ta The Nectar of Thiruppugazh: பழனி வகுப்பு

Thursday, 24 September 2015

பழனி வகுப்பு

ராகம் : மத்யமாவதி தாளம்: சதுச்ர துருவம் கண்ட நடை (35)
எந்தவினை யும்பவமும் எந்தவிட மும்படரும்
எந்தஇக லும்பழியும் எந்தவழு வும்பிணியும்
எந்தஇகழ் வுங்கொடிய எந்தவசி யுஞ்சிறிதும் அணுகாமலே

எந்தஇர வுந்தனிமை எந்தவழி யும்புகுத
எந்தஇட முஞ்சபையில் எந்தமுக மும்புகலும்
எந்தமொழி யுந்தமிழும் எந்தவிசை யும்பெருமை சிதறாமலே

வந்தனைசெய் துன்சரண நம்புதல்பு ரிந்தஅருள்
வந்தநுதி னந்தனிலும் நெஞ்சில்நினை வின்படிவ
ரந்தரஉ வந்தருள்இ தம்பெறுவ தன்றிநெடு வலைவீசியே

வஞ்சவிழி சண்டன்உறு கின்றபொழு துங்குமர
கந்தஎன நன்கறைய வுந்தெளிவு தந்துயிர்வ
ருந்துபய முந்தனிமை யுந்தவிர அஞ்சலென வரவேணுமே

தந்தனன தந்தனன டிண்டிகுடி டிண்டிகுடி
குண்டமட குண்டமட மண்டமென நின்றுமுர
சந்திமிலை பம்பைதுடி திண்டிமமு ழங்கும்ஒலி திசைவீறவே

தண்டஅமர் மண்டசுரர் மண்டைநிண மென்றலகை
யுண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன்வ ணங்குபத
தண்டைசிறு கிங்கிணிபு லம்பிடவ ரும்பவனி மயில்வாகனா

செந்தளிரை முந்துபடம் என்றுளம ருண்டுநிறை
சந்தனவ னங்குலவு மந்திகுதி கொண்டயல்செ
றிந்தகமு கின்புடைப துங்கிடவ ளைந்துநிமிர் மடல்சாடவே

சிந்தியஅ ரம்பைபல வின்கனியில் வந்துவிழ
மென்கனியு டைந்தசுளை விண்டநறை கொண்டுசிறு
செண்பகவ னங்கள்வளர் தென்பழநி யம்பதியின் முருகேசனே.


Learn The Song

Music Hosting - Listen Audio Files - Thirupazhani Vaguppu

Paraphrase

எந்த வினையும் பவமும் எந்த விடமும் படரும் எந்த இகலும் பழியும் எந்த வழுவும் பிணியும் எந்த இகழ்வுங் கொடிய எந்த வசியுஞ் சிறிதும் அணுகாமலே (endha vinaiyum bavamum endha vidamum padarum endha igalum pazhiyum endha vazhuvum piNiyum endha igazhvun kodiya endha vasiyun siRidhum aNugaamalE): Without any karmic bondages, endless cycles of birth, poison, sorrow, enmity, condemnation, sin, disease, scorn or any severe black magic approach/affect me; பவம்(bavam): sin, birth; படர்(padar): grief; இகல்(igal): enmity;

எந்த இரவுந் தனிமை எந்த வழியும் புகுத எந்த இடமுஞ் சபையில் எந்த முகமும் புகலும் எந்த மொழியுந் தமிழும் எந்த விசையும் பெருமை சிதறாமலே (endha iravum thanimai endha vazhiyum pugudha endha idamun sabaiyil endha mugamum pugalum endha mozhiyun thamizhum endha visaiyum perumai sidhaRaamalE): any night, any lonely path, any place, public platform, any langugae I speak or Tamil, any occasion – under any of these circumstances, I should not lose or dent my reputation; விசை(visai: situation/circumstance; One can also interpret it as எந்த இசையும் பெருமை சிதறாமலே.

