117. இருமலு ரோக


ராகம்: அசாவேரிமிஸ்ர சாபு (3½)
2 + 1½
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசிவிடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலையிவையோடே
பெருவயி றீளை எரிகுலை சூலை
பெருவலி வேறுமுளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள்அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலைவிடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லுர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவுபெருமாளே

irumalu rOga muyalagan vaadham
eriguNa naasi vidamE nee
rizhivu vidaadha thalaivali sOgai
ezhukaLa maalai ivaiyOdE
peruvayir eeLai erikulai soolai
peruvali vERum uLa nOygaL
piRavigaL thORum enai nali yaadha
padi unathaaLgaL aruLvaayE
varumoru kOti asurarpa dhaadhi
madiya anEga isaipaadi
varum oru kaala vayiravar aada
vadisudar vElai viduvOnE
tharunizhal meedhil uRaimugil oordhi
tharuthiru maadhin maNavaaLa
chalamidai boovi naduvinil veeRu
thaNimalai mEvu perumaaLE.

Learn The Song




Raga Asaveri (Janyam of 8th mela Hanumatodi)

Arohanam: S R1 M1 P D1 S    Avarohanam: S N2 S P D1 P M1 G2 R1 S

Paraphrase

இருமலு ரோக முயலகன் வாதம் எரிகுண நாசி விடமே நீரிழிவு (irumalu rOga muyalagan vAtham eriguNa nAsi vidamE neerizhivu) : Acute cough, epilepsy, rheumatic pain, burning nose, poisonous and toxic diseases, diabetes,

விடாத தலைவலி சோகை எழுகள மாலை இவையோடே (vidAtha thalaivali sOgai ezhukaLa mAlai ivaiyOdE) : nagging head-ache, anaemia, blisters around the neck, and along with these, களம் மாலை = கழுத்தைச் சுற்றி உண்டாகும் கட்டி

பெருவயிறு ஈளை எரிகுலை சூலை பெருவலி வேறும் உளநோய்கள் (peruvayiRu eeLai erikulai chUlai peruvali vERum uLanOykaL) : edema in the stomach, congestion in the lungs, heartburn, acute stomach ache, and similar extremely painful diseases

பிறவிகள் தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே (piRavikaL thORum enai naliyAtha padi) : In order that these diseases do not afflict and debilitate me in every birth, You must kindly grant me Your hallowed feet!

வருமொரு கோடி அசுரர் பதாதி மடிய (varumoru kOdi asurar pathAthi madiya ) : such that the millions of soldiers in the demons' armies advancing against You die,

அநேக இசைபாடி வருமொரு கால வயிரவர் ஆட (anEga isai pAdi varumoru kAla vayiravar Ada) : and KAla Bhairavar (Lord SivA), who comes to the battlefield singing many songs praising the glory of the war, dances in ecstasy,

வடிசுடர் வேலை விடுவோனே (vadisudar vElai viduvOnE) : You hurl the sharp and shining Spear!

தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி தருதிரு மாதின் மணவாளா (tharunizhal meethil uRai mugil Urthi tharu thiru mAthin maNavALA) : You are the spouse of Deivayanai, who was brought up by IndrA, the king of celestials who rides the clouds and resides in the shade of wish-yielding KaRpaga tree in the Indraloka. முகில் ஊர்தி ( mugil oorthi ) : cloud as vehicle, Indra; தரு (tharu ) : tree; here, wish-fulfilling Karpaga tree;

சலமிடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே.(salamidai pUvin naduvinil veeRu thaNimalai mEvu perumALE.) : Covered by water, and situated in the middle of the earth, this renowned place is ThiruththaNigai where you reside ;பூ (boo ) : bhoomi or earth;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே