வேல் விருத்தம் – 4: அண்டர் உலகும்
அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
அங்கியும் உடன்சுழலவே
அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
அகிலதல முஞ்சுழலவே
மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
மாணப் பிறங்கியணியும்
மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
வகைவகையி னிற்சுழலும் வேல்
தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
சந்தமுட னும்பிறைகள்போல்
தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
தன்புறம் வருஞ்சமனையான்
கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சம்உத வுங்கருணைவேள்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே.
Learn The Song
Paraphrase
அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல அங்கியும் உடன் சுழலவே (aNdar ulagum suzhala eN dhisaigaLum suzhala angiyum udan suzhalavE): The world of celestials spun; the eight directions of the earh spun and along with them, the god of Fire spun too; அங்கி (angi ): fire;
அலை கடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல அகில தலமும் சுழலவே (alai kadalgaLum suzhala avuNar uyirum suzhala akila thalamum suzhalavE): The wavy seas spun; the lives of the demons spun, as also the entire cosmos;
மண்டலம் நிறைந்த ரவி சத கோடி மதி உதிரம் மாணப் பிறங்கி அணியும் மணி ஒலியினில் சகல தலமும் மருளச் சிரம வகை வகையில் சுழலும் வேல் (maNdala niRaindha ravi sathakOti madhi udhira maaNap piRangi aNiyum maNi oliyiniR sakala thalamu maruLa sirama vagai vagaiyiniR suzhalum vEl): (the vel) Appearing like the millions of spherical suns and moons amidst the gushing blood of the asuras and scaring all the worlds with the sound of its tinkling bells, Murugan's vel practices its spins in a variety of ways;வட்ட வடிவம் பூரணமாயுள்ள சூரியன், நூறுகோடி சந்திரன், இவைகளின் நிறமும் ஒளியும் கொண்டு அசுரர்களின் ரத்தம் நிறைந்து விளங்க, அணிந்துள்ள மணிகளின் ஒளியில் எல்லா உலகங்களும் அச்சம் கொள்ள ஆயுதப் பயிற்சி செய்யும் வகையில் சுழன்று செல்லும் வேல் (எது என கேட்டால், அது
தண்டமுடனும் கொடிய பாசமுடனும் கரிய சந்தமுடனும் பிறைகள் போல் தந்தமுடனும் (dhaNdam udanum kodiya paasam udanum kariya chandham udanum piRaigaL pOl dhantham udanum ): With dhandayudha, noose of attachment (pasakayiru), dark complexion, and crescent-moon like teeth,
தழலும் வெம் கணுடனும் பகடு தன் புறம் வருஞ் சமனை (thazhalum venkaN udanum pagadu than puRam varum samanai): with fiery and fierce eyes and riding on the bull, when the Yama approaches, பகடு (pagadu): male buffalo; bull;
யான் கண்டு குலையும் பொழுதில் அஞ்சல் என மென்சரண கஞ்சம் உதவும் கருணைவேள் ( yaan kaNdu kulaiyum pozhudhil anjalena mencharaNa kanjam udhavum karuNaivEL): seeing which I get agitated, You are the benevolent Lord who offers me His soft, lotus-like feet, asking me not to fear. கஞ்சம் (kancham): lotus;
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம் புதல்வி கணவன் அடல் கொண்ட வேலே.(kandhan murugan kumaran vaN kuRavar tham pudhalvi kaNavan adal koNda vElE): He is Kanthan, Murugan, Kumaran and the consort of the daughter of the fierce hunter; the vel in His hands is the weapon whose power is described in the first half of the poem.
Comments
Post a Comment