438. மக்கட்குக் கூற


ராகம் : லதாங்கிதிஸ்ரத்ரிபுடை (7)
மக்கட்குக் கூறரி தானது
கற்றெட்டத் தான்முடி யாதது
மற்றொப்புக் கியாதுமொ வாததுமனதாலே
மட்டிட்டுத் தேடவொ ணாதது
தத்வத்திற் கோவைப டாதது
மத்தப்பொற் போதுப கீரதிமதிசூடும்
முக்கட்பொற் பாளரு சாவிய
அர்த்தக்குப் போதக மானது
முத்திக்குக் காரண மானதுபெறலாகா
முட்டர்க்கெட் டாதது நான்மறை
யெட்டிற்றெட் டாதென வேவரு
முற்பட்டப் பாலையி லாவதுபுரிவாயே
செக்கட்சக் ராயுத மாதுலன்
மெச்சப்புற் போதுப டாவிய
திக்குப்பொற் பூதர மேமுதல்வெகுரூபம்
சிட்டித்துப் பூதப சாசுகள்
கைக்கொட்டிட் டாடம கோததி
செற்றுக்ரச் சூரனை மார்பகமுதுசோரி
கக்கக்கைத் தாமரை வேல்விடு
செச்சைக்கர்ப் பூரபு யாசல
கச்சுற்றப் பாரப யோதரமுலையாள்முன்
கற்புத்தப் பாதுல கேழையு
மொக்கப்பெற் றாள்விளை யாடிய
கச்சிக்கச் சாலையில் மேவிய பெருமாளே.

Learn The Song



Raga Lathangi (63rd mela)

Arohanam: S R2 G3 M2 P D1 N3 S    Avarohanam: S N3 D1 P M2 G3 R2 S


Paraphrase

மக்கட்குக் கூற அரிதானது (makkatku kURa aridhAnadhu) : It cannot be explained to other people; மக்களுக்கு இது இத்தன்மையது என எடுத்துக் கூற அரிதானது,

கற்று எட்டத் தான் முடியாதது ( katru ettath thAn mudiyAdhadhu) : It cannot be attained by any amount of education; கற்ற கல்வியாலும் அதனை எட்ட முடியாதது,

மற்று ஒப்புக்கு யாதும் ஒவாதது (matru oppukku yAdhum ovAdhadhu) : It is incomparable with anything else; மற்றபடி அதற்கு உவமை ஏதும் ஒவ்வாதது,

மனதாலே மட்டு இட்டுத் தேட ஒணாதது (manadhAlE mattittuth thEda oNAdhadhu) : It cannot be measured by the mind nor conceptualised. மனதினால் அதை அளவிட்டுத் தேடி அறிய முடியாதது,

தத்வத்திற் கோவை படாதது (thathvaththil kOvai padAdhadhu) : It cannot be ennumerated within the confines of research or logic; எத்தகைய ஆராய்ச்சியிலும் அதனை வரிசைப்படுத்த முடியாதது,

மத்தப் பொற் போது பகீரதி மதி சூடும் (maththap poR pOdhu bageerathi madhi sUdum) : He who adorns His tresses with the Umaththai flower, the golden flower of kondRai (Indian laburnum), the river GangA and the crescent moon; ஊமத்தை மலரையும், தங்கநிறக் கொன்றை மலரையும், கங்கைநதியையும், பிறைச்சந்திரனையும் சடையிலே சூடும் மத்தம் (maththam) : ஊமத்தம்;

முக்கட் பொற்பாளர் உசாவிய (mukkat poR pALar usAviya) : He who has three eyes and is known as handsome SivA asked You to interpret It; முக்கண்ணராகிய அழகிய சிவபிரான் சொல்லுக என்று கேட்க; பொற்பு = அழகு; உசாவு = அறிவுரை பெறு; விசாரி, ஆராய்.

அர்த்தக்குப் போதகமானது (arththakku bOdhagamAnadhu) : and It constituted the inner meaning of Your explanation! சொல்லப்பட்ட பொருளுக்கு உபதேச வித்தாக இருப்பது,

முத்திக்குக் காரணமானது (mukthikkuk kAraNamAnadhu ) : It is the cause of blissful liberation! மோட்சத்துக்குக் காரணமாக இருப்பது,

பெறலாகா முட்டர்க் கெட்டாதது (peRalAgA muttark ettAdhadhu) : It is inaccessible to stupid fools. பெறுவதற்கு முடியாததாய், மூடர்களுக்கு எட்டாததாய் இருப்பது,

நான்மறை எட்டிற்று எட்டாதெனவே வரு (nAnmaRai yettitru ettAdhenavE varu) : The four scriptures are trying hard to attain It, but It is still elusive. நான்கு வேதங்களும் எட்டுவதற்கு முயன்றாலும், எட்ட முடியாமல் இருக்கும் பொருள் அது,

முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே (muRpattu appAlaiyil Avadhu purivAyE) : It is far earlier than the earliest substance; kindly preach It to me! முதன்மையான பொருளுக்கும் அப்பாற்பட்ட பொருள் எதுவோ, அதனை எனக்கு உபதேசித்து அருள்வாயாக.

