427. கறை இலங்கும்


ராகம் : தோடி தாளம்: ஆதி
கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்
சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்
கரவடன் கொற்றக் குக்குட வத்தன் தனிவீரக்
கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்
பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்
கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் தமிழ்பாடிக்
குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்
பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்
குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் றிலதான
குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்
குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்
குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங்கிடையாதோ
பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்
தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்
பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன் றையும்வேணிப்
பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ்
சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்
பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங்கயவாவி
திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்
பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்
த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின் திருவான
தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந்
தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்
சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும் பெருமாளே.

Learn The Song


Know The Raga Thodi (8th mela)

Arohanam: S R1 G2 M1 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R1 S

Paraphrase

கறை இலங்கும் உக்ரச் சத்தி தரிக்கும் சரவணன் ( kaRai ilangu ugra saththi dharikkum saravaNan) : "He is Lord SaravaNan, holding in His hand the fierce blood-stained weapon, the Spear; (இரத்தக்) கறை விளங்கும் உக்கிரம் பொருந்திய வேற்படையை ஏந்தும் சரவணமூர்த்தி,

சித்தத்துக்குள் ஒளிக்கும் கரவடன் (chiththaththukkuL oLikkum karavadan) : He is the thief hiding deep inside my heart; மனத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் திருடன்,

கொற்றக் குக்குட அத்தன் (kotrak kukkuda aththan) : He holds a staff with the emblem of the valorous rooster; வீரம் வாய்ந்த கோழிக் கொடியை ஏந்திய கையன்,

தனி வீரக் கழல் இடும் பத்ம (thani veerak kazhal idum padhma) : He has two lotus-like hallowed feet, adorned with unique and triumphant anklets; ஒப்பற்ற வீரக்கழலை அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியை உடையவன்,

கண் செவி வெற்பன் (kat sevi veRpan) : He belongs to the Serpent Hill (ThiruchchengkOdu); பாம்பு மலையான் (திருச்செங்கோட்டு மலையான்), கட்செவி/கண் செவி = பாம்பு; பாம்புகளுக்கு செவி கிடையாது. கண்களே செவி போல் செயல் படுகின்றன. முருகனுக்கு மிகவும் பிடித்த செந்நிறத்தில் அமைந்த லிங்கமே மலையான இந்த ஸ்தலத்தில் நெடும் பாறையிலேயே வடித்தெடுக்கப்பட்ட நாகர் சிலையும், வேலவர் சந்நிதியும், ஆதிகேசவபெருமாள் சந்நிதியும், 6 அடி முழு திருமேனியுடைய வெண்பாஷணத்தால் ஆகிய அர்த்தநாரீஸ்வரர் சந்நிதியும் பிரசித்தி பெற்றவை.

பழநி மன் கச்சி கொற்றவன் (pazhani man kachchik kotravan) : He has an abode at Mount Pazhani; He is the valiant Lord of KAnchipuram; பழனி மலையான், காஞ்சீபுரத்து வீரன்,

மற்றும் கடக வஞ்சிக்கு கர்த்தன் எனச் செம் தமிழ் பாடி (matrum kadaga vanjikku karthan ena sen thamizh pAdi) : and also, He is the consort of vanji (rattan reed) creeper-like VaLLi wearing the bangles" - thus I wish to sing Your glory in chaste Tamil. பின்னும் கைவளை அணிந்த வள்ளிக் கொடி போன்ற வள்ளிக்குத் தலைவன் என்று செந்தமிழ்ப் பாக்களைப் பாடி,

குறை இல் அன்புற்று (kuRaiyil anbutru) : I wish to love You flawlessly; குறைவு படாத அன்பு பூண்டு,

குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த (kutram aRukkum poRaigaL nantha aRpap buththiyai vittu) : I wish to strengthen my patience, which can cut away all the imperfections; குற்றங்களை விலக்கவல்ல பொறுமைக் குணம் சிறந்து மேம்பட

அற்பப் புத்தியை விட்டு (kutram aRukkum poRaigaL nantha aRpap buththiyai vittu) : and get rid of my meanness;

என் குணம் அடங்கக் கெட்டு (en guNam adanggak kettu) : and leave away all the vices; என்னுடைய தீய குணங்கள் எல்லாம் கெட்டு,

குணம் மற்று ஒன்று இலதான குணம் அடைந்து (guNamatru ondru iladhAna guNam adaindhu) : I wish to relinquish all attributes and acquire the steady tranquil state ; குணம் வேறு ஒன்று இல்லாததான ஒரே நிலையான சாத்துவிகக் குணம் ஒன்றையே அடைந்து,

எப்பற்றுக்களும் அற்று (ep patrtrukkaLum atrum) : and rid myself of all attachments. எல்லாவிதமான ஆசைகளையும் ஒழித்து,

குறியொடும் சுத்த பத்தர் இருக்கும் குரு பதம் சித்திக்கைக்கு (kuRiyodum suddhap baththar irukkum gurupadham siddhikkaikku) : I wish to attain the illustrious state of true Preceptor of Knowledge to those true devotees whose sole goal is Divine pursuit; இறைவனுடைய அருட்குறி ஒன்றையே கருதும் பரிசுத்தமான அடியார்கள் இருக்கும் ஞானாசாரிய நிலை அடியேனுக்குக் கை கூடுவதற்கு

அருள் சற்றும் கிடையாதோ (aruL satrum kidaiyAdhO) : For getting this wish fulfilled, will You not kindly bless me a little? உனது திருவருள் சற்றேனும் கிடைக்காதோ?

