Posts

Showing posts from October, 2015

வேல் விருத்தம் 10 : வலாரி அலலாகுலம்

ராகம் : மத்தியமாவதி தாளம் : கண்டசாபு வலாரியல லாகுலமி லாதகல வேகரிய மாலறியு நாலு மறைநூல் வலானலை விலானசி விலான்மலை விலானிவர் மநோலய உலாசம் உறவே உலாவரு கலோலம கராலய சலங்களும் உலோகநிலை நீர்நிலையிலா வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல் உலாவிய நிலாவு கொலைவேல் சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச னாசின சிலாத ணிவிலா சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய சேவக சராப முகிலாம் விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை மேவிய விலாச அகலன் விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு வேழம்இளை ஞன்கை வேலே.

மயில் விருத்தம் – 9 : சிகர தமனிய

ராகம் : துர்கா தாளம் : கண்டசாபு சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல கிரியெனவும் ஆயிரமுகத் தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண் திங்கள்சங் கெனவும்ப்ரபா நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய நின்றமா முகில் என்னவே நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு நீலக் கலாப மயிலாம் அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள் அடியவர்கள் மிடிய கலவே அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில் அலங்கற் குழாம் அசையவே மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய வல்லவுணர் மனம்அசைய மால் வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய வையாளி யேறு மயிலே.

வேல் விருத்தம் – 9 : தேடுதற்கு அரிது

ராகம் : துர்கா தாளம் : கண்டசாபு தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு செங்கரனை யமுதம் வாய்கொள் செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து சேவடி பிடித்ததெனவும் நீடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும் நீயெமைக் காக்க எனவும் நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும் நிகழ்கின்ற துங்கநெடுவேல் ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற் றடலெரிக் கொடிய உக்ர அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக் கரசினைத் தனியெடுத்தே சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற் றாய்திமித் துடனடிக்குஞ் சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன் சண்முகன் தன்கை வேலே.

மயில் விருத்தம் – 8 : செக்கர் அளகேச

ராகம் : மாண்டு தாளம் : கண்டசாபு செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை சிந்தப் புராரி யமிர்தந் திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள் தீவிஷங் கொப்புளிப்பச் சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல சங்கார கோர நயனத் தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு சண்டப்பர சண்டமயிலாம் விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய விருத்தன் திருத்த ணிகைவாழ் வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை வெளிப்பட வுணர்த்தி யருளித் துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச் சுவாமிவா கனமா னதோர் துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

வேல் விருத்தம் – 8 : மாமுதல் தடிந்து

ராகம் : மாண்டு தாளம் : கண்டசாபு மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய் வலியதா னவர்மார்பிடம் வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு மகவான் தனைச்சி றைவிடுத் தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில் உம்பர்சொற் றுதிபெற்றுநா உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில் ஒப்பில்புகழ் பெற்ற வைவேல் சோமகல சப்ரபா லங்கார தரஜடா சூடிகா லாந்தகாலர் துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல துரககே சரமாம்பரச் சேமவட வாம்புயப் பரணசங் காபரண திகம்பர த்ரியம்பகமகா தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன் செம்பொற் றிருக்கை வேலே.

மயில் விருத்தம் – 7: தீரப் பயோததி

ராகம் : பீம்பளாஸ் தாளம் : கண்டசாபு தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ் செகதலமு நின்று சுழலத் திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத் தீக்கொப் புளிக்க வெருளும் பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம் பதைபதைத் தேநடுங்கப் படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு பச்சைப்ர வாள மயிலாம் ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர அமிர்தகல சக்கொங் கையாள் ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர மாநந்த வல்லி சிறுவன் கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார குருதரு திருத்தணி கைவேள் கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி குடிபுகுத நடவு மயிலே.

வேல் விருத்தம் – 7 : அண்டங்கள் ஒருகோடி

ராகம் : பீம்பளாஸ் தாளம் : கண்டசாபு அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி அநந்தமா யினுமேவினால் அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல் அறியாது சூரனுடலைக் கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங் கடியகொலை புரியு மதுசெங் கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக் கடுக்கின்ற துங்க நெடுவேல் தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட தானவாந் தகன்மாயவன் தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத் தமனியச் சுடிகையின் மேல் வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை மங்கையும் பதம்வருடவே மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன் வாகைத் திருக்கை வேலே.

மயில் விருத்தம் – 6 : சங்கார காலம்

ராகம் : சிந்துபைரவி தாளம் : கண்டசாபு சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச் சகல லோகமு நடுங்கச் சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ் சஞ்சலப் பட உமையுடன் கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த காரம் பிறந்திட நெடுங் ககனகூட முமேலை முகடுமூ டியபசுங் கற்றைக் கலாப மயிலாஞ் சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள சித்ரப் பயோ தரகிரித் தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன் திருத்தணிமகீரதன் இருங் கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய க்ருபாகரன் கார்த்தி கேயன் கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி கிழிபட நடாவு மயிலே.

