வேல் விருத்தம் – 8 : மாமுதல் தடிந்து
மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்
வலியதா னவர்மார்பிடம்
வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு
மகவான் தனைச்சி றைவிடுத்
தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில்
உம்பர்சொற் றுதிபெற்றுநா
உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில்
ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்
சோமகல சப்ரபா லங்கார தரஜடா
சூடிகா லாந்தகாலர்
துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல
துரககே சரமாம்பரச்
சேமவட வாம்புயப் பரணசங் காபரண
திகம்பர த்ரியம்பகமகா
தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன்
செம்பொற் றிருக்கை வேலே.
Learn The Song
Paraphrase
மா முதல் தடிந்து தண் மல்கு கிரி ஊடு போய் வலிய தானவர் மார்பு இடம் வழி கண்டு (maamudhal thadindhu thaN malkugiri yoodu pOy valiya dhaanavar maarbidam vazhi kaNdu ) : The vel destroyed Surapadman, who was in the form of a mango tree, penetrated the cool seven mountains and split and passed through the chests of the asuras who lived in it; முதல்வனாய் நின்று மா மரமாய் மாறின சூரபத்மனை அழித்து, குளிர்ந்த ஏழு மலைகளையும் ஊடுருவிச் சென்று அந்த மலைகளில் வசித்த அசுரர்களின் வலிய மார்பினை பிளந்து அப்புறமாகச் சென்றும்,, மல்கு கிரி(malgu giri) : cluster of mountains; மல்குதல் = அதிகமாகுதல்;
கமல பவனத்தனை சிறையிட்டு மகவான் தனை சிறை விடுத்து (kamala bavanaththanai siRaiyittu magavaan thanai siRaividuththu) : imprisoned Lord Brahma who is seated on the lotus flower and released Indra, கமல பவனத்தன்(kamala bhavanththan) : one who lives in the lotus; Brahma; மகவான் (magavan) : indra;
முருகனுடைய வேல் யாகங்கள் செய்யும் முனிவர்களின் வாழ்த்தும் சொர்க்கத்தில் தேவர்களின் துதிகளும் நா வன்மை உடைய கீரனின் துதி பாடல்களளையும் பெற்றது.
ஓம இருடி தலைவர் ஆசி பெற்று உயர் வானில் உம்பர் சொல் துதி பெற்று (Oma irudith thalaivar aasi petru uyarvaanil umbar sol thudhi petru) : received the blessings of sages who perform yagnas and the benedictions of celestials in the heaven; இருடி = ரிஷி;
நா உடைய கீரன் தனது பாடல் பெற்று உலகுதனில் ஒப்பு இல் புகழ் பெற்ற வை வேல் (naa udaiya keeran thanadhu paadal petrulagu thanil oppil pugazh petra vaivEl) : This sharp vel has also received the songs of the eloquent Nakkeeran and has got unprecedented and incomparable fame;
This vel belongs to Murugan whose father is Shiva, described below.
சோம கலச ப்ரபா அலங்கார தர ஜடா சூடி காலாந்த காலர் (sOma kalasa prabaa lankaara dhara jataa soodi kaalaantha kaalar) : Lord Shiva who wears on His tresses cup-like, radiant, crescent moon, who is like Yama to Yama himself; ஒளிவீசும் கிண்ணம் போன்ற பிறைச் சந்திரனை அலங்காரமாக ஜடா முடியில் தரித்துள்ளவரும், எமனுக்கு எமனாக மரணத்தை விளைவிப்பவரும், சோம கலச (soma kalasa) : crescent moon shaped like a kalasa; கால அந்த காலர்(kaalaantha kaalar) : காலனுக்கு அந்த காலத்தின் முடிவு வேளையை காட்டுவித்தவர், காலனை அழித்த சிவன்;
துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசம் சூலம் (thunga rakshaka dhrONa katga kulisanchoola) : He has the pristine bow that can protect the world; He holds a sword and Vajrayudha; பரிசுத்தம் வாய்ந்து உலகை பாதுகாக்கும் வில், வாள், வஜ்ராயுதம், சூலம் இவைகளைக் கொண்டுள்ளவரும் துரோணம் (durOnam ) : bow;
துரக கேசரம் அம்பரம் சேம வடவா அம்புயம் பரண ( thuraga kEsaram sEma vadavaambuyap baraNa ) : He takes the vadavamukhagni that appears like a horse but has the majesty of a lion and holds the sea as the abhishekam water; குதிரை முகத்துடன் சிங்கம் போன்று கடலிலே (கடல் கரை கடவாதபடி) வடவா முகாக்னியை திருமஞ்சன நீராக தாங்குபவரும்; அம்புயம் என்றால் தாமரை, ஏனென்றால் அம்பு என்பது அப்பு; அம்புஜம்/அம்புயம் நீரில் பிறப்பதால் தாமரையை குறிக்கும். இங்கு சிவபெருமான் வடவாக்னியை (அபிஷேக) நீராக தாங்குவதை குறிக்கும். கேசரம் (kesaram ) : like a lion; அம்பரம் (ambaram) : sea ; சேமம் (sEmam) : well-being;
சங்கு ஆபரண (sangu aabaraNa ) : He wears white conch on His ears;
திகம்பர த்ரியம்பக (dhigambara thriyambaka) : He wears the directions as His dress; He has three eyes;
மகா தேவ நந்தன கஜாநந சகோதர குகன் செம்பொன் திருக்கை வேலே.( mahaa dhEva nandhana gajaanana sahOdhara guhan sempon tirukkai vElE) : Muruga is the son of Mahadeva (described in the above lines); He is the brother of elephant-faced Vinayaka; He holds the vel in His golden hands;
Comments
Post a Comment