5. பெருத்த வசன வகுப்பு
அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை
யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும்
அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும்
அவிழ்ச்சி பெறஇனி திருக்கு மவுனமும்
அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும்
அரற்று வனபொருள் விகற்ப மொழிவதும்
அழுக்கு மலவிருள் முழுக்கின் உழல்வதை
யடக்கி யவநெறி கடக்க விடுவதும்
ராகம் : சந்திரகௌன்ஸ்
எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு
எமக்கும் இறையவன் எனத்தி கழுவதும்
இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல்
இணக்கம் அறவொரு கணக்கை யருள்வதும்
இருக்கு முதலிய சமஸ்த கலைகளும்
இதற்கி தெதிரென இணைக்க அரியதும்
இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும்
ராகம் : ரஞ்சனி
நெருக்கு வனவுப நிடத்தின் இறுதிகள்
நிரப்பு கடையினில் இருப்பை யுடையதும்
நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென
நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும்
நினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு
நிலத்தில் நிலைபெற நிறுத்த வுரியதும்
நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும்
ராகம் : வசந்தா
உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர
உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும்
ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்
உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர்
ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை
உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே.
Learn The Song
Paraphrase
Peruttha Vachanam (Great Spiritual Words or Great Spiritual Truths) is the summary of upanishads. It contains a series of statements about the nature of reality in both its manifest and unmanifest state, and proclaims the final truth that everything is That and That alone. Peruththa vachanam refers to the "mahavakyas" found in the four vedas. Mahavakyas are considered four in number.
- Prajñānam Brahma (प्रज्ञानम् ब्रह्म) - "Insight is Brahman," or "Brahman is intelligence" (Rig Veda; Prajñānam = consciousness, wisdom, intelligence;)
- Ayam Ātmā Brahma (अयम् आत्मा ब्रह्म) - "This Self (Atman) is Brahman" (Atharva Veda)
- Tat Tvam Asi (तत् त्वम् असि) - "That essence (tat, referring to sat, "the Existent") are you" (Sama Veda)
- Aham Brahmāsmi (अहम् ब्रह्मास्मि) - "I am Brahman" (Yajur Veda)
They all express the insight that the individual self (jiva) which appears as a separate existence, is in essence a part manifestation of the whole (Brahman).
அருக்கன் உலவிய சகத்ரயமும் இசை அதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும் ( arukkan ulaviya jaga thrayamum isai adhiRkoL suvai ena anaiththu niRaivadhum) : It permeates all the three worlds (Bhur, bhuva, suvah) where the sun traverses and fills all the objects as their intrinsic pleasurable taste/essence; சூரியன் உலவுகின்ற மூவுலகங்களும், சொல்லப் படுகின்ற அவ்வுலகங்களில் உள்ளதான இன்பங்களும் இதுவே எனும் படி எல்லாப் பொருள்களில் நிறைந்துள்ளதும்; தனியாக தெரிந்தாலும் ஆத்மா பிரம்மத்தின் சாரம், மற்றும் அதன் வெளிப்பாடு. பிரம்மமே அறிவிற்கும், புரிந்து கொள்வதற்கும், உணர்வதற்கும் சிந்திப்பதற்கும் மூலம். காரணமும் அவனே விளைவும் அவனே.; அருக்கன் (arukkan) : sun; சகத்ரயம் (sagathrayam) : three worlds; பூர், புவ, சுவர் எனும் மூவுலகங்களிலும்; பூர் = அடிநிலை உலகு, பாதால உலகுகள்; புவ = புவி, உலகு; ஸுவ = சுவர் – சொர்க்கம், மேலுலகுகள்.
அவஸ்தை பலவையும் அடக்கி அகிலமும் அவிழ்ச்சி பெற இனிது இருக்கு மவுனமும் (avasthai palavaiyum adakki akilamum avizhchchi peRa inidhu irukkum mavunamum) : It is the blissful silence which curbs all kinds of suffering and nullifies the actions of mind and body; வேதனை பலவற்றையும் அடக்கி ஒழித்து திரிகரணமாகிய மனம், வாக்கு, காயம் செயல் அற்று போக, இன்ப நிலையில் இருக்கும் மவுன நிலைப் பேறும்; அவிழ்ச்சி பெற (avizhcchi peRa) : "உரை அவிழ, உணர்வழிய, உளமவிழ, உயிர் அவிழ" (சீர் பாத வகுப்பு) அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்து திரைகளும் அகல, ஆன்மாவின் தூய்மையான ஒளி தோன்ற, அவ் ஆன்ம ஒளியில் நிலைபெற்று மௌனத்தை உற்ற ஞானியார் காண்பான், காணப்படு பொருள், காட்சி ஆகிய மூன்றையும் கடந்து பரம ஆனந்தத்தில் திளைத்தவர் ஆவர்.
அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும் அரற்றுவன பொருள் விகற்பம் ஒழிவதும் (asattu veRu vazhi vazhakkar aRuvarum aratru vana poruL vigaRpam ozhivadhum) : It lies beyond the differing concepts about the omnipresent consciousness offered by the foolish and vain votaries of the six faiths who debate fanatically, prattling about their faith and negating others; விகற்பம் (vikaRpam) : difference of opinion, misunderstanding; அறிவில்லாததும் சத்து அற்றதுமான வழியில் வழக்கிடுவோரான புறச் சமய வாதிகள் அறுவரும் கூச்சலிடுவதான மெய்ப் பொருளுக்கு மாறுபட்ட கருத்துக்களை எடுத்துக் கூறி விளக்கி அந்த சமயக் கொள்கைகளை நிராகரிப்பதும்
அழுக்கு மல இருள் முழுக்கின் உழல்வதை அடக்கி அவநெறி கடக்க விடுவதும் (azhukku mala iruL muzhukkin uzhalvadhai adakki avaneRi kadakka viduvadhum) : It helps those ignoramus who wallow and sink in the dark mire of the three impurities of arrogance, karma and maya to cross over; அழுக்கு மயமான ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மல இருட்டிலே முழுகி அலைவதை ஒழித்து பாவ வழியை தாண்ட உதவுவதும்;
எருக்கும் இதழியும் முடிக்கும் இறைகுரு எமக்கும் இறையவன் எனத் திகழுவதும் (erukkum idhazhiyum mudikkum iRai guru emakkum iRaiyavan enath thigazhu vadhum) : It is that which manifests as Murugan, the Preceptor/Guru to Lord Shiva who wears the arka and cassia flowers on His head; இருக்கு மலரையும் கொன்றை மலரையும் முடியில் சூடும் பெருமானாகிய சிவபிரான் 'எமக்கு குருமூர்த்தி எமக்கும் தலைவன் இந்த ஆறுமுகனே' என்று மதிக்க வைக்கத் தக்க உபதேச மொழியாய் விளங்குவதும்;
இரட்டை வினைகொடு திரட்டு மல உடல் இணக்கம் அற ஒரு கணக்கை அருள்வதும் (irattai vinai kodu thirattu mala udal iNakkam aRa oru kaNakkai aruLvadhum) : It provides the method to dissociate myself from the dirty body that is the sum of good and bad deeds; இணக்கம் அற (iNakkam aRa) : to break the connection, dissociate; நல் வினை, தீ வினை எனும் இரண்டு வகை வினைகளால் திரட்டப்பட்டமலங்களுக்கு இடமான இவ்வுடலின் சம்பந்தம் ஒழிக்கும் ஒரு கணக்கை (பிறவி ஒழிக்கும் வழி) அருள்வதும்; இணக்கம் அற = தொடர்பு அடியோடு நீங்குவதற்கு, ஒரு கணக்கை அருள்வதும் = ஒரு உபாயத்தை சொல்லிக் கொடுத்ததும்;
இருக்கு முதலிய சமஸ்த கலைகளும் இதற்கு இது எதிரென இணைக்க அரியதும் (irukku mudhaliya samastha kalaigaLum idhaRkku idhu edhir ena iNaikka ariyadhum) : It cannot matched or compared to all the scriptures including the Rig Veda; இருக்கு (irukku) : Rig veda;
இறக்க எனது எதிர் நடக்கும் யமபடர் கடக்க விடுவதொர் இயற்கை அருள்வதும் (iRakka enadhu edhir nadakkum yamapadar kadakka viduvadhu or iyaRkai aruLvadhum) : It is that which endows me with a unique confidence to cross over to safety when the messengers of the Lord of Death come before me; என்னை எமபுரத்திற்கு செல்லக் கூட்டிப்போக வந்திருக்கும் எம தூதர்களை அடக்கி, அவர்களை திருப்பிச் செல்வதற்கான ஒரு ஒப்பற்ற மன வலிமையை அருள்வதும்
நெருக்குவன உபநிடத்தின் இறுதிகள் நிரப்பு கடையினில் இருப்பை உடையதும் (nerukkuvana upanidaththin iRudhigaL nirappu kadaiyinil iruppai udaiyadhum) : It exists as a perfectly matured state at the end of the Upanishads that tell the Truth comprehensively and tersely (in the form of aphorisms that are densely packed with Truth), நிரம்ப பொருள்களை எடுத்துச் சொல்வதான உபநிஷத்துக்களின் முடிவு கட்டும் முடிவில் இருப்பிடத்தை கண்டு விளங்குவதும்; நிரப்பு கடை = பூரண பக்குவ நிலை
வேதங்கள் இரு பெரும் பகுதிகளாக உள்ளன. ஒன்று கர்ம காண்டம், இன்னொன்று ஞான காண்டம். கர்ம காண்டத்தில் சடங்குகள், மந்திரங்கள் முதலானவை உள்ளன. வேதத்தின் இறுதிப் பகுதியான ஞான காண்டத்தில் தத்துவத் தேடல் உள்ளது.எனவே இவற்றைப் பொதுவாக வேத – அந்தம் அதாவது வேதாந்தம் என்று குறிப்பிடுவதுண்டு.
;
நெருப்பு நிலம் வெளி மருத்து வனமென நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும் ( neruppu nilam veLi maruththu vanamena niRaiththa neRi muRai karakkum uruvamum) : It is without form and lies concealed as the core and essence of fire, earth, ether, wind and water (and their combination), and has a subtle form that is beyond any theory/law; தீ, மண், வான், காற்று, நீர் எல்லாவற்றிலும் நிலைபெற்றும், ஒரு தத்துவ விதிமுறைக்கு அகப்படாமல் அவற்றிற்கு அப்பாற்பட்ட ஓர் உருவப் பொருளும்; ஐம்பூதங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது அவனது அருள் நிலை; மருத்து (maruththu) : wind; வனம் (vanam) : water; கரத்தல் = மறைத்தல்;
நினைப்பு நினைவது நினைப்பவனும் அறு நிலத்தில் நிலைபெற நிறுத்த உரியதும் ( ninaippu ninaivadhu ninaippavanum aRu nilaththil nilai peRa niRuththa uriyadhum) : It can establish the unwavering devotee to abide forever in the blissful state where Thought, object and thinker merge and the distinction between them vanishes; நினைவும், நினைக்கப் படும் பொருளும், நினைப்பவனும் அற்ற இடத்தில் நிலைப் பெற்று நிறுத்த வல்ல ஆற்றலை உடையதும் ; நினைப்பு (ninaippu) : thought; நினைவது (ninaivathu) : the object of thought; நினைப்பவன் (ninaippavan ) : the thinker; அறு நிலத்தில் (aRu nilaththil : a place devoid of the distinctions (between thinker, thought, object of thought), அற்றுப் போன இடத்தில்
நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட நிவிர்த்தி உற அநுபவிக்கு நிதியமும் (nilaiththa adiyavar malaiththal adhukeda nivirththi uRa anubavikku nidhiyamum) : It is the wealth of eternal happiness experienced when He removes the maya that traps even those standing steadily on the path of devotion, frees them from the shackles of attachment and grants them eternal happiness; பக்தி வழியில் மனம் நிலைத்து நிற்கும் அடியவர்கள் பிரபஞ்ச விஷயங்களில் பிரமித்தல் என்பது கெட்டு ஒழியவும், அவைகளின் சிக்கினின்றும் விடுதலை பெறவும் உதவுகின்ற அனுபவ நிலையைத் தரும் செல்வப் பொருளும்; நிவிர்த்தி = பரிகாரம் ;
உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர உளத்தொடு உரை செயல் ஒளித்து விடுவதும் (urukku thiruvaruL thiLaiththu magizh thara uLaththodu urai seyal oLiththu viduvadhum) : It is that which makes thought, word and deed lie submerged, making it possible to experience that joy Of bathing in the divine grace. உள்ளத்தை உருக்கும் திருவருளில் அனுபவித்து களிப்பு நிலையில் மனம், வாக்கு, காயம் இம்மூன்றின் தொழிலையும் மறைந்து போகும் படி செய்வதும்; உளத்தொடு உரை செயல் (uLaththodu urai seyal) : mind, speech and action;
ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென உயிர்க்கும் உயிர் என நிகழ்ச்சி தருவதும் (oLikkum oLiyena veLikkum veLiyena utirkkum uyirena nigazhchchi tharuvadhum ) : It is That which manifests as the light of lights, as space beyond space, and as the life of livesஉலகிற்கு ஒளி தரும் சூரியன், சந்திரன், அக்னி, தாரகைகள் முதலியவற்றுக்கெல்லாம் மூல ஒளியாய் திகழ்வதும், வெட்ட வெளியைத் தாண்டிய பரவெளியாய் திகழ்வதும், சராசரங்களில் சேதனம் அசேதனம் சகலத்திலும் உயிராய்த் திகழ்வதும்;
சுத்த மாயை மட்டும் விளங்கும் வெட்ட வெளியான பரமானந்த நிலையை மயில் ஆடு சுத்த வெளி என்று வாத பித்தமோடு என்ற பாட்டில் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.
குடமாகிய காரியத்தைக் குயவன் களிமண்ணிலிருந்து செய்வது போல உடம்பு முதலிய இக்காரியங்களை இறைவன் மாயை என்னும் மூலப்பொருளிலிருந்து உண்டாக்குகிறான். ஜடமான மாயையுடன் சிவமும் உயிருக்கு உயிராய் இருந்து அறிவதற்கு ஐம்பொறி முதலிய கருவிகளையும், இயங்குவதற்கு உலகத்தையும், நுகர்வதற்கு உலகப் பொருள்களையும் படைத்துக் கொடுக்கிறான்.
;
உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர் ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் (uraththa thani mayil ugaiththu nisicharar oLikka amar poru samarththan ) : Lord Shanmukha, the valorous one, rode on the strong peerless peacock to fight the asuras who ran and hid themselves; வலிய நிகரில்லாத மயிலைச் செலுத்தி அசுரர்கள் பயந்து ஓடும் வண்ணம் போர் புரியும் திறமை கொண்டவனும் ;
அணிதழை உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன் ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே.(aNi thazhai uduththa kuRamagaL maNakkum aRumugan oruththan aruLiya peruththa vachanamE) : It is the glorious moral sermon graciously given by the incomparable Murugan who married the hunter girl wearing a dress woven with green leaves. அழகிய தழைகளைப் போர்த்துக் கொண்டிருக்கும் வள்ளிப் பிராட்டியை திருமணம் செய்துகொண்ட சண்முகனும் ஒப்பற்ற தெய்வமுமாகியவன் எனக்கு உபதேசித்து அருளிய மகிமை மிக்க உபதேச மொழியே.
Nature of Brahman
Brahman is that which is permanent in things that change. It is without name and form, two attributes that characterise the world of appearance. Existence can never change, never perish, though the things that it permeates perish. Hence existence is the nature of Reality and is different from the things of form and name. Existence is unlimited by space, time and individuality. It is related to nothing, and has nothing similar to it.
Brahman is the source of knowing, sensing, learning, or understanding. He is responsible for creation and pervades them as their essence. The nature of Brahman is said to be Sat - Chit - Ananda. Sat means That which exists in the past, present and future, which has no beginning, middle and end, which is unchanging, which is not conditioned in time, space and causation, which exists during Jagrat, Svapna and Sushupti. Sat is Existence, which is infinite Consciousness and whose nature is Bliss. It is the ultimate Knower. It is imperceptible, for no one can know the knower, no one can know That by which everything else is known. “There is no seer but That, no hearer but That, no thinker but That, no knower but That.” The content of this limitless Self-Consciousness is itself. “Brahman is Infinite, the universe is Infinite, from the Infinite proceeds the Infinite, and after deducting the Infinite from the Infinite, what remains is but the Infinite.” This sentence of the Upanishad conveys the bewildering conclusion that after subtracting the Whole from the Whole, the Whole alone remains. The implied meaning here is the changeless and indivisible character of the Infinite Reality, in spite of forms appearing to be created within it.
Srutis emphatically declare: only 'Sat' was prior to the evolution of this universe.
Chit ((चित्) refers to the Drishta or the Seer, the Sense that makes sense of all other sense experiences. Sat-chit-ananda is the supremely blissful experience of the all-pervasive pure consciousness and ultimate reality.
In our everyday life, we experience only three states of consciousness — waking, deep sleep and dreaming, the jagrat, Sushupti and sushupti as mentioned above. Only during deep meditation do we experience the fourth subtle state of consciousness — the Pure Transcendental Consciousness — which is just silence. That’s the state where the mind and the senses are completely silent, but consciousness is fully awake; the mind experiences the blissful and Eternal Consciousness called Sivam and sees the whole outer world as distinct from it: transient and transitory.
Comments
Post a Comment