141. முத்துத்தெறிக்க
ராகம் : மோகனம் தாளம் : கண்ட த்ருவம் (17) முத்துத் தெறிக்கவள ரிக்குச் சிலைக்கைமதன் முட்டத் தொடுத்த மலராலே முத்தத் திருச்சலதி முற்றத் துதித்தியென முற்பட் டெறிக்கு நிலவாலே எத்தத் தையர்க்குமித மிக்குப் பெருக்கமணி இப்பொற் கொடிச்சி தளராதே எத்திக் குமுற்றபுகழ் வெற்றித் திருத்தணியில் இற்றைத் தினத்தில் வரவேணும்