434. படிறொழுக்கம்
Learn The Song
Raga Saranga (Janyam of 65th mela Kalyani)
Arohanam: S P M2 P D2 N3 S Avarohanam: S D2 P M2 R2 G3 M1 R2 SParaphrase
படிறு ஒழுக்கமும் மட மனத்து உளபடி பரித்து (padiRu ozhukkamum mada manaththuLa padi pariththu) : With deceitful behaviour well entrenched in their stupid mind, வஞ்சனையுடன் கூடிய நடையை மூட மனத்துள் உள்ளபடியே வைத்துக்கொண்டு, படிறு (padiRu) : deceit; வஞ்சனை; மடம் (madam) : அறியாமை; பரித்தல் (pariththal) : தாங்குதல்;
உடன் நொடி பேசும் பகடிகட்கு (udan nodi pEsum pagadigatku) : and every other second, they speak phony words. To such vain harlots, உடனுக்கு உடன் தந்திரமாகப் பேசும் நொடி (nodi) : தந்திரம்; பகடி (pagadi) : வெளி வேடதாரிகள்;
உள மகிழ மெய்ப் பொருள் பல கொடுத்து (uLa magizha meyp poruL pala koduththu) : I gave my body and many a valuable thing, just to please them; பகட்டுப் பொது மகளிருக்கு, அவர்கள் மனம் மகிழ்வதற்காக, எனது உடம்பையும் பொருட்கள் பலவற்றையும் கொடுத்து,;
அற உயிர் வாடா (aRa uyir vAdA) : my life became very miserable; மிகவும் உயிர் வாடி நின்று,
மிடி எனப் பெரு வடவை சுட்டிட (midi enap peru vadavai suttida) : indigence burnt me like the big fire of vadavai (vadavai is supposed to be one huge fireball coming from the northern direction to destroy the universe); and தரித்திரம் என்ற பெரிய வடவாக்கினி என்னைச் சுட்டுப் பொசுக்க, மிடி(midi) :வறுமை;
விதனம் உற்றிட மிக வாழும் விரகு கெட்டு (vidhanam utrida miga vAzhum viragu kettu ) : I was tormented by extreme distress. To end that anguish, பெருந்துன்பம் ஏற்பட்டு, அதனால் மிகத் துயரத்தோடு வாழும் அந்தக் கேவலமான வாழ்வு நீங்கி, விதனம் (vithanam) : துன்பம்;
அரு நரகு விட்டு இருவினை அறப் (aru naragu vittu iru vinai aRa) : and to get me out of that singular hell, and to do away with deeds (both good and bad), அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற என் இருவினைகளும் ஒழிய,
பதம் அருள்வாயே (padham aruLvAyE) : kindly bless me with Your hallowed feet! உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக.
கொடி இடைக் குற வடிவியைப் புணர் குமர (kodi idaik kuRa vadiviyaip puNar kumara) : Oh KumarA, You unite with VaLLi, with a waist slim like a creeper, the beautiful damsel of the KuRavAs! கொடி போன்ற இடையை உடைய குறமகள், அழகிய வள்ளியை மருவிக் கலந்த குமரனே,
கச்சியில் அமர்வோனே (kachchiyil amarvOnE) : You reside in Kachchi (kAnjeepuram). கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருப்பவனே,
குரவு செச்சை வெண் முளரி புத்தலர் குவளை (kuravu chechchai veN muLari puththalar kuvaLai) : Plenty of flowers like kurA, vetchi, white lotus and fresh blue lilies குராமலர், வெட்சி மலர், வெண்தாமரை, புதிதாக மலர்ந்த குவளைப்பூ முளரி (muLari) : தாமரை; புத்தலர் குவளை (puththalar kuvaLai) : புதியதாக மலர்ந்த குவளை மலர்;
முற்று அணி திருமார்பா (mutru aNi thirumArbA) : Your broad chest are adorned by all these flowers!இவை எல்லாம் நிரம்ப அணிந்து கொள்ளும் அழகிய மார்பினனே,
பொடி படப்பட நெடிய வில் கொடு புரம் எரித்தவர் குருநாதா (podi padappada nediya vil kodu puram eriththavar gurunAthA ) : Holding the Mount MEru as the large bow, He burnt down Thiripuram (by His mere smile), turning it into powder; and You are the master of that SivA!தூளாகி அழியும்படி, மேருமலையாகிய நீண்ட வில்லினைக் கொண்டு திரிபுரத்தை (சிரித்தே) எரித்தவரான சிவபிரானின் குருநாதனே,
பொரு திரைக்கடல் நிருதரைப் படை (poru thiraikkadal nirudharai padai) : The seas with unevenly rising waves, the strong demons and their armies மாறுபட்டு எழுகின்ற அலைகளை உடைய கடலையும், அசுரர்களையும், அவர்களது சேனையையும்;
பொருது உழக்கிய பெருமாளே. (porudhu uzhakkiya perumALE.) : were all churned and shaken by You in the war, Oh Great One! போர் செய்து கலக்கி அதிர வைத்த பெருமாளே. பொருது உழக்கிய (porudhu uzhakkiya ) : போர் செய்து கலக்கிய;
Comments
Post a Comment