வந்தனை செய்து உன் சரண நம்புதல் புரிந்த அருள் வந்து அநுதினந்தனிலும் நெஞ்சில் நினைவின் படி வரந்தர உவந்தருள் இதம் பெறுவதன்றி (vandhanai seydhu un charaNa nambudhal purindha aruL vandhu anudhinam thanilum nenjil ninaivin padi varanthara uvandharuL idham peRuvadhandri nedu valai veesiyE): I should worship and surrender to Your feet and gain your grace so that I receive everyday all the boons that my heart desires; apart from that,

நெடு வலை வீசியே வஞ்ச விழி சண்டன் உறுகின்ற பொழுதுங் குமர கந்த என நன்கு அறையவுந் தெளிவு தந்து உயிர் வருந்து பயமுந் தனிமையுந் தவிர அஞ்சலென வரவேணுமே (vanja vizhi chaNdan uRugindra pozhudhum kumara kandha ena nangu aRaiyavun theLivu thandhuyir varundhu bayamun thanimaiyun thavira anjalena varavENumE): when the cunning-eyed Yama comes casting a wide net, I should have the clarity of mind to cry 'Kumara, Kandha' and You should come offering me refuge to remove the fear and loneliness clutching my mind at the time of death;

தந்தனன தந்தனன டிண்டிகுடி டிண்டிகுடி குண்டமட குண்டமட மண்டமென நின்று முரசந்திமிலை பம்பைதுடி திண்டிம முழங்கும் ஒலி திசை வீறவே (than thanana than thanana diNdi kudi diNdi kudi kuNda mada kuNda mada maNda mena nindru mura sandhimilai pambaithudi thiNdima muzhangum oli dhisai veeRavE): The war drums murasu, thimilai, pambai, thudi, thindimum blast 'than thanana than thanana diNdi kudi diNdi kudi kuNda mada kuNda mada maNda' and the drumming sounds boom in all the directions;

தண்ட அமர் மண்டசுரர் மண்டை நிணம் மென்று அலகை உண்டு உமிழ்தல் கண்டமரர் இந்திரன் வணங்கு பத தண்டை சிறு கிங்கிணி புலம்பிட வரும் பவனி மயில்வாகனா (thaNda amar maNdasurar maNdai niNam endralagai uNdumizhdhal kaNdamarar indhiran vaNangu padha thaNdai siRu kingkiNi pulambida varum bavani mayil vaahanaa): the ghosts chewed the heads and the sinews of the regiments of demons and then spat it out. Seeing this, the devas and Indra worshipped the feet of Murugan who wears a tinkling anklet and rides a peacock; தண்ட அமர்(thanda amar): interpreted in two ways: regiments in the war or useless war; அலகை (alagai): பேய், devils or evil spirits;

செந்தளிரை முந்து படம் என்று உள மருண்டு நிறை சந்தன வனங் குலவு மந்தி குதி கொண்டயல் செறிந்த கமுகின் புடை பதுங்கிட வளைந்து நிமிர் மடல் சாடவே (sen thaLirai mundhu padam endruLa maruNdu niRai chandhana vanan kulavu mandhi kudhi kondu ayal seRindha kamugin pudai padhungida vaLaindhu nimir madal saadavE): mistaking the newly sprouted leaves of the sandal tree to be the raised hood of a snake, the frightened monkeys roaming the forest jump away and hide in the dense areca nut plantations whose branches bend and straighten with the impact and hit கமுகு(kamugu): arecanut; முந்து படம் (munthu padam): raised hood of a serpent; மந்தி (manthi): monkey; மடல்(madal): branches;

சிந்திய அரம்பை பலவின் கனியில் வந்து விழ மென்கனி உடைந்த சுளை விண்ட நறை கொண்டு சிறு செண்பக வனங்கள் வளர் தென்பழநி அம்பதியின் முருகேசனே (sindhiya arambai palavin kaniyil vandhu vizha men kani udaindha suLai viNda naRai koNdu siRu seNbaga vanangaL vaLar then pazhaniyam padhiyin murugEsanE): the plantain trees which fall on the jack fruit tree and their soft fruits break. The bees feast on the honey exuded by the broken jack fruits and in turn nourish the shenbaga trees in the South Pazhani and You reside in this vibrant Pazhani, oh Lord! அரம்பை(arambai): plantain tree; நறை (naRai): honey;

No comments:

Post a Comment


Transliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.