரு பற்றும் அற்று (ananiyam petratr tratroru patrun) : They have reached a state of non-duality (where I am not different from You) with all attachments severed, (நீ வேறு நான் வேறு இல்லை என்ற) அத்துவைத நிலையைப் பெற்று எவ்வித பற்றும் நன்றாக அற்றுப் போய், அற்று ஒரு பற்றும் = எவ்வித/எத்தன்மையுடைய பற்றும்;
தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் (theLi tharum chiththarkku ththeLi siR) : and they have clear mind; they are the visionaries who have precisely understood தெளிவு அடைந்த மனம் கொண்ட சித்தத்தவர்களின் தெளிந்து உணர்ந்த; தெளிசில் = தெளிந்து உணர்கின்ற அறிவு உருவான;
கொந்த அமலை தென் கச்சி பிச்சி மலர் கொந்தள பாரை (kondhamalaithen kachchip pichchima larkkondhaLa pArai) : the impeccable Mother, with garlands, and jasmine flowers adorning Her hair and who has established Her abode in beautiful KAnchipuram, She is Mother Para Sakthi (Supreme Power); பூங்கொத்துக்கள் அணிந்த நிர்மலம் ஆனவள், அழகிய கச்சிப் பதியில் பிச்சி மலரை அணிந்துள்ள கூந்தலை உடைய பரா சக்தி,
அறவி நுண் பச்சை பொன் கொடி (aRavi nuN pachchaip poRkodi) : She is righteousness personified; She is like the tender creeper of a deep green complexion; அறச் செல்வி, நுண்ணிய பச்சை நிறமுள்ள அழகிய கொடி போன்றவள், அறவி (aRavi): Virtue; Female ascetic; சன்னியாசினி;
கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு (kaRkaNdu amudhinum thiththik kappadu soRkombu) : The words of this creeper-like Mother are sweeter than sugar candy and nectar; கற்கண்டு, அமுது இவை இரண்டைக் காட்டிலும் இனிக்கும் சொற்களை உடைய கொடியனையாள்,
அகில அண்டத்து உற்பத்தி செய் முத்தின் பொல(ம்) மேரு (akila aNdaththuR paththisey muththin polamEru): She is the Pearl that created the entire universe; She is the Mount MEru made of solid gold; எல்லா அண்டங்களையும் தோற்றுவிக்கும் முத்து, பொன்னாலான மேருமலை, பொலம்(polam) : gold, beauty, பொன், அழகு;
தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட (thanivadam poRpup petra mulaik kundriNaisumandh dheykkap patta ) : Her two bosoms are like mounts having the beauty of matchless pearl necklaces; their sheer weight has made Her waist slender; She is the youthful damsel, UmAdEvi. ஒப்பற்ற மணி வடத்தின் அழகு பெற்ற இரண்டு மலை மார்புகளைச் சுமந்து அதனால் இளைத்து நிற்கும், பொற்பு = அழகு; எய்த்தல் (eiththal): இளைத்தல்;
நுசுப்பின் தருணி (nusuppin tharuNi) : இடையை உடைய இளமைப் பருவத்தினளான உமா தேவி,
சங்கு உற்று தத்து திரை கம்பையினூடே (sang kutruth thaththuthi raikkam baiyinUdE) : On the banks of River Kambai, whose waves lash out delivering conch shells in plenty, சங்குகள் பொருந்தித் ததும்பிப் பரவிச் செல்லும் அலைகளை உடைய கம்பை ஆற்றுக்கு அருகே,
தவம் முயன்று அப் பொற்றப் படி கைக்கொண்டு (thavam muyandru appotrap padi kaik kondu) : She did Her penance; with two measures of paddy, தவம் செய்து, அந்தச் சிறப்புள்ள இரு நாழி நெல்லைக் கையில் கொண்டு
அறம் இரண்டு எட்டு எட்டு எட்டும் வளர்க்கும் தலைவி (aRam iraNdu ettu ettettum vaLarkkum thalaivi) : She carried out thirty-two religious duties; She is the Great Goddess Kamakshi; முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த தலைவியாகிய காமாட்சி தேவியின்
பங்கர்க்கு சத்யம் உரைக்கும் பெருமாளே.(pangarkku sathyam uraikkum perumALE.) : to Her consort, Lord SivA, You preached the Eternal Truth of PraNava ManthrA, Oh Great One! பங்காளராகிய சிவபெருமானுக்கு மெய்ப் பொருளாகிய பிரணவ மந்திரத்தை உபதேசித்த பெருமாளே.
Comments
Post a Comment