வேல் விருத்தம் – 6 : பந்தாடலில்

ராகம் : சிந்துபைரவி தாளம் : கண்டசாபு பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல் பாடலினொ டாடலின்எலாம் பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு பாலித்த திறல் புகழ்ந்தே சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும் சசிமங்கை அனையர்தாமுந் தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும் தலைமையும் பெற்ற வைவேல் மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய மந்த்ரஉப தேச நல்கும் வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார வாரணக் கொடி உயர்த்தோன் கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங் குவளையுஞ் செங்காந்தளுங் கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன் கோலத் திருக்கை வேலே.

மயில் விருத்தம் – 5 : சோதியிம வேதண்ட

ராகம் : பாகேஸ்வரி தாளம் : கண்டசாபு சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி நயதுல்ய சோம வதன துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம சுந்தரி பயந்த நிரைசேர் ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள் யாவுங் கொடுஞ்சி றகினால் அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே அணைக்குங் கலாப மயிலாம் நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு கிரியாம் நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியா குலன்சங் குவாள் மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன் மாதவன் முராரி திருமால் மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன் வரமுதவு வாகை மயிலே.

வேல் விருத்தம் – 5 : ஆலமாய் அவுணருக்கு

ராகம் : பாகேஸ்வரி தாளம் : கண்டசாபு ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய் ஆதவனின் வெம்மைஒளிமீ தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென் றமைந்தன்ப ருக்கு முற்றா மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை முடித்திந்தி ரர்க்கு மெட்டா முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த மூதண்ட மும்புகழும் வேல் ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து மின்பணைக ளுமிழு முத்தும் இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம் இலவங்க நறவமாருந் தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர் தருவநிதை மகிழ்நன் ஐயன் தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன் சரவணக் குமரன் வேலே.

மயில் விருத்தம் – 4 : யுக கோடி

ராகம் : மனோலயம் தாளம் : ஆதி யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம் உதித்ததென் றயன் அஞ்சவே ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள லோகமும் பொற்குவடுறும் வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு விசும்பிற் பறக்க விரிநீர் வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை வீசிப் பறக்கு மயிலாம் நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர கேசரி முராரி திருமால் நாரணன் கேசவன் சீதரன் தேவகீ நந்தனன் முகுந்தன் மருகன் முககோடி நதிகரன் குருகோடி அநவரதம் முகிலுலவு நீலகிரிவாழ் முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட மூரிக் கலாப மயிலே.

வேல் விருத்தம் – 4: அண்டர் உலகும்

ராகம் : மனோலயம் தாளம் : ஆதி அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல அங்கியும் உடன்சுழலவே அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல அகிலதல முஞ்சுழலவே மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர மாணப் பிறங்கியணியும் மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம வகைவகையி னிற்சுழலும் வேல் தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய சந்தமுட னும்பிறைகள்போல் தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு தன்புறம் வருஞ்சமனையான் கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண கஞ்சம்உத வுங்கருணைவேள் கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி கணவன் அடல் கொண்ட வேலே.

மயில் விருத்தம் – 3 : ஆதார பாதாளம்

ராகம் : சாரங்கா தாளம் : கண்டசாபு ஆதார பாதாளம் பெயரஅடி பெயரமூ தண்டமுக டதுபெயரவே ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி கவுட்கிரி சரம்பெயரவே வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார் மிக்கப் ரியப்படவிடா விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம் மாதாநு பங்கியெனு மாலது சகோதரி மகீதரி கிராத குலிமா மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த வள்ளிமணி நூபுர மலர்ப் பாதார விந்தசே கரனேய மலரும்உற் பலகிரி அமர்ந்த பெருமாள் படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப் பசுந்தோகை வாகை மயிலே.

வேல் விருத்தம் – 3 : வேதாள பூதமொடு

ராகம் : சாரங்கா தாளம் : கண்டசாபு வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும் வெகுளுறு பசாசகணமும் வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில் வெம்பசி ஒழிக்கவந்தே ஆதார கமடமுங் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரியெலாம் அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை அருந்திப் புரந்தவைவேல் தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை தனிப்பரங் குன்றேரகம் தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி தடங்கடல் இலங்கைஅதனிற் போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப் புகழும்அவ ரவர்நாவினிற் புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன் புங்கவன் செங்கை வேலே.

மயில் விருத்தம் – 2 : சக்ர ப்ரசண்டகிரி

ராகம் : மோகனம் தாளம் : கண்ட சாபு சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி பட்டுக் ரவுஞ்ச சயிலந் தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு தனிவெற்பும் அம்புவியும் எண் திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு சித்ரப் பதம்பெயரவே சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம் பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி பத்மப் பதங் கமழ்தரும் பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய பரம உபதேசம் அறிவிக் கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு கந்தச்சுவாமி தணிகைக் கல்லார கிரியுருக வருகிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே. Learn The Song

வேல் விருத்தம் – 2 : வெங்காள கண்டர்

ராகம் : மோகனம் தாளம் : கண்ட சாபு வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும் விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி வெல்லா எனக்கருதியே சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ் சதுர்முகனும் நின்றிரப்பச் சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே தனிஆண்மை கொண்ட நெடுவேல் கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கெளமாரி கமலாசனக் கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை கெளரிகா மாக்ஷிசைவ சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி த்ரியம்பகி அளித்த செல்வச் சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன் செம்பொற் றிருக்கை வேலே. Learn The Song

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே