109. நாவேறு பாம ணத்த


ராகம்: யதுகுல காம்போதிஅங்க தாளம் 2½ + 1½ + 1½
நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்றுவகையான
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்தநெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு னருள்கூர
நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொலருள்வாயே
சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்தகுருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்திமணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின்முருகோனே
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்றபெருமாளே.

nAvERu pAmaNaththa pAdhAra mEninaindhu
nAl ARu nAlu patru vagaiyAna
nAlArum Agamaththin nUlAya nyAna muththi
nALdhOru nAn uraiththa neRiyAga

nee vERenAdhirukka nAn vER enAdhirukka
nErAga vazhvadhaRkun aruLkUra
needAr shadAdharaththin meedhE parAparaththai
nee kAN enA anaichchol aruLvAyE

sEvERum eesar sutra mA nyAna bOdha budhdhi
seerAgavE uraiththa gurunathA
thErArgaL nAdu sutta sUrArgaL mALa vettu
dheerA guhA kuRaththi maNavALA

kAvEri nEr vadakkilE vAvi pU maNaththa
kavAr suvAmi veRpin murugOnE
kAr pOlu mEni petra mAkALi vAlai saththi
kAmAri vAmi petra perumALE.

Learn The Song



Raga Yadukula Kambhoji (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 R2 S


Paraphrase

நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து (nAvERu pAmaNaththa pAdhAra mEninaindhu) : I am thinking only about Your lotus feet which are fragrant from the flowery poems that my tongue puts forth; (நல்ல பக்தர்களின்) நாவிலே ஊறியதாகிய பாடல்களுடைய நறுமணம் கமழ்கின்றதான திருவடித் தாமரைகளையே நினைத்து,

நால் ஆறு நாலு பற்று(ம்) வகையான நாலு ஆரும் ஆகமத்தின் ( nAl ARu nAlu patru vagaiyAna nAlArum Agamaththin ) : The twenty-eight Siva AgamAs with their four divisions, which; இருபத்து நான்கும் ஒரு நாலும் கூடிய இருபத்தெட்டு என்ற எண்ணிக்கையுடன் சிவசம்பந்தத்தை உடையதாகி, சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு பாதங்களை விரித்துரைப்பதாகிய ஆகம நூல்களில் கூறப்பட்ட ; நாலாறு (naalaaRu ) : four times six, i.e., twenty four; நாலாறு நாலு ( naalaaru naalu ) : twenty eight; நாலு ஆரும் (naalu aarum) : having four legs; சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாலு பாதங்கள் பொருந்திய, . Each Tantra of Saiva Siddhanta rests on four feet (pada) — sarya pada or behavior), kriya pada or ritual, yoga and jnana pada.
சிவாகமங்கள் இருபத்தெட்டு. ஆகமம் என்ற சொல்லுக்கு ‘வந்தது‘ என்று பொருள். இறைவனுடைய நாவிலிருந்து வந்தது எனப்படும். இந்த ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களுடன் கூடியன.

நூல் ஆய ஞான முத்தி நாள் தோறும் நான் உரைத்த நெறியாக (nUlAya nyAna muththi nALdhOru nAn uraiththa neRiyAga ) : explain the methods to attain Liberation and Eternal Bliss and that is the method I would like to practise everyday; ஞான முத்தி நெறியே தினமும் நான் அனுட்டிக்கும் நெறியாகவும்,

நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள் கூர (neevER enAdh irukka nAn vER enAdhirukka nErAga vazhvadhaRkun aruLkUra) : so that there is no difference between You and me, a state in which the JeevAthma and ParamAthma have merged and to lead a straightforward life by Your grace,

நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே (needAr shadAdharaththin meedhE parAparaththai nee kAN enA anaichchol aruLvAyE) : I want to transcend the great Kundalini ChakrAs and ascend to SahasrAram and see SivA who is superior to all things supreme. I want to hear from You that great expression denoting Unity between SivA and Sakthi.
paraaparam: Deity as composed of male and female principles, paraa: sakti, param: Siva; param: first and aparam: last, i. e. the beginning and end.
மேன்மை பொருந்திய ஆறு ஆதாரங்களுங் கடந்து அப்பால் விளங்கும் சகஸ்ராரப் பெருவெளியில் திகழும் பரம்பொருளை நீ காண்பாயாக என்று ஐக்கிய பதத்தை உபதேசித்து அருள்புரிவீர். நீடு ஆர் –பரந்துள்ள; நீ காண் எனா அனை சொல் அருள்வாயே – நீ காண்பாயாக என்ற (ஐக்கிய) வசனத்தை (உபதேசித்து) அருள்வாயாக. அனைசொல் = அனைய சொல் (ஐக்கியத்தைத் தரும் சொல்);
மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்கட்கும் அப்பாற்பட்ட ஆனந்த மேலை வெளியில் விளங்கும் பரவெளியில் விளங்குவது பரம்பொருளான பராபரம். பராபரம் என்று இறைவனை அழைப்பது, பரம், அபரம் அல்லது உருவம் அருவம் என்ற இரண்டையும் கொண்ட உருவ அருவ நிலையைக் குறிக்கிறது.

சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி சீராகவே உரைத்த குரு நாதா (sEvERum eesar sutra mA nyAna bOdha budhdhi seerAgavE uraiththa gurunathA ) : When SivA, who mounts on the Bull, Nandi, went around You, You taught the greatest Knowledge contained in the Vedas expertly, Oh Great Master! இடபத்தின் மீது ஊர்ந்தருளுகின்ற சிவபெருமான் தங்களை வலம் வந்து வணங்க, சிறந்த ஞானமாகிய மெய்யுணர்வினால் அறியத் தக்கதை செம்மையாக உபதேசித்த, குருபரரே! சே (sE) : bull; சேவு + ஏறும் = சேவேறும் ; சேவு=ஊழியம், கைங்கர்யம்: சிவபெருமானின் ஊர்தியாகத் (வாகனம்) தொண்டு புரிவதால் நந்தியைக் குறிக்கும். சேவு= வீரம், கம்பீரம்; காளையை இந்த இரு குணங்கள் உடைத்ததாகக் கூறுதல் கவி மரபு.

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா ( thErArgaL nAdu sutta sUrArgaL mALa vettu dheerA) : You slashed to death the asuras who burnt the land of DEvAs.Oh valorous One, GuhA, தங்கட்குப் பகைவர்களாகிய தேவர்களுடைய சுவர்க்க உலகத்தைக் கொளுத்தி துன்பஞ் செய்த சூரபதுமனாதி அசுரர்கள் இறந்தொழிய வெட்டித் துணித்த தீரரே! தேரார்கள் (thErArgaL) : தேரார்கள் = ஆராய்ந்து அறியாதவர்கள்; சிவபெருமானை அவமதிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பெற்ற தக்ஷ யாகத்தில் தேவர்கள் அந்த தகாத செயலை சிறிதும் ஆராயாது பங்கேற்றனர்.

குகா குறத்தி மணவாளா (dheerA guhA kuRaththi maNavALA) : You married VaLLi, the damsel of KuRavAs.

காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே (kavAr suvAmi veRpin murugOnE) : On the northern bank of River KAveri, there are tanks with fragrant flowers; and plenty of groves at SwAmimalai, which is Your abode, Muruga. கா ( kaa ) : groves; வாவி (vaavi) : tanks;

கார் போலும் மேனி பெற்ற மா காளி வாலை சத்தி காம ஆரி வாமி பெற்ற பெருமாளே.(kAr pOlu mEni petra mAkALi vAlai saththi kAmAri vAmi petra perumALE.) : You are the son of MahA KALi, with the complexion of dark clouds, Ever young Sakthi, and who dwells on the left side of SivA (who burnt down Manmathan), Oh Great One! காமாரி வாமி ( kAmAri vAmi) : One who occupies the left part of one who burned Kama or Manmatha, Shakti; வாலை (valai ) : youthful;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே