7. சேவகன் வகுப்பு

ராகம்: மாண்ட்அங்கதாளம் (14½)
2 + 1½ 2 + 1½ + 2 + 1½ + 2 +2
இருபிறை எயிறு நிலவெழ உடலம்
இருள்படு சொருபம் உடைக்கோ விடவே
இறுகிய கயிறு படவினை முடுகி
எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய்
அருமறை முறையின் முறை முறை கருதி
அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால்
அறிவொடு மதுர மொழியது குழறி
அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய்
ஒருபது சிரமும் இருபது கரமும்
விழஒரு பகழி தொடுத்தோன் மருகா
உரமது பெரிய திரிபுரம் எரிய
உயர்கன கிரியைவளைத்தோர் புதல்வா
மருவளர் அடவி வனிதையர் பரவ
மரகத இதணில் இருப்பாள் கணவா
வளைகடல் கதற நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழுச்சே வகனே.

Learn The Song



Paraphrase

இருபிறை எயிறு நிலவெழ உடலம் இருள் படு சொருபம் உடைக் கோ விடவே ( irupiRai eyiru nilavezha udalam iruLpadu sorupam udaikkO vidavE) : On the command of Yama Raja, whose body is dark and whose twin crescent moon-like teeth are flashing white light,

இறுகிய கயிறு பட வினை முடுகி எமபடர் பிடரி பிடித்தே கொடு போய் (iRugiya kayiRu pada vinai mudugi emapadar pidari pidiththE kodu pOy) : the messengers throw the noose around the neck in accordance with my past karmas and drag me by scruff of the neck to the land of Yama; the rope of the noose is the prana and is tied around the subtle body; சுவாசத்தில் இறுகக் கட்டி பிராணனை இழுத்துச் செல்லும் சூக்குமக் கயிற்றில் உயிர்கள் அகப்பட பூர்வ வினைகளின்படி எமதூதர்கள் சூக்கும உடம்பின் பிடரியில் கை வைத்துப் பிடித்துக் கொண்டு எமபுரத்திற்குச் செல்லும் போது

அருமறை முறையின் முறை முறை கருதி அதரிடை வெருவ ஒறுத்தால் (arumaRi muRaiyin muRai muRai karudhi adharidai veruva oRuththaal) : they weigh my past karmas and, as suggested by the incomparable vedas, scare and punish me on the way, அரிய வேதங்களிற் சொல்லியுள்ள விதிப்படி (செய்த வினைகளைத் தனித்தனி முறைப்படி சீர்தூக்திக்) கருதி (யமதூதர்கள்) என்னை கொண்டு போகும் வழியில், நான் பயப்படும்படி வருத்தித் தண்டித்தால்; வெருவு (veruvu) : fright; ஒறுத்தல் (oRuththal) : beating, punish;

வகையால் அறிவொடு மதுர மொழியது குழறி அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய் (vagaiyaal aRivodu madhura mozhiyadhu kuzhaRi avamaru pozhudhil azhaiththaal varuvaay) : and in that agitating last minute when the intellect and sweet talk become incoherent, I would call you in prescribed ways with emotionally charged voice and You should come at once. நல் உணர்ச்சி கூடிய புத்தியுடனும், வாய் குழறிய இனிய பேச்சுடனும், தடுமாற்றத்துடன் அந்தக் கடைசி நேரத்தில் உன்னை அழைக்கும் பொழுது உடனே வந்து காப்பாற்ற வேண்டும். அலம் (alam) : agitation of mind; வகையால் (vagaiyaal) : in appropriate/prescribed methods; நல்லவகையில்;

ஒருபது சிரமும் இருபது கரமும் விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா (orupadhu siramum irupadhu karamum vizha oru pagazhi thoduththOn marugaa) : You are the nephew of Lord Rama who, with an incomparable and unique arrow, cut off Ravana's ten heads and twenty arms; பகழி (pagazhi ) : arrow;

உரமது பெரிய திரிபுரம் எரிய உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா (uramadhu periya thiripuram eriya uyargana giriyai vaLaiththOr pudhalvaa) : You are the son of Lord Shiva who bent Mount Meru as an arrow and burnt to ashes the strong triple forts of Thripura;

மரு வளர் அடவி வனிதையர் பரவ மரகத இதணில் இருப்பாள் கணவா (maru vaLar atavi vanidhaiyar parava maragatha idhaNil iruppaaL kaNavaa) : You are the husband of Valli who is surrounded by hunter girls and seated on a raised green platform in the fragrant forest; மரு ( maru) : fragrant; அடவி (atavi) : forest;

வளைகடல் கதற நிசிசரர் மடிய மலையொடு பொருத முழுச் சேவகனே.(vaLai kadal kadhaRa nisicharar madiya malaiyodu porudha muzhu sEvakanE) : You are the Perfect Undaunted Warrior who fought with Mount Krauncha, making the seas that surround the earth wail and the demons die.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே