Posts

Showing posts from January, 2013

How Vishnu Obtained the Sudarshana Chakra

Story of Jalandhara Jalandhara was a demon king, who procured many boons after doing harsh austerities. Becoming arrogant of his immense power, he captured and ruled all the three worlds. Having subdued Satyaloka and Vaikuntha, the demon went to KailAsa to fight Lord Shiva. Lord Shiva took the form of an old man and stood on his way. He asked Jalandhara where he was going. jalandhara replied that he was going to fight against Lord Shiva. Smiling the Old Man marked a disc (chakra) on the ground.

40. படர்புவியின் மீது

ராகம் : பந்துவராளி தாளம் : 2½ + 1½ + 1½ + 2 படர்புவியின் மீது மீறி வஞ்சகர்கள் வியனினுரை பானு வாய்வி யந்துரை பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி சங்கபாடல் பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை திருவளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் சந்தமாலை மடல்பரணி கோவை யார்க லம்பக முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும் வகைவகையி லாசு சேர்பெ ருங்கவி சண்டவாயு மதுரகவி ராஜ னானென் வெண்குடை விருதுகொடி தாள மேள தண்டிகை வரிசையொ டுலாவு மால் அகந்தைத விர்ந்திடாதோ

39. பஞ்ச பாதக

ராகம் : ஸிம்மேந்திர மத்யமம் அங்க தாளம் (7½) 1½ +2 +2 +2 பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி குஞ்சி கூர்விட மதர் விழி பிலவக பங்க வாண்முக முடுகிய நெடுகிய திரிசூலம் பந்த பாசமு மருவிய கரதல மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு பண்பி லாதொறு பகடது முதுகினில் யமராஜன் அஞ்ச வேவரு மவதர மதிலொரு தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும் அன்பி னாலுன தடிபுக ழடிமை யெ னெதிரேநீ அண்ட கோளகை வெடிபட இடிபட எண்டி சாமுக மடமட நடமிடும் அந்த மோகர மயிலினி லியலுடன் வரவேணும்

38. நிலையாப் பொருளை

ராகம் : பாகேஶ்ரீ தாளம் : மிஸ்ர சாபு (2 + 1½) நிலையாப் பொருளை யுடலாக் கருதி நெடுநாட் பொழுது மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி மலம்நீர்ச் சயன மிசையாப் பெருகி மடிவேற் குரிய நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு மலர்தாட் கமல மருள்வாயே

37. நிதிக்குப் பிங்கலன்

ராகம்: தன்யாசி சங்கீரண சாபு (2 +1½ +1) நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன் நிறத்திற் கந்தனென் றினைவோரை நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென் றரற்றித் துன்பநெஞ் சினில்நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம் புகட்டிக் கொண்டுடம் பழிமாயும் புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம் புணர்க்கைக் கன்புதந் தருள்வாயே

36. நாலு மைந்து

ராகம் : கேதார கெளளை தாளம் : திச்ர நடை (15) நாலு மைந்து வாசல்கீறு தூறு டம்பு கால்கையாகி நாரி யென்பி லாகுமாக மதனூடே நாத மொன்ற ஆதிவாயில் நாட கங்க ளானஆடி நாட றிந்தி டாமலேக வளராமுன் நூல நந்த கோடிதேடி மால்மி குந்து பாருளோரை நூறு செஞ்சொல் கூறிமாறி விளைதீமை நோய்க லந்த வாழ்வுறாமல் நீக லந்து ளாகுஞான நூல டங்க வோதவாழ்வு தருவாயே

35. தோலொடு மூடிய

ராகம் : ஜோன்புரி தாளம் : ஆதி தோலொடு மூடிய கூரையை நம்பிப் பாவையர் தோதக லீலைநி ரம்பிச் சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக் கோவையு லாமடல் கூறிய ழுந்திக் தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் கலமாருங் காலனை வீணனை நீதிகெ டும்பொய்க் கோளனை மானமி லாவழி நெஞ்சக் காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் புலையேனைக் காரண காரிய லோகப்ர பஞ்சச் சோகமெ லாமற வாழ்வுற நம்பிற் காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் றருளாதோ

34. தொந்தி சரிய

ராகம்: தோடி/அடாணா அங்க தாளம் (7½) 1½ + 1½ + 2 + 2½ தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முகுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடமை கடனே தெனமுடுகு துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுக வுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்

33. துன்பம் கொண்டு

ராகம் : பைரவி தாளம் : திச்ர த்ரிபுடை (7) துன்பங்கொண் டங்க மெலிந்தற நொந்தன்பும் பண்பு மறந்தொளி துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி லணுகாதே இன்பந்தந் தும்பர் தொழும்பத கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி யென்றென்றுந் தொண்டு செயும்படி யருள்வாயே

32. தரிக் குங்கலை

ராகம் : ஆபோகி சதுஸ்ர ஏகம் மிஸ்ர நடை (14) தரிக் குங்கலை நெகிழ்க் கும்பர தவிக் குங்கொடி மதனேவிற் றகைக் குந்தனி திகைக் குஞ்சிறு தமிழ்த் தென்றலி னுடனேநின் றெரிக் கும்பிறை யெனப் புண்படு மெனப் புன்கவி சிலபாடி இருக் குஞ்சிலர் திருச் செந்திலை யுரைத் துய்ந்திட அறியாரே

31. தந்த பசி

ராகம் : ஆரபி தாளம் : ஆதி தந்த பசிதனைய றிந்து முலையமுது தந்து முதுகுதட வியதாயார் தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள தங்கை மருகருயி ரெனவேசார் மைந்தர் மனைவியர் கடும்பு கடனுதவு மந்த வரிசைமொழி பகர்கேடா வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம யங்க வொருமகிட மிசையேறி

30. தண்டையணி

ராகம் : ஸிம்மேந்திர மத்யமம்/தன்யாசி தாளம் : கண்ட சாபு (2½) தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் சந்தியாவோ

29. தண்டே னுண்டே

ராகம் : பீம்பளாஸ் ஆதி திச்ர நடை தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர் தண்டார் மஞ்சுக் குழல்மானார் தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே சம்பா வஞ்சொற் றடிநாயேன் மண்டோ யந்தீ மென்கால் விண்டோய் வண்கா யம்பொய்க் குடில்வேறாய் வன்கா னம்போ யண்டா முன்பே வந்தே நின்பொற் கழல்தாராய்

28. சேமக் கோமள

ராகம் : சுருட்டி தாளம் : 1½ + 2 சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற் கோதும நந்தவேதா தீதத் தேயவி ரோதத் தேகுண சீலத் தேமிக அன்புறாதே காமக் ரோதவு லோபப் பூதவி காரத் தேயழி கின்றமாயா காயத் தேபசு பாசத் தேசிலர் காமுற் றேயும தென்கொலோதான்

27. கொம்பனை யார்

ராகம் : கரஹரப்ரியா தாளம் : சதுஸ்ர ரூபகம் (6) கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள குங்கும பாடீரபூ ஷண நகமேவு கொங்கையி னீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையி லாதார சோபையில் மருளாதே உம்பர்கள் ஸ்வாமீந மோநம எம்பெரு மானேந மோநம ஒண்டொடி மோகாந மோநம எனநாளும் உன்புக ழேபாடி நானினி அன்புட னாசார பூசைசெய் துய்ந்திட வீணாள்ப டாதருள் புரிவாயே

26. குடர்நிண

ராகம் : குந்தலவராளி அங்க தாளம் 2 + 1½ + 2 + 1½ + 2 + 1½ + 2 + 2 (14½) குடர்நிண மென்பு சலமல மண்டு குருதிந ரம்பு சீயூன்பொதிதோல் குலவுகு ரம்பை முருடுசு மந்து குனகிம கிழ்ந்து நாயேன்தளரா அடர்மத னம்பை யனையக ருங்க ணரிவையர் தங்கள் தோடோய்ந்தயரா அறிவழி கின்ற குணமற வுன்றன் அடியிணை தந்து நீயாண்டருள்வாய்

25. காலனார்

ராகம் : சஹானா/திலங் தாளம் : சதுஸ்ர ஏகம் (10) (கண்ட நடை) காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென் காலினார் தந்துடன் கொடுபோகக் காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங் கானமே பின்தொடர்ந் தலறாமுன் சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ் சூடுதோ ளுந்தடந் திருமார்பும் தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந் தோகைமேல் கொண்டுமுன் வரவேணும்

24. கமல மாதுடன்

ராகம் : ஆனந்த பைரவி அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2 கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி சொலவொ ணாதம டந்தையர் சந்தன களப சீதள கொங்கையில் அங்கையில் இருபோதேய் களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்தசு கந்தரு கரிய ஓதியில் இந்துமு கந்தனில் மருளாதே அமல மாகிய சிந்தைய டைந்தகல் தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும் அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் அருள்தானே அறியு மாறுபெ ரும்படி அன்பினின் இனிய நாதசி லம்புபு லம்பிடும் அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்

23. கண்டுமொழி

ராகம் : காவடி ஸிந்து அங்க தாளம் (5½) 2½ + 1½ + 1½ கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு கண்கள்குழல் கொண்டல் என்று பலகாலும் கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து கங்குல்பகல் என்று நின்று விதியாலே பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு பங்கயப தங்கள் தந்து புகழோதும் பண்புடைய சிந்தை யன்பர் தங்களிலு டன்க லந்து பண்புபெற அஞ்ச லஞ்ச லெனவாராய்

22. கட்டழகு விட்டு

ராகம் : மனோலயம் சதுஸ்ர த்ருவம் கண்ட நடை (35) கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம் இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் முறையோடே வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற வுணர்வேனோ

21. ஓராதொன்றை

ராகம் : பிலஹரி தாளம்: ஆதி (2 களை) ஓரா தொன்றைப் பாரா தந்தத் தோடே வந்திட் டுயிர்சோர ஊடா நன்றற் றார்போல் நின்றெட் டாமால் தந்திட் டுழல்மாதர் கூரா வன்பிற் சோரா நின்றக் கோயா நின்றுட் குலையாதே கோடார் செம்பொற் றோளா நின்சொற் கோடா தென்கைக் கருள்தாராய்

20. ஏவினை நேர்விழி

ராகம் : வலசி/பந்துவராளி தாளம் : ஆதி ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறிபேணா ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை அகலாநீள் மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை யிகழாதே மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது மொருநாளே

19. உததியறல் மொண்டு

ராகம் : கீரவாணி அங்க தாளம் (6½ 2½ + 1½ + 1½ + 1) உததியறல் மொண்டு சூல்கொள்கரு முகிலெனஇ ருண்ட நீலமிக வொளிதிகழு மன்றல் ஓதிநரை பஞ்சுபோலாய் உதிரமெழு துங்க வேலவிழி மிடைகடையொ துங்கு பீளைகளு முடைதயிர்பி திர்ந்த தோஇதென வெம்புலாலாய் மதகரட தந்தி வாயினிடை சொருகுபிறை தந்த சூதுகளின் வடிவுதரு கும்ப மோதிவளர் கொங்கைதோலாய் வனமழியு மங்கை மாதர்களின் நிலைதனையு ணர்ந்து தாளிலுறு வழியடிமை யன்பு கூருமது சிந்தியேனோ

18. இருக்கும் காரண (உருக்கம் பேசிய )

Image
ராகம் : சுத்த தன்யாசி அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2 உருக்கம் பேசிய நீலியர்...... மீதினில் ஆசைகள் புரிவேனோ Lines rearranged. இருக்குங் காரண மீறிய வேதமும் இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள் இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ முடன்மேவி இலக்கந் தானென வேதொழ வேமகிழ் விருப்பங் கூர்தரு மாதியு மாயுல கிறுக்குந் தாதகி சூடிய வேணிய னருள்பாலா திருக்குந் தாபதர் வேதிய ராதியர் துதிக்குந் தாளுடை நாயக னாகிய செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் மருகோனே செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ் திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே.

17. இயல் இசையில்

ராகம் :ஹுஸேநி தாளம் : அங்க தாளம் (9) 2½ +1½ + 2 + 3 இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் துழலாதே உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத் தருவாயே

16. அனைவரும் மருண்டு

ராகம் : மோஹனம் அங்க தாளம் 2½ + 1½ + 1½ அனைவரும ருண்ட ருண்டு கடிதெனவெ குண்டி யம்ப அமரஅடி பின்தொ டர்ந்து பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழவுடனெ லும்ப லம்பு மவலவுட லஞ்சு மந்து தடுமாறி மனைதொறுமி தம்ப கர்ந்து வரவரவி ருந்த ருந்தி மனவழிதி ரிந்து மங்கு வசைதீர மறைசதுர்வி தந்தெ ரிந்து வகைசிறுச தங்கை கொஞ்சு மலரடிவ ணங்க என்று பெறுவேனோ

15. அறிவழிய மயல்

ராகம்: காம்போதி கண்ட சாபு 1 + 1½ (3½) அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல அனலவிய மலமொழுக அகலாதே அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ அழலினிகர் மறலியெனை யழையாதே செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர் திருவடியி லணுகவர மருள்வாயே சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே

14. அவனி பெறும் தோடு

ராகம் : கமாஸ் தாளம் : சதுஸ்ர ரூபகம் (6) அவனிபெ றுந்தோட் டம்பொற் குழையட ரம்பாற் புண்பட் டரிவையர் தம்பாற் கொங்கைக் கிடையேசென் றணைதரு பண்டாட் டங்கற் றுருகிய கொண்டாட் டம்பொற் றழிதரு திண்டாட் டஞ்சற் றொழியாதே பவமற நெஞ்சாற் சிந்தித் திலகுக டம்பார்த் தண்டைப் பதயுக ளம்போற் றுங்கொற் றமுநாளும் பதறிய அங்காப் பும்பத் தியுமறி வும்போய்ச் சங்கைப் படுதுயர் கண்பார்த் தன்புற் றருளாயோ