Lord Shiva bows down in reverence to Devi and her feet carry the fragrance of Lord Shiva's tresses.

பிறை கரந்தை கொத்து பணி மத்தம் (piRai karandhaik koththup paNi maththam) : The crescent moon, bunches of karandhai leaves, a serpent, Umaththam flower, சந்திரன், திருநீற்றுப்பச்சைக் கொத்துக்கள், பாம்பு, ஊமத்தம் மலர்,

தலை எலும்பு அப்பு கொக்கின் இறகு அக்கம் (thalai yelumbu appuk kokku iRagu akkam) : skulls, the river Ganga, feathers of cranes, a garland of rudraksha beads, கபால எலும்பு, கங்கை நீர், கொக்கின் இறகு, ருத்ராக்ஷ மாலை; அக்கம் (akkam) : Rudrakṣha bead; உருத்திராக்க மணி;

பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி (biramanan drettaR katrathiruk kondraiyum vENi) : and the pretty kondRai (Indian laburnum) flower that was beyond the reach of BrahmA (when He tried to have a vision of the head of Lord SivA) - all these adorn His tresses; பிரமன் முன்பு எட்டுதற்கு அரிதாக இருந்த அழகிய கொன்றை இவை எல்லாம் அணிந்த சடை

பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும் சரணி (piRavunin drokkath thokku maNakkum charaNi) : and many other things make His Head sweet-scented with a Divine fragrance. Devi's feet carry the composite fragrance of all the scents that Shiva's crown carries (as Lord Shiva prostrates with His Head touching Her feet); மற்றவைகளும் விளங்கி ஒன்று சேர்ந்து கூடி (சிவபெருமான் வீழ்ந்து வணங்குவதால் அவர் தலையில் உள்ள பொருள்களின்) மணம் வீசும் திருவடி உடையவள்,

அம் பத்ம கைக் கொடி (am padhmak kaikkodi) : She has pretty hands like lotus and a creeper-like body; அழகிய தாமரை போன்ற திருக்கரத்தை உடைய கொடி போன்றவள்,

முக்கண் பெறு கரும்பு அத் தக்கது அருள் (mukkaN peRukarum baththak kaththAruL) : She is like the pretty sugarcane, with three eyes (the Sun, the Moon and Agni); She is the One to graciously preach the most appropriate ManthrA to me; மூன்று கண்கள் கொண்ட கரும்பு போன்றவள், அந்தத் தக்கதான பொருளை (அடியேனுக்கு) அருள் செய்பவள்;

நல் பங்கய வாவி திறை கொளும் சித்ரக் குத்து முலைக் கொம்பு (naR pangaya vAvi thiRai koLum chithrak kuththu mulaik kombu) : Her vine-like waist supports two firm, beautiful and bud-like bosoms that conquer the beautiful lotus in pond; நல்ல திருக் குளத்துத் தாமரையையும் வென்று அடக்கும் அழகிய, திரண்டு குவிந்த மார்பைக் கொண்ட கொம்பு போன்றவள், திறை (thiRai) : கப்பம் கட்டுதல்; to pay tribute, valuables paid by one sovereign or state to another in acknowledgment of subjugation;

அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும் த்ரிபுரை (aRiyum am thaththaik kaikku agam moykkun thripurai) : She is Omniscient; she is holding a pretty parrot in Her Hand; She is Tripurai (presiding over the ChakrA containing the three subdivisions of Chandra KaNdam, Surya KaNdam and Agni KaNdam), ஞானமுள்ளவள், அழகிய கிளி கையில் வைத்து இருக்கும் திரிபுரை (சந்திர கண்டம், சூரிய கண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவை உடைய சக்கரத்துக்குத் தலைவி), தத்தை (thaththai) : parrot;

செம்பட்டுக் கட்டு நுசுப்பின் திருவான தெரிவை (sem pattuk kattu nusuppin thiruvAna therivai) : She is the Goddess radiating the beauty of Lakshmi with a dazzling red silk draped around Her tender waist; செம்பட்டு ஆடை கட்டியிருக்கும் இடையை உடைய, லக்ஷ்மிகரம் பொருந்திய நங்கை, நுசுப்பு (nusuppu) : the waist, இடை; தெரிவை (therivai) : a woman from 26 to 31 years old (of discreet age); a woman in general.

அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண் சிறுவ (am dhurgi saththi evarkkun therivarum suddhap pachchaini RappeN siRuva) : She is the pretty Goddess Durga; She is the Supreme Power (ParAsakthi); She is the emerald green young girl (Bala) who cannot be easily perceived by one and all; She is Parvathi, and You are Her child, Oh Lord! அழகிய துர்க்கா தேவி, பராசக்தி, எல்லோருக்கும் தெரிவதற்கு அரிதான சுத்தமான பச்சை நிறம் கொண்ட பெண் ஆகிய பார்வதி தேவியின் பிள்ளையே,

தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே.(thoNdarkku sidhdhi aLikkum perumALE.) : You liberate Your devotees granting them eternal bliss, Oh Great One! அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் பெருமாளே

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே