விநாயகர் துதி வாரணத்தானை அயனை விண்ணோரை மலர்க்கரத்து வாரணத்தானை மகத்து வென்றோன் மைந்தனை துவச வாரணத்தானை துணைநயந்தானை வயலருணை வாரணத்தானை திறை கொண்ட யானையை வாழ்த்துவனே வாரணத்தானை ... ஐராவதம் என்ற யானைக்கு தலைவனாகிய இந்திரனையும், அயனை ... பிரம்மனையும், விண்ணோரை ... ஏனைய தேவர்களையும், மலர்க் கரத்து வாரணத்தானை ... தாமரை போன்ற கையில் பாஞ்ச சன்யம் (வாரணம் = சங்கு) என்கிற சங்கை ஏந்தி இருக்கும் திருமாலையும், மகத்து ... தட்ச யாகத்தில், வென்றோன் ... வீரபத்திரன் சொருபத்தில் வந்து ஜெயித்த சிவபெருமானின், மைந்தனை ... குமாரனும், துவச வாரணத்தானை ... கோழிக்கொடியை உடைய குமாரக் கடவுளை, துணை நயந்தானை ... சகோதரனாக பெற்றிருப்பவனும், வயல் அருணை ... வயல்கள் சூழ்ந்த அருணாசலத்தில், வாரணத்தானை ... யானைமுகத்தை உடைய கஜமுகாசுரனை, திறை கொண்ட யானையை ... (யானைகளை) கப்பம் பெற்ற, யானை முகம் கொண்டவனும் ஆகிய கணபதியை, வாழ்த்துவனே. ... வணங்குகிறேன். ஒரு காலத்தில் முகிலன் எனும் அரசனது கொடுமைகளால் துன்பப்பட்ட மக்கள், திருவண்ணாமலையில் வாழ்ந்த குகை நமசிவாயர் எனும் அருளாளரிடம் முறையிட, அவர் அருணாசலேஸ்வரர...