Search with Song Number

5. முத்தைத் தரு


ராகம்: கௌளைதாளம்: திஶ்ர த்ரிபுடை (7)
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபரஎனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும்அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில்இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதுமொருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடுகழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடகஎனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியெனமுதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவலபெருமாளே.

Learn the Song


Paraphrase

முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது. தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க அவளைக் குறிப்பிட்டார். இதே போல் முன்னொரு முறை முருகப்பெருமான் கச்சியப்பர் சிவாச்சாரியருக்கு அசரீரியாக திகட சக்கரம் என்று அடி எடுத்துக் கொடுக்க, அவரும் அதனை வைத்தே விநாயகர் காப்பு எழுதி கந்த புராணம் என்ற நூலைத் தொடங்கினார்.

முத்தைத்தரு பத்தித் திருநகை (mutthai tharu patthi thirunagai): "With a smile that shows pearl-like, well aligned rows of teeth, வெண்முத்தை போன்ற, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கிறை சத்திச் சரவண (atthukkiRai satthi saravaNa): is DEvayAnai and You are her Consort! You are SaravaNabhava, holding the powerful spear called SakthivEl! தேவயானை தேவியின் தலைவனே, சக்தி வேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே! அத்தி: elephant, metaphorically refers to Deivayanai , அத்திக்கு இறை : Lord to Deivayanai, ie, Muruga.

முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கண் பரமற்கு (mutthikkoru vitthu guru para ena Othum) : You are the seed for moksha or salvation! The Supreme Guru!" — so praises Lord SivA, who has three eyes (the Sun, the Moon and the Fire-Agni); முக்தியெனும் வீடுநிலை பெற வித்தாக இருப்பவரே! தந்தைக்கு பிரணவத்தின் பொருள் சொல்லி குருவான சிவனுக்கும் குருவான பெருங்கடவுளே! என்றெல்லாம் உனை துதிக்கும் முக்கண்ணன் பரமசிவனுக்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து (mukkat mukkat paramaRku suruthiyin muRpattathu kaRpithu): to that SivA, You preached the fundamental ManthrA OM, which dates earlier than the VEdAs ; வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் தனிமந்திரத்தை மடி மீதமர்ந்து உபதேசித்து,

இருவரும் முப்பத்து மூவர்க்கத்து அமரரும் அடி பேண (iruvarum muppatthu muvarkkaththu amararum adi pENa ) : while Lord Brahma and Vishnu and 33 kinds of Devas – all watched (Your preaching) and worship Thy feet; (அடிமுடி அறியவெண்ணி அங்குமிங்கும் அலைந்த) பிரமன் திருமால் இருவரும் கூட முப்பத்து முக்கோடி தேவரும் சேர்ந்து நின்னடி பணிந்து வாழ்த்தி நின்றிடவும்,

The next lines describe Vishnu, the uncle of Muruga.

பத்து தலை தத்த கணை தொடு (patthuth- thalai thatthak kaNai thodu): He (Vishnu) shot a single arrow that blew the ten heads of Ravana (கணை( kaNai): arrow;

ஒற்றை கிரி மத்தை பொருது (otRaig- giri matthaip poruthoru) : and churned the ocean using Mandara mountain as the churning stick (maththu). Lord Vishnu assumed the Koorma (turtle) avatara to lie at the base of the Mandara mountain to support and give it stability.

ஒரு பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக (pattap- pagal vattath- thigiriyil iravaaga): and as Krishna, hid the Sun with His ChakrA (disc) for a very short time on the thirteenth day of the Mahabharata war, facilitating the slaying of Jayadratha by Arjuna in retaliation to his unfairly killing Abhimanyu, Arjuna's son.
This incident is also mentioned in seerana kola kala

பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் (patthaRkira thatthaik kadaviya pacchaippuyal) : He is the god with a green cloud-like complexion, who drove his bhakta's chariot.

(பச்சை புயல்) மெச்ச தகு பொருள் (mecchath thagu poruL): and You are worthy of being praised by Vishnu (as described above)

பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே? (patshatthodu rakshith tharuLvathum oru naaLE) : Will You ever protect me in a preferential manner? (will You ever offer me Your special protection?)

தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க (thitthitheya otthap paripura nirttha paDam vaitthu bayiravi Dikkotka nadikka): The following lines describe the battle scene where Lord Muruga slays the demons. The fierce warrior goddess Bhairavi or Kali dances moving in all the eight directions, with her anklets making the 'thitthitheya' sound.

கழுகொடு கழுது ஆட (kazhugodu kazhuthaada) : with the devils dancing with the eagles; கழுது = பேய்கள்

திக்கு பரி அட்ட பயிரவர் தொக்கு தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத (Dikku pari atta bayiravar thokkutthoku thokkuth thokuthoku chithra bavurikku thrikadaka ena Otha) : the eight bhairavAs protecting all directions dance choreographed to the meter of 'thokkuththoku thokkuth thokuthoku thrikadaka' in rhythm with this beautiful dance (சித்ர பவுரி (chithra bavuri): அழகிய மண்டலக் கூத்துக்கு ஏற்றவாறு கூத்தாட

கொத்து பறை கொட்ட (kotthu paRai kotta) : a number of other percussion instruments reverberate the same sound; கொத்துப் பறை = கூட்டமான பறைகள்

களம் மிசை குக்கு குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை கொட்புற்று எழ (kaLamisai kukku kukuk kukukuku kutthip puthai pukkup pidiyena muthukookai kotputRezha) : and in the battle field old vultures (முது கூகை) circle above amidst cries of 'catch him, kill him'

நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு (natpu atRa avuNarai vetti baliyittu) :(Amidst all this, the Lord) fights and slays the unfriendly asuras

குலகிரி குத்துப்பட ஒத்து பொர வ(ல்)ல பெருமாளே. (kulagiri kutthu pada otthu poravala perumaaLE) : and pulverizes the Krauncha hill. குலகிரி = குலகிரியாகிய கிரௌஞ்ச மலை
குலகிரியான பொன்னிறமான கிரவுஞ்சமலை மாயைக்கு எடுத்துக்காட்டு. தாரகாசுரன் அரசு புரிந்த மாயமாபுரியில் கிரவுஞ்சன் என்ற ஓர் அரக்கன் இருந்தான். இவன் முனிவர்கள் செல்லும் வழியில் மாயையின் ஆற்றலினால் மலைவடிவாக நின்று, மலைக்குள் வழியிருப்பது போலக் காட்டி, உள்ளே நுழையும் முனிவர்களை மயக்கிக் கொன்று தின்பான். அகத்திய முனிவர் மேருமலையிலிருந்து தென்திசையில் உள்ள பொதியமலைக்கு வந்தார். அவர் வரும் வழியில் பெருமலை உருவாக நின்று அதற்குள் வழியிருப்பது போல் காட்ட, அவரும் உள் நுழைந்து வெகு தூரம் போய் வழிகாணாமல், அறிவுக் கண்ணால் அசுர மாயையை அறிந்து, வெளி வந்து "அறுமுகப் பெருமான் அயில் வேலால் அழியக் கடவாய்" எனச் சபித்தார். சூரனுடன் போர் புரிந்த போது கிரவுஞ்சன் மலைவடிவாய் நின்று வீரவாகுத் தேவர் முதலியோரை மலைக்குள் புகுமாறு செய்து மயக்கினான். கந்தவேள் கிரவுஞ்சத்தைப் அழித்தார்.

No comments:

Post a comment

Popular Posts