மயில் விருத்தம் – 9 : சிகர தமனிய
சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல
கிரியெனவும் ஆயிரமுகத்
தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண்
திங்கள்சங் கெனவும்ப்ரபா
நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய
நின்றமா முகில் என்னவே
நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு
நீலக் கலாப மயிலாம்
அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள்
அடியவர்கள் மிடிய கலவே
அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
அலங்கற் குழாம் அசையவே
மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய
வல்லவுணர் மனம்அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய
வையாளி யேறு மயிலே.
Learn The Song
Paraphrase
சிகர தமனிய மேருகிரி ரசதகிரி நீல கிரி எனவும் (sikara dhamaniya mErugiri rajathagiri neela giri enavum) : Appearing like the Meru mountain with golden peaks, the Kailasa mountain, and the ThiruththaNigai mountain where the blue neelotpala flowers abound, தமனிய (dhamaniya) : golden; ரசதகிரி(rasathagiri) : silver mountain;
ஆயிரமுகத் தெய்வநதி காளிந்தி என நீழல் இட்டு வெண் திங்கள் சங்கு எனவும் ( aayiramuka dheyvanadhi kaaLindhi ena neezhalittu veNnthingaL sanku enavum) : (appearing also) like the thousand-pronged Ganges, the dark Yamuna, the radiant white moon-like conches, தெய்வ நதி (deiva nathi) : Ganges river; காளிந்தி (kaalinthi) : Yamuna river; திங்கள் (thingaL) : moon;
ப்ரபா நிகர் எனவும் (prabaa nigar enavum ) : like the prabhai or tiruvachchi (Ornamental arch behind the figure of a deity),
எழுதரிய நேமி என உலகடைய நின்ற மாமுகில் என்னவே (ezhudhariya nEmi ena ulagadaiya nindra maa mugil ennavE) : like a circular wheel that is difficult to draw; like the huge clouds that fill the earth; எழுதுவதற்கு அரிதான வட்ட வடிவமான சக்ரம் போலவும், உலகம் முழுவதும் பரந்திருக்கும் பெரிய மேகக் கூட்டம் போலவும், நேமி (nEmi) : circular, wheel; முகில் (mugil) : clouds;
நெடிய முது ககன முகடு உற வீசி நிமிரும் ஒரு நீலக் கலாப மயிலாம் ( nediyamudhu gagana mugaduRa veesi nimirum oru neelak kalaaba mayilaam) : spreading its plumes across the long and old universe reaching upto its crest/peak is the unique peacock. நீண்ட பழமையான அண்டத்தின் உச்சி வரையிலும், தோகையை வீசி நிமிர்ந்திருக்கும், ஒப்பற்ற, நீல நிறத் தோகையைக் கொண்ட மயில்
அகரு மருமணம் வீசு தணிகை அபிராம வேள் (Fragrant with agil and marukkozhunthu, the handsome lord of Thiruththanigai) : Fragrant with agil and marukkozhunthu, the handsome lord of Thiruththanigai
அடியவர்கள் மிடி அகலவே (agaru maru maNam veesu thaNigai abiraama vEL adiyavargaL midi agalavE) : To remove the poverty of His devotees,
அடல் வேல் கரத்தசைய (adal vEl karaththasaiya) : moving the hands that hold the powerful vel
ஆறிரு புயங்களில் அலங்கற் குழாம் அசையவே (aaRiru buyangaLil alangaR kuzhaam asaiyavE) : which moves the garlands that adorn the twelve arms,
மகர கன கோமளம் குண்டலம் பல அசைய (makaragana kOmaLa kuNdalam pala asaiya) : and the beautiful kundalams on the fish-shaped and golden ears,
வல் அவுணர் மனம் அசைய ( vallavuNar manam asaiya ) : shaking the hearts of the strong asuras,
மால் வரை அசைய உரகபிலம் அசைய எண் திசை அசைய வையாளி ஏறு மயிலே.(maal varai asaiya urakapilam asaiya eNdisai asaiya vaiyyaLi ERu mayilE) : and making the Krauncha Giri that is the manifestation of illusion and stupor tremble, the nether world and the eight cardinal directions shake when the peacock gallops. மால் (maal) : illusion, stupor, lust, mayakkam, kamam; பிலம் (pilam) : infernal regions, patalam; வையாளி (vaiyaaLi) : gallop of a horse; here, horse-like peacock;
Comments
Post a Comment