செக்கட்(ண்) சக்ராயுத மாதுலன் (chekkaN chakrAyudha mAthulan) : Your maternal uncle, Vishnu, with reddish eyes and the wheel in hand, செங்கண்களையும், சக்ராயுதத்தையும் உடைய தாய்மாமன் திருமால் மாதுலன் (mAthulan) : uncle, மாமா;

மெச்சப் புல் போது படாவிய (mechcha pul pOdhu padAviya) : is full of praise for Your deeds. You made the grass and flowers grow abundantly; மெச்சிப் புகழும்படியாக, புல்லையும் மலரையும் பெரிதாகப் படரவிட்டு,

திக்குப் பொற் பூதரமே முதல் வெகு ரூபம் சிட்டித்துப் (dhikku poR bUdharamE mudhal vegu rUpam chittiththu) : In every direction, You created, right from the golden mount of Meru, all shapes and forms. திசைகளில் உள்ள பொன் மேரு மலை முதலாக பலப்பல உருவங்களைச் சிருஷ்டித்து,

பூத பசாசுகள் கைக்கொட்டிட்டு ஆட மகோததி செற்று (bUtha pasAsugaL kaikkottit Ada mahOdhadhi setru) : The devils and the ghosts danced, clapping their hands; the vast ocean evaporated; பூதங்களும் பேய்களும் கைகொட்டி ஆடும்படியாக, பெருங்கடலை வற்றடித்து,

உக்ரச் சூரனை மார்பு அகம் முது சோரி கக்க (ugra sUranai mArbaga mudhu sOri kakka) : the fierce demon, SUran, was hurt in his chest, with blood gushing; கடுமையான சூரனுடைய மார்பகத்திலிருந்து மிகுந்த இரத்தம் கக்கச்செய்யுமாறு, சோரி (sOri) : blood, rain, shower, இரத்தம், மழை;

கைத் தாமரை வேல் விடு (kaith thAmarai vEl vidu) : when You wielded the spear from Your lotus-like hand, தாமரை மலர் போன்ற திருக்கரத்தினின்று வேலாயுதத்தை விட்ட

செச்சைக் கர்ப்பூர புயாசல (sechchaik karppUra buyAsala) : Oh mighty one with mountain-like shoulders, soaked in thick paste of sandalwood and camphor! செஞ்சந்தனமும் பச்சைக் கற்பூரமும் பூசிய புயமலையை உடையோனே, செச்சை (sechchai) : செஞ் சந்தனக் குழம்பு;

கச்சுற்றப் பார பயோதர முலையாள் (kachchutra bAra payOdhara mulaiyAL) : She is the heavy bosomed one, filled with the milk of Grace, கச்சணிந்த கனமான பால் ஊறும் மார்பினாளும், பயம் (payam) : water or milk, பயோதரம் (payOtharam) : பாலைக்கொண்ட முலை அல்லது தண்ணீரை கொண்ட மேகம் அல்லது கடல்;

முன் கற்புத் தப்பாது உலகேழையும் ஒக்கப் பெற்றாள் (mun kaRpu thappAdhu ulagu Ezhaiyum okkap petrAL) : and She once delivered the seven worlds simultaneously, by the sheer power of Her chastity;

விளையாடிய கச்சிக் (viLaiyAdiya kachchi kachchAlaiyil) : and She, Mother Kamakshi, performed so many mystical deeds at this place, KAnchipuram, முன்னர், கற்புநிலை தவறாமல் ஏழு உலகங்களையும் ஒருங்கே ஈன்றளித்தவளுமான காமாட்சித் தாயார்

கச்சாலையில் மேவிய பெருமாளே.(kachchalaiyil mEviya perumALE.) : in the heart of which is Kachchapeswaram, where you reside, Oh Great One! திருவிளையாடல்கள் பலபுரிந்த காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

At Kachchpeswaram in Kanchipuram, Vishnu worshipped Shiva to atone for the sin of ravaging the sea due to excessive pride over His role as a tortoise in supporting the mandara mountain that served as a churning rod during the churning of the milky ocean.

கச்சாலை என்பது காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபாலயம் என்ற திருக்கோயில். தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, மந்தர கிரியாகிய மத்து, கடலில் அழுந்தாவண்ணம் திருமால் ஆமை உருவம் கொண்டு மலையை முதுகில் தாங்கினார். பின்னர் அவர் இறுமாப்படைந்து கடலைக் கலக்க, சிவபிரானது ஏவலால் விநாயகர் அந்த ஆமையைக் கொன்று அதன் ஒட்டைச் சிவபிரான் அணியத் தந்தனர். அதன் பின் திருமால் தமது குற்றம் தீரப் பூசித்த சோதி லிங்கமே கச்சபேசர்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே