9. சந்ததம் பந்த


ராகம்: ஹிந்தோளம்தாளம்: 1 + 1½ + 2 + 3
சந்ததம் பந்தத்தொடராலே
சஞ்சலந் துஞ்சித்திரியாதே
கந்தனென் றென்றுற்றுனைநாளும்
கண்டுகொண் டன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற்சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற்பெருமாளே.

Learn the Song



Raga Hindolam (Janyam of 20th mela Natabhairavi) By Ragasurabhi

Arohanam: S G2 M1 D1 N2 S    Avarohanam: S N2 D1 M1 G2 S

Alapana By Sithara krishnamoorthy

Paraphrase

Our minds are constantly assailed by endless thoughts. These thoughts spring from attachment to transient material things. To overcome this, we must develop love for the Supreme and Eternal Entity called God. பசு எனப்படும் உயிர்களாகிய நாம் பந்த பாசம் என்னும் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறோம். இந்த சங்கிலி அறுபட்டால் தான் நாம் இறைவன் திருவடியில் வீழ்ந்து ஓய்வு பெற முடியும். இறைவன் திருவடியைப் பற்றிக்கொண்ட ஆன்மாக்களுக்கு உலக வாழ்வில் மாயையால் மயக்கம் ஏற்படினும் உய்வு கிடைக்கும்.

கந்து−கயிறு, விலங்குகளைக் கட்டிவைக்கும் தறி அல்லது கோல், தூண், ஆகியவற்றைக் குறிக்கும். கயிறு, கோல், தூண், இவற்றை போல் தன்னை வணங்குபவர்களைக் கட்டமைத்துக் காப்பவனாதலால், "கந்து" போன்ற தன்மைகளை உடைய முருகன், "கந்தன்" எனப்பட்டான். 'கந்து' என்ற சொல்லுக்கு பற்றுக்கோடு என்ற பொருளும் உண்டு. உயிர்கள் கந்தப்பெருமானை பற்றிக்கொண்டால் அவர்கள் பிறவிச்சுழலில் இருந்து மீள்வார்கள். சிவலிங்கமும் சிறிய கல்தூண் அல்லது கல்முழையாக இருப்பதனால் கந்து என சொல்லப்படுவதுண்டு.

கந்தன் என்ற சொல்லுக்கு பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்பவர் என்றும் பொருள் கொள்வதுண்டு. நம்முடைய உள்பகைகளான மனதில் எழும் ஓயாத எதிர்மறை சிந்தைகளிடமிருந்து நம்மை காப்பவன் கந்தன்.

சந்ததம் பந்த தொடராலே (sandhadham bandha thodarAlE) : Because of the endless chain of attachment,

சஞ்சலம் துஞ்சி திரியாதே (sanchalam thunji thiriyAdhE) : I am fickle minded. Instead of leading life thus,

கந்தன் என்று என்று உற்று உனை நாளும் கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ (kandhan endRu endRu utRu unai nALum kaNdukoNdu anbu utRiduvEnO) : will I ever perceive you as the eternal 'Kandan' and be immersed in your love all through the day? 'Kandan or 'Skandan' means one who will shrivel up the strength of the enemies. The enemies we face in life are internal; our minds are assailed constantly by various negative thoughts that prevent us realizing our own true nature. If our minds take refuge in Kanthan, He will grant us liberation from the cycle of birth. கந்தக் கடவுளே பரம்பொருள் என்று உணர்ந்து உமது திருவடியடைந்து தங்களையே சதாகாலமும் அறிவுக் கண்ணால் தெரிசித்து அன்பு செய்வேனோ!

தந்தியின் கொம்பை புணர்வோனே (thandhiyin kombai puNarvOnE) : You united (married) with the Airavata Elephant's daughter, who is like a bunch of flowers. Deyvayanai was brought up by Indra's white elephant Airavata. ஐராவதம் என்ற யானையினால் வளர்க்கப்பெற்ற பூங்கொம்பு போன்ற தேவயானை அம்மையை தழுவுகின்றவரே!

சங்கரன் பங்கில் சிவை பாலா (sankaran pangil sivaibAlA) : You are the son of Parvati, standing by the side of Shiva.

செந்தில் அம் கண்டி கதிர் வேலா தென்பரம் குன்றில் பெருமாளே. (sendhil am kaNdi kadhirvElA thenparam kundril perumALE.) : You hold the bright spear ('vel') and reside at ThiruchchendhUr, the beautiful Kandi and at Thirupparangiri.
கதிர்காமம் சூட்சும ஒளிக் கற்ரைகள் நிறைந்த ஊர் என்பது அதன் காரணப் பெயராயிற்று. இந்த ஒளிக் கதிர்களுக்கு காரணம் முருகனின் ஆலய கருவறையில் இருக்கும் ஓம் என பொறிக்கப்பெற்ற சற்கோண யந்த்திரம். கருவறை அலங்கரிக்கப்பட்ட பெரிய திரைச் சீலையினால் மூடப்பட்டுள்ளது. சூரபத்மனை வதஞ்செய்ய புறப்பட்ட முருகப் பெருமானும் அவரின் சேனைகளும் கதிர்காமத்தில் பாசறை அமைத்து வீர மகேந்திரபுரி என்னும் இராசதானியை அரசாண்ட சூர பத்மனை வதஞ் செய்தார் என கந்தபுராணம் கூறுகின்றது.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே