கறுத்த தலை - J.R. விளக்கவுரை
By Smt. Janaki Ramanan, Pune You may read the explanation for the song karuththa thalai by clicking the underlined hyperlink. வேங்கட மலையில் உறை வேலவா சரணம். திருப்புகழ் பாடல்களுக்கு ஆங்காங்கே புராணங்களைக் கொண்டு வநது சேர்த்துத் பொருட் செறிவும் மெருகும் ஊட்டுகிறார் அருணகிரிநாதர். "கறுத்த தலை" என்ற திருவேங்கடம் பாடலில் கந்தபுராணத்தின் அடிச்சுவட்டில் நடக்கிறார். மத நல்லிணக்கம் என்ற நோக்கமும் இதில் நிறைவேறுகிறது. மலர்க்கமல வடிவுள செங்கை அயிற் குமர குகை வழி வந்த மலைச் சிகர வடமலை நின்ற பெருமாளே அதாவது, சிவந்த தாமரைக் கரத்தில் வேல் தாங்கி ஒரு குகை வழியே வேங்கட மலை வந்து சேர்ந்த பெருமானே என்கிறார். சுவாமிகள் திருப்பதிக்குச் சென்ற காலத்தில் வடவேங்கடத்தில் முருகர் ஆலயத்துடன் திருமால் ஆலயமும் இருந்தது. ஒரு காலத்தில் முருகபிரான் உமையம்மையாருடன் பிணங்கி பாதாள வழியே வந்து ஒரு குகை வழியாகத் திருவேங்கடத்துக்கு வந்த சரிதத்தைத் இந்த அடிகளில் குறித்துள்ளார்.