313. இல்லையென நாணி


ராகம்: குமுதக்ரியாதாளம்: ஆதி
இல்லையென நாணி யுள்ளதின் மறாம
லெள்ளினள வேனும்பகிராரை
எவ்வமென நாடி யுய்வகையி லேனை
யெவ்வகையு நாமங்கவியாகச்
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
தொல்லைமுத லேதென்றுணரேனைத்
தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது
துய்யகழ லாளுந் திறமேதோ
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
மையவரை பாகம் படமோது
மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
வள்ளிமலை வாழுங்கொடிகோவே
வெல்லுமயி லேறு வல்லகும ரேச
வெள்ளிலுட னீபம் புனைவோனே
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
வெள்ளிநகர் மேவும்பெருமாளே.

Learn The Song




Paraphrase

One does not have to be rich to be able to share (money/food) with others. One could simply give a tiny portion that is within our means. There are uncharitable people, hesitant to share even a tiny bit of their fortune; instead of despising these miserly people, I befriend them! I do not sing hymns eulogizing You; I neither realize the limitlessness of Your grandeur, nor the limitations of an impermanent and decaying body. Yet, You have have magnanimously taken me into Your fold.

இல்லையென நாணி உள்ளதின் மறாமல் (illaiyena nANi uLLathin maRAmal) : Being embarrassed to say no, and without holding back any possession, இல்லை என்று கூற வெட்கப்பட்டு, உள்ள பொருளின் அளவுக்கு மறுக்காமல்,

எள்ளின் அளவேனும் பகிராரை (eLLin aLavEnum pagirArai) : one should be able to share with others whatever little bit one has. People who do not share with others thus,

எவ்வமென நாடி உய் வகையிலேனை (evvam ena nAdi uy vagai ilEnai) : should be denounced by me. Yet, I do not know how to liberate myself by by avoiding such condemnable people with careful discernment, வெறுக்கத்தக்கவர்கள் என்று ஆராய்ந்தறிந்து பிழைக்கும் வழி இல்லாத என்னை, எவ்வம் — துன்பம், தீராநோய், குற்றம், இகழ்ச்சி, இழிவு;

எவ்வகையு நாமம் கவியாக சொல்ல அறியேனை (evvakaiyu nAmam kaviyAga cholla aRiyEnai) : I do not know how to compose beautiful poems with Your venerable names.

எல்லை தெரியாத தொல்லை முதல் ஏதென்று உணரேனை (yellai theriyAtha thollai muthal EthenRu uNarEnai ) : I do not realise that You are endless, pristine and the primordial principle. முடிவெல்லை காண முடியாத பழைய மூலப்பொருள் இன்னது என்று உணரும் அறிவில்லாத என்னை,

தொய்யுமுடல் பேணு பொய்யனை (thoyyum udal pENu poyyanai) : I am a liar cherishing this decaying mortal body of mine.

விடாது துய்ய கழலாளுந் திறமேதோ (vidAthu thuyyakazha lALum thiRamEthO) : Nonetheless, without forsaking, You always protect me with Your holy feet; and I wonder at Your magnanimity!

வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ (valla asurar mALa nalla surar vAzha) : The mighty asuras were left to perish; the virtuous DEvAs were protected;

மைய வரை பாகம் பட மோது (maiya varai bAgam pada mOthu) : and the sinful mount Krouncha was smashed by You. குற்றமுள்ள கிரெளஞ்சகிரி கூறுபட்டழிய மோதியவரே! மை = குற்றம்; வரை = மலை;

மை உலவு சோலை செய்ய குளிர் சாரல் (mai ulavu sOlai seyya kuLir sAral) : Dense groves and cool mountains abound இருண்ட சோலைகளும், செவ்விய குளிர்ந்த சாரலை உடைய; மை = இருள்;

வள்ளி மலை வாழுங் கொடி கோவே (vaLLimalai vAzhum kodi kOvE) : in VaLLimalai where lives the petite damsel, VaLLi, a veritable creeper; and You are her consort! வள்ளிமலையில் வாழும் குறக்குலக் கொடியாகிய வள்ளிபிராட்டியின் நாயகரே!

வெல்லு மயிலேறு வல்ல குமரேச (vellu mayilERu valla kumarEsa) : You mount the triumphant Peacock, Oh Lord Kumara!

வெள்ளிலுடன் நீபம் புனைவோனே (veLLil udan neebam punaivOnE) : You adorn Yourself with fresh viLa leaves and Kadappa flowers. விளா மரத்தின் தளிருடன் கடப்ப மாலையை அணிபவனே! வெள்ளில் &38212; விளா; ;

வெள்ளி மணி மாட மல்கு திரு வீதி (veLLimaNi mAda malgu thiru veethi) : In the prosperous-looking streets of this town, there are many beautiful silvery-white balconies in, வெண்ணிறமான அழகிய மாடங்கள் நிறைந்த,

வெள்ளி நகர் மேவும் பெருமாளே. (veLLinakar mEvum perumALE.) : VeLLigaram (meaning, Silver Town), which is Your abode, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே