37. நிதிக்குப் பிங்கலன்
Learn the Song
Paraphrase
நிதிக்கு பிங்கலன் பதத்துக்கு இந்திரன் நிறத்தில் கந்தன் என்று இனைவோரை (nidhikku pingalan padhathukku indhiran niRaththil kandhan enRu inaivOrai ) : "Your wealth is like KubEran's (God of Wealth), your position is as exalted as IndrA's, and your complexion is as fair as that of Kanthan (Murugan)," with these words I used to shower accolades on stingy rich men! பிங்கலன் (pingalan ) : Kubera; இனைவோரை (inaivOrai ) : (தானம் கொடுப்பதற்கு) வருந்துவோரை;
நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி துன்ப நெஞ்சினில் (nilaththil than perum pasikku thanjam enRu aratRi thunba nenjinil ) : "On this earth you are my only protection against hunger" so I used to babble and my heart would feel distressed by such lies;
நாளும் புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம் புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும் ( nALum pudhu chol sangam ondRu isaiththu sangadam pugatti kondu udambu azhi mAyum ) : Everyday, I coin new words to compose poems on them! (Due to these activities) I feel miserable and my body degenerates. நாள்தோறும் புதிய சொற்களின் கூட்டத்தால் கவி ஒன்றைப் பாடி சங்கடத்தில் மாட்டிக்கொண்டு,
புலத்தில் சஞ்சலம் குலைத்திட்டு உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே (pulaththil sanchalam kulaiththittu un padham puNarkkaikku anbu thandhu aruLvAyE ) : Kindly bless me with the love to attain your feet so that I can put an end to the misery arising from my sensory organs. ஐம்புலன்களால் வரும் துன்பங்களைத் தொலைத்து உந்தன் திருவடியைச் சேர்வதற்கு உரிய அன்பு தருவாயே.புலத்தில் சஞ்சலம் (pulaththil sanchalam ) : ஐம்புலன்களால் வரும் துன்பம் ;
மதித்து திண் புரம் சிரித்து கொன்றிடும் மறத்தில் தந்தை மன்றினில் ஆடி (madhiththu thiN puram siriththu kondRidum maRaththil thandhai mandRinil Adi ) : Your father Lord Shiva, the valiant Dancer who dances on the cosmic stage, meditated and then burnt down the strong fortresses of Thiripuram by merely smiling at them! மதித்து (madhiththu) : meditating; மனதில் எண்ணி; மறம் (maRam) : valour;
மழு கை கொண்ட சங்கரர்க்கு சென்று வண் தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே (mazhu kai koNda sangararkku chendRu vaN thamizh chol sandham onRu aruLvOnE) : You went to Sankara (Shiva) who holds a pickaxe in His hand and preached the essence of VEdAs (scriptures) in chaste Tamil words! மழுவைத் தமது திருக்கரத்தில் கொண்டவரும் ஆகிய சிவபெருமானுக்குக் குருவாகச் சென்று, வளமையான செந்தமிழ்ச் சொற்களால் வேதப் பொருளை உபதேசித்தவரே! வண் = வளம், வள்ளல்தன்மை;
குதித்து குன்று இடம் தலைத்து செம் பொ(ன்)னும் கொழித்து கொண்ட செந்திலின் வாழ்வே (kudhiththu kundru idam thalaiththu chemponum kozhiththu koNda sendhilin vAzhvE ) : You are the sustaining chief at the seashore at ThiruchendhUr, where the waves jump about and smash mountains and shower solid red gold;
குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே. (kuRa pon kombai mun punaththiR chem karam kuviththuk kumbidum perumALE.) : Oh Great One, who worshipped with folded hands VaLLi, the damsel of the hunter tribe. குற பொன் கொம்பை = குறவர் குடியில் வளர்ந்த பொன் கொம்பு போன்ற அழகிய வள்ளி பிராட்டி;
Comments
Post a Comment