ta The Nectar of Thiruppugazh: 440. வம்பறாச் சில

Wednesday, 28 December 2016

440. வம்பறாச் சில

ராகம் : ஆபோகி தாளம்: ஆதி 2 களை
வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத்திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற்றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக்கழல்சேர்வார்
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
வைக்கச் சற்றுக்கருதாதோ
வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப் படமாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத்திருமார்பா
கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு
கைக்குக் கற்புத்தவறாதே
கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப்பெருமாளே.

Learn The Song

Listen Music Files - Music podcasts -

Paraphrase

வம்பு அறாச் சில கன்னமிடும் (vambu aRA chila kannam idum): These people indulge in loose talk and quote words stolen from archaic books; வம்பு வார்த்தைகள் நீங்காததும், சில பழைய நூல்களிலிருந்து சொற்களைத் திருடியும், கன்னம்(kannam): stealing;

சமயத்துக் கத்துத் திரையாளர் (samayaththuk kaththu thiraiyALar): and on religious issues, they argue loudly like the roaring wavy sea. சமயவாதம் செய்து அலைகடல் போல கத்தி ஆரவாரிப்பவரின் திரை(thirai): waves;

வன்கலாத்திரள் தன்னை அகன்று (van kalAth thiraL thannai aganRu): I want to get away from the crowd of such rude artists. வன்மையான கலைக் கூட்டத்தினின்று விலகி,

மனத்திற் பற்றற்று (manaththiR patratRu): My mind should become totally detached. மனத்தில் உள்ள பற்றுக்கள் அனைத்தும் அறப்பெற்று,

அருளாலே தம் பராக்கு அற நின்னை உணர்ந்து (aruLAlE tham parAkkaRa ninnai uNarnthu): Those who experience You by Your grace after conquering their egoism; தம்மைத் தாமே நோக்கியுள்ள அகம்பாவம் அற்றுப்போய், உன்னையே உணர்ந்து உள்ளம் உருகி,

உருகி பொற் பத்மக் கழல் சேர்வார் தம் (urugip poR pathmak kazhal sErvAr): those who melt in their devotion and prostrate at Your lovely lotus feet; அழகிய தாமரை மலரன்ன அடிகளைச் சேர்பவர்களுடைய

குழாத்தினில் என்னையும் அன்பொடு (tham kuzhAththinil ennaiyum anbodu): it is in their company, from now on, I should kindly be கூட்டத்தினில் அடியேனையும் அன்போடு

வைக்கச் சற்றுக் கருதாதோ(vaikkach chatRu karuthAthO): placed; will You not show me even the slightest consideration for that? கூட்டிவைக்க உன் திருவுள்ளத்தில் சற்று நினைக்கலாகாதோ?

வெம் பராக்ரம மின் அயில் கொண்டு (vem parAkrama minnayil koNdu): With Your spear, possessing extraordinary strength and sparkling like lightning, வெப்பமான ஆற்றலும், ஒளியும் மிக்க வேலாயுதத்தைக் கொண்டு அயில்(ayil): sharp, metonymically refers to 'vel';

ஒரு வெற்புப் பொட்டுப் பட(oru veRpup pottup pada): the matchless Mount Krouncha was crushed into powder; ஒப்பற்ற கிரெளஞ்சமலை பொடிபடும்படிச் செய்து,

மாசூர் வென்ற பார்த்திப( mA sUr venRa pArththiba): and the demon, SUran, who took the disguise of a mango tree, was conquered by You, Oh Lord! மாமரமாய் நின்ற சூரனை வென்ற அரசே,

பன்னிரு திண்புய (panniru thiN buya): You have twelve strong shoulders! வலிமை மிக்க பன்னிரண்டு தோள்களை உடையவனே,

வெட்சிச் சித்ரத் திருமார்பா ( vetchic chithra thiru mArbA): Your hallowed chest is adorned with the garland of vetchi flowers! வெட்சிமாலையை அணிந்த அழகிய திருமார்பனே,

கம்பராய்ப் பணி மன்னு புயம் பெறுகைக்கு (kambarAy paNi mannu buyam peRugaikku): In order to embrace the shoulders of EgAmbarEswar (SivA), adorned with serpents, ஏகாம்பரேஸ்வரராய் விளங்கும் சிவபிரானின் பாம்புகள் நிலைத்துள்ள தோள்களைத் தழுவும் பொருட்டு,

கற்புத் தவறாதே கம்பை ஆற்றினில் அன்னை தவம்புரி (kaRpu thavaRAthE kambai AtRinil annai thavam puri): She, the Divine Mother (KAmakshi) of great chastity, performed penance on the banks of the River Kampai கற்பு நிலை தவறாமல், கம்பா நதிக்கரையில் காமாக்ஷி அம்மை தவம் செய்திருந்த

கச்சிச் சொக்கப்பெருமாளே. (kachchi chokkap perumALE.): in this place, Kachchi (kAnjeepuram), where You reside enchantingly, Oh Great One! கச்சி என்ற காஞ்சீபுரத்தில் அழகாக வீற்றிருக்கும் பெருமாளே.

No comments:

Post a Comment


Transliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.